வெளிமாவட்ட அரச உத்தியோகம்.
அரசாங்க வேலையென்றால் ஆடும் மேய்க்கலாம் என்றார்கள்
அவ்வளவாக படிக்காவிட்டாலும் அதட்கேற்ற வேலை கிடைத்தது.
அதிகம் பேசுவதில்லை அடக்கமாய் பணிபுரிந்தேன்
அதனால் என்னவோ அடுத்த மாதம் இடமாற்றம் என்றார்கள்
ஆறு மாதம் தான் கடமைக்கு வந்து அதற்குள் இடமாற்றமா...? என்றேன்
அது அப்படிதான் ஐந்து வருடம் வெளிமாவட்டத்தில் பணிபுரிய வேண்டும் என்றார்கள்
வெளி மாவட்டத்தில் பணிக்கு சென்றால் செலவுக்கு பணம் பத்தாது பலரிடம் யோசனை கேட்டேன்
பரவாயில்லை கொஞ்சம் சமாளி
அரசாங் வேலை அநியாயமாக்கிடாதே என்றார்கள்
அதுவும் சரியென்று அடுத்தநாள் பயணமானேன்
மனைவி கொஞ்சம் சிக்கனக்காரி ஏதோ கிடைத்த பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தினாள்
ஆண்டு ஐந்து ஓடியது மீண்டும் சொந்த ஊருக்கு இடமாற்றம்
பஸ்சால் இறங்கி சைக்கிளை நோக்கி நடந்தேன் அதுவும் காற்றுபோய் நின்றது வீடோ ஐந்து கிலோமீட்டர் தூரத்தில்
காற்று போன சைக்கிளோடு கால்கடுக்க நடந்து வந்தேன்
கூடிவாழ்ந்த நண்பன் ஒருவன் கோல் எடுத்தான் அப்போது
கார் ஒன்று வாங்கியிருக்கன் காலையில வாரன் வீட்ட நில் என்றான் சரிடா என்று போனை வைத்து வீடு வந்து சேர்ந்தேன்
புன்னகையோடு வாசலில் மனைவி
வந்த கலைப்பில் திண்ணையில் அமர்ந்தேன்
போன் அலரியது ஊரில் உள்ள நண்பன் ஒருவன் மூன்று மாடி வீடு கட்டி முப்பதாம் திகதி திறப்பு விழா கட்டாயம் வந்திடு என்றான்
மழைபெய்ய ஆரம்பிக்க மனைவி ஓடினால் வீட்டு ஒழுக்குக்கு பாத்திரம் தேடி.....
நானொரு அரச உத்தியோகத்தன்.....
Comments
Post a Comment