29/10/2019

தேர்தல்லும் மக்களும் இடையில் யாரு






இலஙகை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவருக்கான தேர்தல் சூடுபிடிக்குமா??

மக்கள் என்ன யோசிக்கிறார்கள். போட்டியாளர் என்ன செய்கிறார்கள் என்றால் எல்லாம் புரியாதே உள்ளது..

எதிர்வு கூறமுடியாத அளவில் ஊடகஙகளும் ஆய்வாளர்களும் சொக்கி போயிருக்குமளவிற்கு தேர்தல் நிலவரம் காணப்படுகிறது. தற்போதைய எதிர்வு கூறல் முகனூல் பார்வையாளர்களினை கொண்டே கூறப்படுகிறது.

இந்த எதிர்வு கூறல் எவ்வளவு சாத்தியம். யுத்த முடிவு தமக்கே வெற்றி என்று கோத்தாவும் குடும்ப ஆட்சி முடிவு தமக்கே வெற்றி சஜித்தும் இதற்கிடையில் அனுர தம்பணியை கச்சிதமாக நகர்த்துகிறார்.

ஏனோ படித்த பலர் இவருக்கு பின்னால் இருந்தாலும் கீழ்மட்ட மக்கள் வாக்கு எங்கே என்பதே கேள்விகுறி. மக்கள் தாம் தேர்ந்தெடுக்கும் யாராலும் நன்மை இல்லாத நிலை என்ற எண்ணத்தில்தான்.

இலஙகை எனும் திருநாட்டில் யார் வந்தாலும் விலைவாசி கூட்டி மக்களின் வாழ்வில் விளையாடுவோரே இவர்கள். சரியான வேட்பாளர் தாம் விடும் விஞ்ஞானபவத்திற்கு ஏற்ப நடப்பதுமில்லை.

வெறும் வாய்ப்பேச்சில் மட்டுமே ஆட்சி தொடர்கிறது. மக்கள் நலன் சார்ந்து செயற்பட்ட அரசு அமைந்ததில்லை. அவ்வாறு அமைய மேலைத்தேய நாடுகள் விடப்போவதுமில்லை. 

உறவுகள் ஏன் உதவுவதில்லை.







உறவினர்கள் நல்லா இருந்தும் சிலர் முன்னேற்றமின்றி மிகவும் கடினமான நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன.

இரண்டே இரண்டு காரணஙகள்தான். அதில் நம்பிக்கையாக முன்னேற வழஙகப்படும் பணத்தில் சரியாக திட்டமிட்டு முன்னேற்றம் அடைய சிந்திக்காமையும் செயற்படாமையும்.

அடுத்து உறவுகளுக்கு பணம் வழஙகினால் தாம் உதவியது தெரியாது என்பதால் ஊர் பெயெர் தெரியாதோருக்கும், கோவில் குளம் விளையாட்டு கழகம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வழஙகினால் தம் பெயரும் புகழும் நிலைக்கும் என்று வழஙகுவர்.

இந்த இரண்டு காரணங்களால் உறவுகள நல்லா இருந்தும் உறவினர்கள் வறுமையில்.

அண்மையில் வெளிநாட்டில் ருந்து வந்த மகள்  தனது தாய்க்கு ஒரு ரூபாய் கூட வழஙகவில்லை. ஆனால் தன்னை பார்க்க தன் இருப்பிடத்திற்கு வந்த வெளியூரவர்களிற்கு 5000 கொடுத்தார். ஏன் எனில் தன்னை பற்றி அவர்கள் நல்லாக பேசவேண்டும் என்று.

தாய்க்கோ சகோதரிகளுக்கோ கொடுத்தால் யாரும் பேசமாட்டார்களாம். போலி வேசதாரிகளின் மத்தியில் நாமும் வாழ்கிறோம் என்று சொல்லி அந்த தாய் மெல்ல நகர்ந்தாள்.

இப்படி பல விடயங்கள் நடந்தாலும் சிலவே வெளியில் வருகின்றன. சிலரே வெளிப்படுத்துகின்ற. எல்லாம் விதி என்று நகர்வோராலே பல பிரச்சினைகள் தொடர்கின்றன

28/10/2019

சுயித் இந்த நிலைக்கு காரணம் "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில



👦 சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான் அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில

அந்த சிறுவன் கூறுவதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை இருந்தாலும் அவன் கூறியதை பதிவிடுகின்றேன்.
செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து கேட்கின்றார் இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று, அதற்கு அந்த சிறுவன் கூறுகின்றான் இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று, அதற்கு செய்தியாளர் சொன்னார் நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று,  அதற்கு அந்த சிறுவன் சொன்னான் நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது, எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான்  உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும்  விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.  அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று  விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றான்.  மேலும் அவன் கூறுகையில் சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது,  உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம் ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.
சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.

ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது இந்த சம்பவத்தை வைத்து சில அரசியல் ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிய முடிகின்றது

வல்லுநர்களே படித்தால் மட்டும் போதாது அனுபவம் றொம்ப முக்கியம்

@ரோசி மேரி

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்



சென்னைதொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்
சென்னை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சோளக்காட்டில் ஆழ்துளை கிணற்றில் பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் நேற்று முன்தினம் மாலை தவறி விழுந்தது. குழந்தையை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. தமிழக அரசும், உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும். தமிழகத்தில் இதுவரை நடந்த ஆழ்துளை கிணறு விபரீதம் குறித்த விவரம் வருமாறு:

2009 பிப்ரவரி 22ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.
2011 செப்டம்பர் 8ம் தேதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.
2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
2013 ஏப்ரல் 28ம் தேதி கரூர் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.
2014 ஏப்ரல் 5ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.
அதே ஏப்ரல் 5ம் தேதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.
அதே ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
அதே  ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
2015ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
2018ம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன், உயிருடன் மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள், அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர் கதையாகவே உள்ளது.

