05/06/2026

நட்டமடையும் இலங்கை

 

இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ போன்ற பிரதான அரச நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ஏன் இவ்வளவு பாரிய நட்டத்தைச் சந்தித்தன என்பதைப் புரிந்துகொள்ள, அவற்றின் பின்னணியில் உள்ள கட்டமைப்பு, கொள்கை மற்றும் செயல்பாட்டு மாற்றங்களை ஆராய வேண்டும்.

​ஒவ்வொரு நிறுவனமும் இந்த நிதி வீழ்ச்சியைச் சந்தித்ததற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

​1. இலங்கை மின்சார சபை (CEB) வீழ்ச்சிக்கான காரணங்கள்

​2024 இல் ரூபா 141,605 மில்லியன் இலாபத்தில் இருந்த மின்சார சபை, 2025 இல் ரூபா 38,740 மில்லியன் நட்டமடைந்ததற்கு மூன்று பிரதான காரணங்கள் உள்ளன:

  • மின் கட்டணக் குறைப்பு (Tariff Reductions): 2024 ஆம் ஆண்டில் பொதுமக்களின் சுமையைக் குறைப்பதாகக் கூறி பல தடவைகள் மின் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. ஆனால், அதற்கேற்ப மின் உற்பத்திக்கான செலவு குறையவில்லை. இதனால் நிறுவனத்தின் வருவாய் (Revenue) நேரடியாகப் பாதிக்கப்பட்டது.
  • வறட்சியான காலநிலை மற்றும் நிலக்கரி/எரிபொருள் செலவு: 2025 இல் நீர்மின் உற்பத்தி (Hydro Power) எதிர்பார்த்த அளவு கிடைக்காத காலப்பகுதிகளில், செலவு கூடிய நிலக்கரி மற்றும் அனல்மின் நிலையங்களை (Thermal Power) நம்பியிருக்க வேண்டியேற்பட்டது. உலக சந்தையில் எரிபொருள் வில மாறுதல்களும் இதன் செலவை அதிகரித்தன.
  • அரசியல் கொள்கை மாற்றம்: ஆட்சி மாற்றத்திற்குப் பின் மின்சார சபையின் மறுசீரமைப்பு (Restructuring) மற்றும் தனியார்மயமாக்கல் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், அதன் உள்ளக நிர்வாகச் செலவுகள் மற்றும் கடன்களுக்கான வட்டி வீதம் (Debt Servicing) தொடர்ந்து சுமையாகவே இருந்தது.

​2. ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ (SriLankan Airlines) நட்டம் அதிகரிக்கக் காரணம்

  • அதிகரித்த குத்தகை மற்றும் வட்டிச் செலவுகள் (Lease & Interest Costs): ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் மிக முக்கியமான பிரச்சினை, அது வாங்கியுள்ள விமானங்கள் மற்றும் அதற்கான மாதாந்த குத்தகைச் செலவுகள் (Aircraft Leasing) அனைத்தும் அமெரிக்க டொலர்களில் செலுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
  • நாணயத் தளம்பல் (Exchange Rate Volatility): டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட தளம்பல்கள், இந்த டொலர் கடன்களின் மதிப்பை உள்நாட்டில் பல மடங்காகக் காட்டியது.
  • மறுசீரமைப்புத் தாமதம்: இந்த நிறுவனத்தை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் அல்லது கூட்டுப் பங்கான்மையாக (Privatization) மாற்றும் முயற்சிகள் அரசியல் காரணங்களால் இழுபறியானதால், திறமையற்ற நிர்வாக முறையே தொடர்ந்தது.

​3. ஏனைய நிறுவனங்களின் (சதொச, சீனி கூட்டுத்தாபனம், விவசாயக் காப்புறுதி) நட்டங்கள்

  • மானிய விலைகளும் விலைக்கட்டுப்பாடும் (Subsidies & Price Controls): சதொச (Sathosa) போன்ற நிறுவனங்கள் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்ற அரசியல் கொள்கையினால், சந்தை விலையை விடக் குறைத்து விற்றதால் ஏற்பட்ட நட்டத்தை அரசு ஈடுசெய்யவில்லை.
  • விவசாயத் துறைப் பாதிப்புகள்: காலநிலை மாற்றம், உரம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் காரணமாக விவசாயக் காப்புறுதிச் சபைக்கு வருமானத்தை விட இழப்பீடுகள் (Claims) அதிகமாக வழங்க வேண்டியிருந்தது.
  • அரச ஊடகங்களின் (ரூபவாஹினி/ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வீழ்ச்சி: நவீன டிஜிட்டல் ஊடகப் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமை, அதீத ஊழியர் பட்டாளம் மற்றும் வர்த்தக விளம்பர வருமானக் குறைவு என்பன இவற்றைத் தொடர்ந்து நட்டத்திலேயே இயங்க வைக்கின்றன.

