உள்ளூராட்சியில் மாற்று தெரிவிவை விரும்பும் மக்கள்


உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் மாற்று தெரிவை விரும்புகின்றனர். அத்தெரிவில் மக்கள் குழம்பியும் இருக்கின்றனர். தம்மையே ஏமாற்றும் கட்ட்சி ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவது பெரிய விடயம் இல்லை. இந்த கால கட்டத்தில் மக்கள் பேரவையும், வடமாகாண முதலமைச்சரும் எந்த கருத்துக்களையும் வெளியிடாது இருக்கின்றமை மக்களினை இன்னும் அதிக குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது அடுத்த தேர்தலுடன் தமிழரசு கட்சியாக மட்டும் போட்டியிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புளட், ரெலோ மற்றும் ஏனைய கட்சிகள் புதிய கூட்டணி உருவாக்கும். அக்கூட்டணி தமிழ்தேசிய முன்னணியுடன் சேரும் பட்சத்தில் தனித்துவமாக செயற்பட வாய்ப்பு அதிகம். பலமான எதிர்கட்சி ஒன்று தமிழரசு கட்சிக்கு இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. இல்லாது விட்டால் தமிழர் நிலை கவைக்கிடமாகலாம்
 ஏன் இந்த நிலைக்கு தமிழரசு கட்சி கொண்டு செல்கின்றது என்று யாருக்கும் இன்னும் புரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்றால் மக்கள் மாற்று தெரிவினை தெரியவேண்டும். 

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்