17/07/2019

படித்தோரும் பணம் படைத்தோரும் முட்டாள்களே

இலகுவில் ஏமாறும் நிலையில் படித்தோரும், செல்வந்தருமே இலங்கையில் இருக்கிறார்கள். இது சாத்தியமான உண்மை. இங்கு இவர்களே எந்த ஒரு விடய்த்திலும் தம்மை முதலில் புகுத்துவார்கள்.
அதில் ஒன்று பிரமிட்டில் முதலில் புகுந்து இன்று திக்குமுக்காடி போயுள்ளனர்.

நாய் இறைச்சி, மருத்து உணவு, கடைச்சாப்பாடு (உண்மை, பொய் வேறு) மாட்டுவோர் இவர்களே. ஏழைகளுக்கு இது எட்டாக்கனிதான்.

ஏன் 5000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு பசியோடு திரும்பி வரும் முட்டாள்தன அறிவு படைத்தோர்கள் இவர்கள். இப்படி எல்லாம் முட்டாள்தனமாக வாழ்வோர் புத்திசாலி என வேடம்

உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் கொண்டு ஆடம்பரமின்றி வாழ்வோர் ஏழைகள். இவர்கள் முட்டாள்தமான குளிரூட்டிகளை கூட பாவிப்பதில்லை.

அவர்கள் பீட்சா, kfc சிக்கன் ஏதும் உண்பது கூட இல்லை. தமது பணத்தை வேறு யாருக்கும் கௌரவம் என்ற பெயரில் வழங்காதோர்.

கிளப் என்று சொல்லி அமெரிக்காக்கு பணம் அனுப்பும் படித்த செல்வம் படைத்த முட்டாள்களும் உண்டு. அதிகம் ஏமாறும் இவர்கள் நல்லவர்கள் சுயமாக வாழ்வோரை பார்த்து சிரிப்பதே வேடிக்கை. இவர்கள் முட்டாள்தனம் இன்னும் அதிகம்.


14/04/2019

முகனூலில் என்னென்னெ எல்லாம் செய்யலாம்.





நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு தேவையில்லாத தேவையான ஒன்றே முகநூல். இதில் சுய தம்பட்டம் போடும் பலர் இதனால் உழைக்க அல்லது தமது இலட்சிய கனவுகளை வெளிக்கொணரலாம் என்பதை அறியாதுள்ளனர்.

#அறிவிப்பாளர் ஆகவேண்டும் எனும் ஆசையுடையோர் லைவ் ஓடியோ மூலம் அல்லது லைவ் வீடியோ மூலம் தமது திறமையை வெளிக்கொணர முடியும். இந்த நவடிக்கையை பலர் இன்று மேற்கொள்கின்றனர்.

#கவிஞர். #கவிதை எழுதும் திறன் இருந்தால் ஒரு #முகனூல் கவிஞ்ராக தோன்றி பின் நூல் வெளியிட உங்கள் ரசனையாளரின் உதவியை நாடலாம். இவ்வாறு பலர் வளர்ந்திருக்கிறார்கள்.

#வியாபாரம். விளம்பரப்படுத்தலுக்கு மிக முக்கிய தளம் இதுவே. விளம்பர முகவராக கூட பயணிக்கலாம். இதற்கு வீடியோ எடிற்றிங், போட்டோ எடிற்றிங்  போன்றவை தெரிந்தால் போதும்.

இவ்வாறு என்ன திறமையோ அதனை வளர்த்து கொள்ள முடியும். கட்டுறை எழுத்தாளர், புகைப்பட கலைஞ்ர், இதர துறைகளில் முகனூல் ஊடாக வெளிவந்து பணம் சம்பாதிக்கும் உயர்மட்ட கலைஞாக ஒரு முக்கிய நபராக வெளியுலகிற்கு காட்ட முடியும்.

எதனையும் சாதக நிலையறிந்து பயன்படுத்தினால் வெற்றி நிட்சயமே.

10/04/2019

தேர்தல் வரப்போவுதா... அறிகுறி தெரிகிறதா

எந்த ஒரு விடயம் என்றாலும் அந்த விடயம் நடப்பதற்கு சில அறிகுறிகள் தென்படும். இயற்கை தோற்றபாடு என்றாலும் செயற்கை தோற்ற பாடு என்றாலும்.

அந்த வகையில் இலங்கையில் தேர்தலுக்கான அறிகுறி என்ன. எப்படி தெரிகிறது

அதனை கூர்ந்து பார்த்தால் நகைச்சுவைகள் அதிகரிக்க தொட க்கிவிட்டன. சம்மந்தம் ஐயா ரணிலை மிரட்டுவது போலும். மகிந்த ஜனாதிபதிக்கே சவால்விடுவதும் இதற்கான ஆதாரங்கள்.

சுமந்திரன் ஐயா கிராமம் தோறும் பயணிப்பதும். ஏனைய பாரளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது இயலளவுக்குள் நின்று ஒன்று திரட்டுவதும் அறிகுறி.

இதற்கு ஏற்ப ஜனாதிபதி, பாரளுமன்ற, மாகாணசபை தேர்தல் என்பன இழுபறியில் இருப்பது எல்லோருக்கு. மிகுந்த சங்கடம்.

மக்களை ஏமாற்ற படு பிரயத்தனம் நடப்பதும் இதனை மக்கள் எங்கனஙம் தீர்பதென்பதுமே தீர்வு. பொறுப்போம் அளிப்பொஇம் வாக்கு

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...