​🏛️ கட்டமைப்பு ரீதியான பொதுவான காரணங்கள் (Macro Structural Issues)

​அரசாங்கம் யாரினுடையதாக இருந்தாலும், இலங்கையின் அரச நிறுவனங்கள் நட்டமடைவதற்குப் பின்வரும் பொதுவான காரணங்கள் தடையாக உள்ளன:


04/06/2026

ஆடை பாதி ஆள் பாதி


 செல்லும் இடங்களில் ஒரு தனி மரியாதையும் தானாகவே கிடைத்தது.


​இன்றைய 'மாடல்' என்ற பெயரில்... 🤦‍♂️


ஆனால் இன்று, கலைந்துபோன தலைமுடி, கொண்டை, கறையான் அரித்தது போலவும் சோழகக் காற்றின் தூசியில் சிக்கியது போலவும் கிழிந்த டி-சர்ட்டுகள், கிழிந்த கால்சட்டைகள் (Ripped Jeans)... இதுதான் இன்றைய 'மாடல்' என்று உலா வருகிறார்கள். இப்படிப்பட்ட தோற்றத்துடன் வரும்போது, அவர்கள் தங்களுடைய நண்பர்கள் வட்டாரத்தில் வேண்டுமானால் 'கெத்தாக' தெரியலாம். ஆனால், ஒரு முக்கியமான பொது நிகழ்வுகளிலோ அல்லது மேடைகளிலோ அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதுதான் யதார்த்தம்.

​மேடை நாகரிகம் முக்கியம்! 🎤🏛️


ஒரு பொது மேடையில் ஏறிப் பாடுவதற்கோ அல்லது ஒரு பொது நிகழ்வில் விளக்கேற்றுவதற்கோ கூட ஒரு ஒழுக்கமான தோற்றம் தேவைப்படுகிறது. அங்கு ஆடையும், தலைமுடி அலங்காரமும் உற்று நோக்கப்படுகின்றன. முக்கால் ஜம்பர் (Three-quarters) மற்றும் விளையாட்டு ஜெர்சி (Jersey) அணிந்து கொண்டு பொது நிகழ்வுகளின் மேடைகளில் ஏறுவது பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. (கால்பந்து போட்டி போன்ற விளையாட்டு மைதானங்கள் இதற்கு விதிவிலக்கு!)


​பெரிய சினிமா நட்சத்திரங்களாக இருந்தாலும், விளையாட்டு வீரர்களாக இருந்தாலும், ஒரு பொது நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் எவ்வளவு கண்ணியமான ஆடைகளுடன் வருகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


​"மை கார்... மை பெட்ரோல்..." எல்லா நேரமும் சரிவராது! 🚗💨


"இது என் பணம், என் உழைப்பு, என் கார், என் பெட்ரோல்... நான் அப்படித்தான் இருப்பேன்" என்று தனிமனித சுதந்திரம் பேசலாம். ஆனால், சமூகம் என்று வந்துவிட்டால் நாம் சில ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். கண்மூடித்தனமாக ஓடினால் வண்டி ஏதோ ஒரு சந்தில்தான் முட்டும்!


​நமது தனிப்பட்ட விருப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், நாம் வாழும் சமூகத்திற்காகவும், நம் கலாசாரத்திற்காகவும் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒழுக்கம் என்பது நாம் எப்போதுமே கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!


 👍💯


​உங்கள் கருத்து என்ன? கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்!👇


​#SocialAwareness #DressCode #Discipline #TamilPost #Culture #LifeLessons #TrendingTamil #




26/03/2024

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை.



இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இதனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றால் காட்டில் அல்லது நீர் நிலையில் வாழும் உயிரினங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சவாலை போல மாறிவிடலாம்.

வலியார் வாழ எளியார் பலியாகும் நிலைக்கு தள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது இன்று பணம், பதவி, செல்வாக்கு போன்றவற்றால் நடைபெறுகின்றன. நீர் நிலை ஒன்றில் வாழும் ஒரு மீன் பெரியமீன்களிடமும் பாதுகாப்பை தேட வேண்டும், மனிதனிதனிடம் தேட வேண்டும், உணவுக்கு போராட வேண்டும், அதே வேளை மீன் கொத்தி கழுகு போன்றவற்றிடம் இருந்தும் பாதுகாப்பை தேட வேண்டும். அவை மீன்கள் 3 அறிவு கொண்டவை. அதனால் அவற்றின் வாழ்க்கை ஒன்றிணைய எதிர் கொள்ள அறிவி போதாது.


