Living together ஒன்றாக வாழ்தல்
Living together. )ஒன்றாக வாழ்தல்) இந்த சொல் நடைமுறை நமக்கு அதிக தூரம். இந்த முறை வெளி நாடுகள் சிலவற்றில் ஏற்று கொள்ள பட்டாலும் பல நாடுகள் கண்டும் காணாது விட்டிருக்கின்றனன. இந்த வாழ்தல் முறை என்பது மனமொத்த இருவர் ஒரே வீட்டில் அல்லது ஒரு அறையில் ஒன்றாக வாழ்தல். இதில் திருமணம் என்பது இருக்காது. ஆனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பின்னர் நடக்கலாம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுப்பதாகும்.. பாலியல் வரை பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வாழ்க்கை முரையில். இதனை வெளி நாடு செல்லும் பலரும் மேற்கொள்கின்றனர். அது உழைப்பு, வருமானம், ஒரே வேலைத்தளம், குடும்ப நிலை போன்றன தீர்மானிக்கின்றன. ஒரு மாத வாடகையினை பங்கு போடவும், துணை ஒன்று தேவை என்பதற்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இங்கு இவர்களுக்கு திருமணம் முடித்த குடும்பம் பிள்ளைகள் சொந்த நாட்டில் இருப்போர் கூட இதனை கைகொள்வதனை காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் நன்மை தீமைகளும் உண்டு. குழந்தை பேறு என்பது இல்லாது போகலாம், இங்கு இந்த வாழ்க்கை சில மாதங்கள் போக வே...