உறவுகள் ஏன் உதவுவதில்லை.







உறவினர்கள் நல்லா இருந்தும் சிலர் முன்னேற்றமின்றி மிகவும் கடினமான நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன.

இரண்டே இரண்டு காரணஙகள்தான். அதில் நம்பிக்கையாக முன்னேற வழஙகப்படும் பணத்தில் சரியாக திட்டமிட்டு முன்னேற்றம் அடைய சிந்திக்காமையும் செயற்படாமையும்.

அடுத்து உறவுகளுக்கு பணம் வழஙகினால் தாம் உதவியது தெரியாது என்பதால் ஊர் பெயெர் தெரியாதோருக்கும், கோவில் குளம் விளையாட்டு கழகம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வழஙகினால் தம் பெயரும் புகழும் நிலைக்கும் என்று வழஙகுவர்.

இந்த இரண்டு காரணங்களால் உறவுகள நல்லா இருந்தும் உறவினர்கள் வறுமையில்.

அண்மையில் வெளிநாட்டில் ருந்து வந்த மகள்  தனது தாய்க்கு ஒரு ரூபாய் கூட வழஙகவில்லை. ஆனால் தன்னை பார்க்க தன் இருப்பிடத்திற்கு வந்த வெளியூரவர்களிற்கு 5000 கொடுத்தார். ஏன் எனில் தன்னை பற்றி அவர்கள் நல்லாக பேசவேண்டும் என்று.

தாய்க்கோ சகோதரிகளுக்கோ கொடுத்தால் யாரும் பேசமாட்டார்களாம். போலி வேசதாரிகளின் மத்தியில் நாமும் வாழ்கிறோம் என்று சொல்லி அந்த தாய் மெல்ல நகர்ந்தாள்.

இப்படி பல விடயங்கள் நடந்தாலும் சிலவே வெளியில் வருகின்றன. சிலரே வெளிப்படுத்துகின்ற. எல்லாம் விதி என்று நகர்வோராலே பல பிரச்சினைகள் தொடர்கின்றன

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்