தற்போது இந்த சிந்தனையில் பலர் மிக மோசமனா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை சமூகம் இணைந்து எதிர்க்கவேண்டும், மாறாக எல்லோரும் பயப்பிடுகிறார்கள், பயப்பிடாத துறை என யாருமில்லை. அதைவிடவும் அதிகமாக இரக்கமும் பார்க்கிறார்கள். இதனை வைத்து பிழைப்போர் சமூகத்தை தறிகெட்ட நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள்.


எந்த ஒரு நிலையிலும் தம் இரக்கம் இழக்கதா சிலர் எவ்வளவு மோசமான துன்பத்தை அனுபவித்தாலும் பிறழ்வானோருக்கு ஆதராவக இருப்பது அதன் தாற்பரியம் புரியவில்லை. 


இதை எல்லாம் தாண்டி வாக்கு அரசியல் செய்யும் பலர் சட்டத்தரணிகாளாக இருந்து இந்த சமூக விரோத செயற்பாட்டை ஊக்குவிக்கிறார்கள். இதனால் வருமானமும் அவர்களுக்கு ஒரு செல்வாக்கும் அரசியாலில் தோல்வியுற்றால் அதனை விசுவாசத்தின் அடிப்படையில் ஒன்றுமே செய்ய முடியாத ஆனால் செய்வார்கள் எனும் நிலைபபட்டில் மேற்கொள்கிறார்கள்.


இங்கே பிரசுரிக்கும் படம் சொல்லும் செய்தி இதுதான். நாம் சிலவற்றை தடுக்கா விட்டால் எதிர்காலத்தில் மிகமோசாமான ஒரு நிலையில் வாழ எம் சமூகத்தை தள்ளியே தீருவோம்.


விழிப்படைந்து விட்டால் எங்கள் வீடு எங்கள் ஊர் என்பவற்றை சீர் தூக்கி பார்த்தா போதும் அதற்காக தவறுகை வெளிக்கொண்டு வந்தாலே போதும். அதை செய்ய கூட யாரும் முன்வரவில்லை. 


எப்படி வெளிப்படுத்தலாம் எனும் போது சின்ன கடிதம் போதும். பெயர் விபரம் எழுதி பொலிஸ்மா அதிபர்களுக்கு, சுப்பிரிண்டன் பொலிசார்களுக்கு அனுப்பினால் போதும் நடவடிக்கைகள மிகவும் தீவிராமாக எடுபடும். 

https://youtu.be/cSh9zrK9ki0?si=iuAWWqFYkhBqoy6A

#சமூகம். #தீவிரம் # 

canada​ #trending​ #jaffna​ #jaffnayoutubers​ #visitorvisa #candavisa #workvisa #candajob #canadaworkvisa #shortsfeed​ #akkuddi​ #pichumani​ #comedy​ #shortvideo​ #akkuddipichumani​ #வெளிநாட்டுக்கு​ #trending​ #canada​ #canadanews​ #canadian​ #viralshorts​ #canadavisa​ #canadalife​ #london​ #francelifestyle​ #londonlifestyle​ #canadalife​ #jaffna​ #jaffnayoutubers​ #jaffnalifestyle​ #canada​ #shortsfeed​ #akkuddi​ #pichumani​ #வெளிநாட்டிலிருந்து​ #akkuddi​ #pichumani​ #பகிடி​ #பிச்சுமணி​ #அக்குட்டி​ #shorts​ #trending​ #trendingvideo​ #jaffna​ #kajan​ #sulax​ #நகைச்சுவை​ #Comedy​ #clown​ #clowns​ #humor​ #tamil​ #srilanka​ #tamilcomedy​ #actor​ #actress​ #acting​ #drama​ #srilankanews​ #tamilnews​ #pichu​ #comedy​ #அக்குட்டி​ #பிச்சுமணி​ #comedy​ #pichumani​ #jaffna​ #trending​ #drama​ #akkuddi​ #shorts​ #Ashani​ #shortsfeed​ #valvaisulax​ #jaffnalifestyle​ #canda​ #london​ #ashani​ #canada​ #canda​ #canadanews​ #நல்லூர்​ #trending​ #shortvid,,,,, eo​ #jaffna​ #valvaisulax​ #jaffnalifestyle​ #jaffnayoutubers​ #canada​ #shortsfeed​ #srilankanewstamiltoday​ #வல்வெட்டித்துறை​ #valvettithurai​ #valvaisulax​ #jaffna​ #trending​ #valvaisulax​ #shortvideo​ #jaffnayoutubers​ #srilanka​ #vvt​ #valvettithurai​ #trending​ #valvaisulax​ #jaffnayoutubers​ #shortvideo​ #jaffna​ #canada​ #srilankanewstamiltoday​ #canadanews​ #travel​ #shortsfeed​ #traditional​ #shorts​ #யாழ்ப்பாணம்​ #யாழ்​ #யாழ்செய்திகள்​ #kajan​ #canada​ #Foreignlife​ #qatarlife​ #viral​ #tamil​ #foreignlife​

