மனதில் வலி இருப்போர் மத்தியில் வெளிப்பூச்சு மினுங்குது.

முள்ளி வாய்க்கால். எல்லோரும் எல்லா தமிழனும் உச்சரிக்கும் சொல். இருக்கும் போது திட்டினோம், ஒழித்தோம், நாட்டைவிட்டும் அனுப்பினோம்.

இன்று இருப்பிற்கு, பணத்திற்கு, பதவிக்கு அரசியலிற்கு முள்ளிவாய்க்கால் தேவைப்படுகிறது.

ஓடியோருக்கு, ஒழித்தோருக்கு, பதவி பட்டம் தேவைப்படுவோருக்கு, வெளி நாட்டு வாழ்க்கைக்கு, அதற்கு மேல் இந்திய தமிழ் நாட்டு அரசியல் சினிமாவிற்கும் தேவைப்படுகிறது.

அனுபவித்து சித்திரவதைப்பட்டு, புற்று நோயால் வேதனைப்பட்டு, உறவிழந்து, வீடிழந்து வாழ்வை வாழ உழைப்போர் முள்ளிவாய்காலில் தவறவிட்ட தலைமையை தேடுகின்றனர். தமக்கான கலாசாரத்தை, பாதுகாப்பை, தேடுகின்றனர்.

இவர்கள் மத்தியில் போக்கில் மக்களை குழப்பி தமது வாக்கு வங்கிக்கு ஓட்டுக்களை சேர்க்கும் நிகழ்வுகள். களைத்தவனுக்கு மீண்டும் மீண்டும் களைப்பையை கொடுத்து கெடுக்கும் மனிதரானார்கள்.

அவர்கள் எழுந்தால் தட்டி தடவி படுக்க வைக்க எதிரியை துரோகியை நாடி தம்மை நல்ல போர்வை போர்த்தி காட்டுவோர் கூட நாளை முள்ளி வாய்க்காலில் கண்ணீர் நாடகம் போடுவதுதான் துயரப்பட்டவனுக்கு மிகுந்த வலி.

முள்ளிவாய்க்கால் தமிழர் எல்லாவற்றையும் தவறவிட்ட இடம். அங்கு வேதனைப்படும் உள்ளங்கள் பலது வரும். வெந்த புண்ணில் வெல் பாச்சுவது போல் முகனூலில் கொண்டாட செல்லதீர்கள். வேதனையின் களம்.

எல்லாம் இழந்த இடத்திற்கு ஏதிலிகளாக ஒரு நாள் சென்று வாருங்கள்.,, போக்குவரத்துக்கான பணம், தொலைபேசிகள், ஆடம்பர உடைகள், உணவு, நீர் இன்றி சென்று வாருங்கள் அபொழுதாவது நாம் ஒன்றிணைய சந்தர்பம் வரலாம்.


Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்