Posts

Showing posts from April, 2018

மனதில் வலி இருப்போர் மத்தியில் வெளிப்பூச்சு மினுங்குது.

Image
முள்ளி வாய்க்கால். எல்லோரும் எல்லா தமிழனும் உச்சரிக்கும் சொல். இருக்கும் போது திட்டினோம், ஒழித்தோம், நாட்டைவிட்டும் அனுப்பினோம். இன்று இருப்பிற்கு, பணத்திற்கு, பதவிக்கு அரசியலிற்கு முள்ளிவாய்க்கால் தேவைப்படுகிறது. ஓடியோருக்கு, ஒழித்தோருக்கு, பதவி பட்டம் தேவைப்படுவோருக்கு, வெளி நாட்டு வாழ்க்கைக்கு, அதற்கு மேல் இந்திய தமிழ் நாட்டு அரசியல் சினிமாவிற்கும் தேவைப்படுகிறது. அனுபவித்து சித்திரவதைப்பட்டு, புற்று நோயால் வேதனைப்பட்டு, உறவிழந்து, வீடிழந்து வாழ்வை வாழ உழைப்போர் முள்ளிவாய்காலில் தவறவிட்ட தலைமையை தேடுகின்றனர். தமக்கான கலாசாரத்தை, பாதுகாப்பை, தேடுகின்றனர். இவர்கள் மத்தியில் போக்கில் மக்களை குழப்பி தமது வாக்கு வங்கிக்கு ஓட்டுக்களை சேர்க்கும் நிகழ்வுகள். களைத்தவனுக்கு மீண்டும் மீண்டும் களைப்பையை கொடுத்து கெடுக்கும் மனிதரானார்கள். அவர்கள் எழுந்தால் தட்டி தடவி படுக்க வைக்க எதிரியை துரோகியை நாடி தம்மை நல்ல போர்வை போர்த்தி காட்டுவோர் கூட நாளை முள்ளி வாய்க்காலில் கண்ணீர் நாடகம் போடுவதுதான் துயரப்பட்டவனுக்கு மிகுந்த வலி. முள்ளிவாய்க்கால் தமிழர் எல்லாவற்றையும் தவறவிட்ட இடம். அங்கு

நாட்டின் நிலமை எங்கே செல்கின்றது.

Image
இன்று நாட்டின் நிலமை எப்படி இருக்கிறது. அதனால் மக்கள் நிலை அவர்களின் மன நிலை எப்படி என்று ஆராய்ந்தால் ஏனோ தானோ என்ற நிலை தோன்றியிருக்கிறது. செல்வாக்கு நிறைந்தவர்களிற்கு எதனையும் செய்யக்கூடைய நிலையும் பணத்தால் அடையாளங்களையும் மறைக்கும் நிலை அதிகரித்தும் காணப்படுகின்றது. செல்வாக்கு மிகுந்த நபர்களால் எதனையும் இலகுவாக சாதிக்க செய்ய முடிகின்றது. அவர்களே நிரபராதிகளையும் கூண்டில் அடைக்கவும் முடிகிறது. யார் யார் எல்லாம் அடிபணிந்து குனிந்து நடக்கிறார்களோ அவர்களே வாழ்ந்து வரக்கூடிய நிலை காணப்படுகிறது. எந்த ஒரு துறையிலும் அற்பணிப்பு மிக்கோர் இல்லை.  அற்பணிப்பு உள்ளோர் போல் பாசாங்கும் அதனை வைத்து பணம், பட்டம், பதவி சம்பாதிக்க முடிகிறது. ஊரில் அல்லது ஊடகத்தில் யாரும் இதனை தட்டி கேட்க முன்வந்தாலே அவர்கள் நசுக்கப்படுகின்றனர். ஊழல் பற்றி பேசும், பெண்ணியம் பற்றி பேசியும் அதனை தாமே அதிகம் மேற்கொள்கின்றனர். எல்லாம் பாசாங்கு உலகம் என்ற நிலையில். அரச அலுவலர்களில் நேர்மையானரும் ஒதுங்கும் நிலை உருவாகியிக்கிறது. இப்போது அற்பணிப்பு செல்வாக்கால் சோபையிழந்து போகின்றது. நாட்டின் நிலை என்பதை விட