’#பவுன்சர்கள்புடைசூழ #மகனுடன்  #தனுஷ்.. #மனைவி #ஜெயம்ரவி..’ #தலதோனியை #பாக்க #சேப்பாக்கத்தில் #அடுத்தடுத்து #திரளும் #திரை #பிரபலங்கள்..!

#IPLLiveUpdates | #Chennai | #CSK | #RCB | #CSKvsRCB | #IPL2024 | #IPLUpdates | #MSD | #MSDhoni | #ViratKohli | #RuturajGaikwat | #FafduPlessis | #Chepauk | #ChepaukStadium | #IPLOpeningCeremony | #PolimerNews
இதுவே #சினிமா #நடிகை #நடிகர்களா #இருந்தால் #லட்சகணக்கில் #லைக்  #நாட்டு #மக்களுக்காக #சேவை செய்யும் #எங்களுக்கு
.
.
.
#tamil #tamilreels #tamilcinema #tamilcomedy #tamiltrending #tamilsong #trend #fbreelsvideo #fbreels #fbf #fbreels23 #trendingreels #instagood #FacebookPage #facebookpost #instagram #instadaily #fbreelsvideoreels #trend #trendingreels #trendingnowadays

18/09/2021

சமூக வலைத்தளத்தினை நகர்த்துவதில் உள்ள சிக்கல்கள்


சமூக வலைத்தளங்களை கொண்டு செல்லும் போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும். அவை மிக பிரதானமான சிக்கல். இந்த சிக்கல்களை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அவற்றை வரும்போது பார்ப்போம் என்று இறங்கினால் வெளியேறும் போது ஒன்றுமே இருக்காது.


யூரியுப், ரிக்ரோக், பிளக்கார் போன்றவற்றை நிர்வகிப்பு செய்வோர் இந்த பிரச்சினைகளை அதிகம் எதிர் நோக்கவேண்டி ஏற்படும். இந்த தலங்களில் எதுவும் பதிவிடலாம் எனும் நோக்கில் பதிவு செய்ய முடியாது அவ்வாறு பதிவு செய்தால் தளங்களை தடையும் செய்வார்கள்.


முதலில் தற்காலிக தடை என்பார்கள்

சமூககத்திற்கு ஏற்ற பதிவு இல்லை என்பார்கள்.

(Community sensitive)  என்று காட்டி தடையும், முழுமையான தடையும் ஏற்படலாம்.


பாலியல் சார் பதிவுகள், தனிநபர் சார் பதிவுகள், நாட்டின் இறமை, அரசியல், தீவிரவாத கருத்து சார் படங்கள் என இவர்கள் சொல்லாமலும் பலதிற்கு தடை போடுகிறார்கள்.


நகைச்சுவை சார் சொந்த பதிவுகளை அதிகமாக பகிருங்கள். சொந்த படங்களை அதாவது நீங்களே உங்கள் கமெராவில் பதிவு செய்த படங்களை பதிவேற்றுங்கள்.


இல்லை எனில் உங்கள் தளங்களை நீங்களே அழிப்பதாகிவிடும். இந்த பிரச்சினைகளில் விளையாட்டு துப்பாக்கிக்கு கூட பல தளங்களில் தடைதான் இருக்கிறது. 





இதை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களில் உழைப்பதென்பது கடினமான விடயம்தான். 


ஒரு இடத்திற்குள் செல்லும் போதுதான் அதன் விபரங்கள் புரிகிறது

12/09/2021

623 பொருகளின் இறக்குமதியின் பின்னணி

 


சில நாட்களாகா ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினை உள்ளாடைகளுக்கான தடை என்றும்  அது தொடர்பான புகைப்படங்கள், கேலிசித்திரங்களும் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்கின்றன. 

