623 பொருகளின் இறக்குமதியின் பின்னணி
சில நாட்களாகா ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினை உள்ளாடைகளுக்கான தடை என்றும் அது தொடர்பான புகைப்படங்கள், கேலிசித்திரங்களும் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்கின்றன.
623 பொருட்களின் இறக்குமதி தொடர்பான பின்னணி செயற்பாடுகள் பற்றிய சுருக்க பார்வை.
பொருட்களுக்கு தடைவிதிக்கும் நோக்கம் என்றும் எடுத்துகொள்ளலாம், அதேவேளை உள்னாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் என்றும் எடுத்து கொள்ளலாம். இதில் வரிவிதிப்பு என்று இல்லை.
இவ்வளவு காலமும் வங்கியில் உள்ள பணத்திற்கு மேலாக over draft மூலம் வியாபாரம் செய்தவர்கள், வங்கியினை அடிப்படையாக கொண்டு வியாபரத்தினை மேற்கொண்டோர்கள் இனிமேல் அந்த வியாபரத்தினை தமது சொந்த பணத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள்.
ஆடைகள் தொடர்பான வியாபரத்திற்கு வங்கியில் 102 % தமது பணத்தினை வைப்பிலிட்டு வியாபரத்தினை மேற்கொள்ள வேண்டும். அதே போல் தொலைபேசி சார் பொருட்களுக்கு 250% வீதம் வங்கியில் வைப்பிலிட்டு அல்லது அந்த தொகையினை வங்கியில் வங்கி உத்தரவாதமகா கட்டவேண்டும்.
இதுதான் தற்போதைய இந்த உள்ளாடை விவகாரமாகும். இந்த விவகாரம் பொருட்களிற்கு விலை அதிக்கப்படலாம் என்ற எண்ணம் உருவாகும். இவ்வளவு பணத்தை கொண்டு ஒருவர் இறக்குமதிக்கு முன்வரப்போவதில்லை.
இந்த நடவடிக்கைகள் பணமுதலைகளின் பதுக்கல் பணத்தை வெளிக்கொணர்வதாக கூட இருக்கலாம். எப்படியோ இந்த பணங்கள் வெளிவரும் பட்ட்சத்தில் பணவீக்கம் குறையலாம் என அரசாங்கம் நினைக்க்லாம். அரசின் திட்டம் இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த அராசாங்கம் பற்றியும் யோசிக்கவேண்டும்.
இப்போது இருக்கும் அரசாங்காம் தம்மை விட பணக்காரர் இருக்க கூடாது என்றும் எதிர்காலத்தில் அரசாங்க நடவடிக்கைகள் பங்குகள் தம்முடையதாக இருக்கவேண்டும் என்பதிலும் அவர்கள் போக்கு சரியாக இருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் கடந்த கால செயற்பாடுகளில் அதிகமகா பார்த்திருப்பீர்கள். ஆனாலும் பணத்தை வெளிவிட வியாபரிகள் முன்வராத போது அவர்களின் திட்டம் தொல்வொயில் முடியலாம், அவர்களை நம்பி முதலீடு செய்தால் இறுதியில் உள்ளாடையுடன் அந்த முதலாளிகள் தெருவில் அலையலாம்.
இதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Comments
Post a Comment