இலங்கையின் வளர்சி எங்கு தடைப்படுகிறது

 இலங்கையின் பொருளாதார வீழ்சியும் வளர்ச்சியும் தங்கியிருப்பது எங்கு என்று பார்த்தால் சின்ன ஒரு இடம்தான். 


இலங்கையின் அனைத்து விடயமும் தங்கியிருத்தல் என்பதன் ஊடாக பல விடயங்களை வளர்க்க வேண்டிய தேவையில்தான் இலங்கை அரசாங்கங்கள் மாறி மாறி செயற்படுகின்றன.


அரசியல் கட்சி சார் அரசாங்கத்தில் மட்டுமே இலங்கையின் பொருளாதாரம், வளர்ச்சி மனித உரிமை, போன்ற அனைத்தும் தங்கியிருப்பது மக்களின் சாபக்கேட்டில் ஒன்றாகும்.


இதனால் கட்சிசார் அரசாங்கம் ஊழல், மோசடி, திறனற்றோரை அரச வேலைக்கு அமர்த்துதல், அரச நிதி மோசமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுதல், அரச நடைமுறைகள் கட்சி சார் அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றப்படுதல், இவ்வாறான செயற்பாடுகளால் வறுமை உள்ளோர் வறுமையிலும், சில முதலாளிகள் மட்டும் வாழ்க்கூடிய சூழலும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. 


இந்த முறையை மாற்ற கட்சிகள் கூட்டிணைந்த தனி ஒரு கட்சி மட்டும் ஏனையவற்றை ஆளும் தன்மையற்ற ஒரு அரசாங்கம் அமையுமாக இருந்தால் ஒரு நாட்டில் வளர்ச்சி அதிகரித்து செல்லும்.


வளர்ந்த நாடுகளின் திட்டங்களை இந்த ஒன்றிணைந்த கட்சிகளின் அரசாங்கம் ஓரளாவது கட்டுப்படுத்தும். இதனால் ஓரளவு நனமையை மக்கள் அடையக்கூடியதாய் இருக்கும்.


இந்த ஆட்சி முறையில் வாழ்த மக்களும், தம் உழைப்பிற்கு பங்கமாக இருப்பதாக உணர்ந்த வளர்முக நாடுகள் மற்றும் பணமுதலைகளும் எவ்வளவு பணம் செலவழித்தவது அல்லது எவ்வளவு மகக்ளை கொன்றாவது இதனை மாற்ற முயற்சிப்பார்கள். 


இந்த நடவடிகையாலும் மக்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள். இந்த பாதிப்பு எதிர்கால சந்ததியையும் கூடவே பாதிக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை. 


சில விடயங்களை மாற்றினாலே நாட்டில் இருந்து வெளியேறும் நபர்கள் நாட்டை நோக்கி படையெடுப்பார்கள். இதனை உருவாகக் நல்ல ஆட்சியாளர்களின் வருகையே மிக முக்கியமாகும். 


எவ்வாறெனினும் ஒவ்வொரு வரும் இவ்வாறு கட்டுரைகளும், துண்டு பிரசுரங்களும், கவிதை, போன்றனவும் மட்டுமே வெளியிட முடியும். இறுதியாக மக்கள் தம் வாக்கை சரியாக பேணாதவிடத்து இதன் பலனை யாரும் அனுபவித்துவிட முடியாது.


Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்