623 பொருட்களின் இறக்குமதி தொடர்பான பின்னணி செயற்பாடுகள் பற்றிய சுருக்க பார்வை.



பொருட்களுக்கு தடைவிதிக்கும் நோக்கம் என்றும் எடுத்துகொள்ளலாம், அதேவேளை உள்னாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் என்றும் எடுத்து கொள்ளலாம். இதில் வரிவிதிப்பு என்று இல்லை.


இவ்வளவு காலமும் வங்கியில் உள்ள பணத்திற்கு மேலாக over draft மூலம் வியாபாரம் செய்தவர்கள், வங்கியினை அடிப்படையாக கொண்டு வியாபரத்தினை மேற்கொண்டோர்கள் இனிமேல் அந்த வியாபரத்தினை தமது சொந்த பணத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள்.


ஆடைகள் தொடர்பான வியாபரத்திற்கு வங்கியில் 102 % தமது பணத்தினை வைப்பிலிட்டு வியாபரத்தினை மேற்கொள்ள வேண்டும். அதே போல் தொலைபேசி சார் பொருட்களுக்கு 250% வீதம் வங்கியில் வைப்பிலிட்டு அல்லது அந்த தொகையினை வங்கியில் வங்கி உத்தரவாதமகா கட்டவேண்டும். 



இதுதான் தற்போதைய இந்த உள்ளாடை விவகாரமாகும். இந்த விவகாரம் பொருட்களிற்கு விலை அதிக்கப்படலாம் என்ற எண்ணம் உருவாகும். இவ்வளவு பணத்தை கொண்டு ஒருவர் இறக்குமதிக்கு முன்வரப்போவதில்லை. 


இந்த நடவடிக்கைகள் பணமுதலைகளின் பதுக்கல் பணத்தை வெளிக்கொணர்வதாக கூட இருக்கலாம். எப்படியோ இந்த பணங்கள் வெளிவரும் பட்ட்சத்தில் பணவீக்கம் குறையலாம் என அரசாங்கம் நினைக்க்லாம். அரசின் திட்டம் இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த அராசாங்கம் பற்றியும் யோசிக்கவேண்டும்.


இப்போது இருக்கும் அரசாங்காம் தம்மை விட பணக்காரர் இருக்க கூடாது என்றும் எதிர்காலத்தில் அரசாங்க நடவடிக்கைகள் பங்குகள் தம்முடையதாக இருக்கவேண்டும் என்பதிலும் அவர்கள் போக்கு சரியாக இருக்கிறது.


இந்த நடவடிக்கைகள் கடந்த கால செயற்பாடுகளில் அதிகமகா பார்த்திருப்பீர்கள்.  ஆனாலும் பணத்தை வெளிவிட வியாபரிகள் முன்வராத போது அவர்களின் திட்டம் தொல்வொயில் முடியலாம், அவர்களை நம்பி முதலீடு செய்தால் இறுதியில் உள்ளாடையுடன் அந்த முதலாளிகள் தெருவில் அலையலாம். 


இதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

08/09/2021

டொலரும் இலங்கை ரூபாவின் வீழ்சியும். பொருளாதார கட்டுரை

 


“இலங்கை ரூபா அமேரிக்க டொலருக்கு நிகராக கூடி குறையும் முறை”

முழுமையாக வாசித்தால்  சிறந்த விளக்கம் கிடைக்கும்.

குறிப்பு :- தங்கம் என குறிப்பிடப்படுவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ( மொத்த சொத்து)

இலங்கை ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

ஒரு எளிமையான ஆய்வு கட்டுரை.பொறுமையாக கடைசி வரை படியுங்கள்.உண்மை உங்களுக்கு எளிதாக புரியும்.

ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.!

எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.!

ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்...

என்ன,அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.



சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் .

அமெரிக்காவையும் இலங்கையையும்!

அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக்   காரணம்,நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக்  கொண்டு பழகியுள்ளோம்!

கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை  எடுத்துக்கொள்வோம்:

துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இலங்கையிடமும்  சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது:
அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!

இலங்கையும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!

இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இலங்கை ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இலங்கை ரூபாய் மட்டுமே!

இப்பொழுது,

அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.

இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே!

இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.

இப்பொழுது, இலங்கைக்கு வருவோம்.!

இலங்கை அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும்.

ஆனால், அசல் வரிவசூலோ,..  வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!!

அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது!

மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!

இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.!

ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).!

இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!

சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்!

தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்!

இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இலங்கை ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50).

ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050  ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!

எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில்  வெளியிட்டே ஆகவேண்டும்.

காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல்  "காணாமல் போய்விட்டதல்லவா"?

எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!

இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF !

"நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.!

உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்!

ஆனால், இலங்கை அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று!

அரசுக்கு வேறு வழி கிடையாது!

காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை!

அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இலங்கை அரசு!

இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!

ஆக,.. இப்பொழுது, இலங்கை ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால்  = 1.71)

அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இலங்கை ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது!  $1 = Rs.1.71 !

இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல்  அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது!

ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!

இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 200.00 என வந்து நிற்கிறது!

இலங்கை அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இலங்கை ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!

இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!

இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது!

காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!

ஆனால், இலங்கையில்?

யாராலாவது, ஊகிக்க முடியுமா?

percentage of taxpayers in Sri Lanka என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்!

நல்ல இலங்கை  குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!

ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இலங்கையில் வரி செலுத்துபவர்கள்!

நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்!

அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...

அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா?

கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா?

நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா?
என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!

கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கின்றது என்று எடுத்துக் காட்டவே இந்த ஆய்வுக் கட்டுரை. Copy

04/09/2021

தலிபான்களின் அதிரடி சட்டம்

 ஆக மொத்தத்தில பெண்களை மெசினாத்தான் பாக்கிறாங்க போல.....


தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்:

************

football தடை !

காற்றாடி விட தடை !

பெண்கள் தனியாக வெளியே போகதடை !

பெண்கள் கல்வி கற்க தடை !

பெண்கள் வேலை பார்க்க தடை !

ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை !

பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை !

தனியே பெண்கள் டாக்ஸியில் போக தடை  !

ஆண்கள்,பெண்கள் ஒரே பேருந்தில் பயணம் தடை !

டிவிதடை ! வீடியோ தடை !

ஆண்கள் சவரம் செய்ய தடை !

பறவை நாய் வளர்ப்பு தடை !

இலக்கிய நூல் தடை !

கடைகளில் ஆண்கள் இருந்தால் பெண்களுக்கு பேச தடை !

ஆண் டாக்டர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க தடை . !

பெண்களின் பள்ளிகள், கல்லூரிகள் மத கருத்தரங்கு கூடமாக மாற்றப்படும் !


பெண்களுக்கு நெயில்பாலிஷ்,முகபூச்சு இருந்தால் விரல்கள் வெட்டப்படும் ! 

பெண் சத்தமாக சிரித்தால் பிரம்படி !

ஹைஹீல்ஸ் போட பெண்களுக்கு தடை !

பெண் நடக்கும் போது செருப்பு சத்தம் வந்தால் பிரம்படி !

பெண்கள் ரேடியோ டிவியில் பேச தடை !

பெண்கள் விளையாட்டு  விளையாட தடை !

பெண்கள் வீட்டு பால்கனியில் 

நிற்க தடை !

வீட்டு ஜன்னல் கண்ணாடிகளில் 

கட்டாய பெயின்ட் !

பெண்களுக்கு ஆடை அளவோ , 

ஆடை தைத்து தரவோ 

ஆண்களுக்கு தடை !

பெண்களை படம் பிடிக்க தடை !

பத்திரிகைகளில் பெண்கள் படம் 

வர தடை ! 

வீடு, கடைகளில் பெண்கள் 

படம் மாட்ட தடை !

இசை,சினிமா, பாடல் 

என அனைத்துக்கும் தடை !

2021 "31 செப்டம்பருக்கு பிறகு இஸ்லாமிய பெயர் வைக்காதவர்க்கு தண்டனை !

ஆண்கள் முடிவெட்ட தடை !

ஆண்கள் தாடி,தொப்பி ,ஆப்கான் உடை கட்டாயம் .!

இஸ்லாமிலிருந்து வேறுமதம் மாறுவோருக்கு மரண தண்டனை !

2021" செப்டம்பர் -30 க்கு பிறகு இன்டர்நெட் தடை !

பெண்கள் செண்ட் பூச தடை !

பெண்களின் கொலுசு சத்தம் எழ தடை !

பெண்கள் பிற ஆணுடன் பேசதடை !


இதெல்லாம் " நேற்று           வெளியிட்டுள்ள சட்டம் !


நட்டமடையும் இலங்கை

  இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ போன்ற பிரதான அரச நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ஏன் இவ்வளவு ப...