Posts

Showing posts from August, 2021

காய் நகர்த்திய மக்களசமரவீர

Image
  மங்களவின் மரணமும், ராஜபக்ஸர்களின் அதிஸ்டமும், மாற்று அரசியலின் வெற்றிடமும்... இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் கொரோனா காவுகொண்டது.  ”குழந்தைகளே, உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வணங்குங்கள். ஆனால், அரசியல்வாதிகளை வணங்காதீர்கள். அவர்களை நீங்கள்  வழிபட தேவையில்லை.”  Children, Worship your parents and teachers. But, do not worship politicians. You do not need to worship them. கூறிய மங்கள சமரவீரவும் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டார். மங்களசமரவீரவுடனான அனுபவப் பகிர்வுகளும், அவரது அரசியல் செயற்பாடுகளுமே இன்றைய ஊடகபரப்பை, சமூக வலைத்தளப் பதிவுகளை ஆக்கிரமித்துள்ளன. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ,  ஜனாதிபதியாக அரியாசனம்  ஏறுவதற்கு காரணமாணவர்களில் முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீரவும் விபரீத விபத்தில் மரணித்த சிறீபதி சூரியாராட்சியும் முதன்மையான...

முடக்கலில் அனுமதித்த தொழில்கள் காரணம்?

Image
 இந்த முறை நாடு முடக்கப்பட்டுள்ளபோது ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இந்த இரண்டு துறைகளும் எமது நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகும். நோய்த் தொற்றினால் மக்கள் மரணிக்கிறார்களோ, இல்லையோ இந்த துறைகளை தற்காலிகமாகவேனும் முடக்க நேர்ந்தால் அரசாங்கத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும். அதனால் அரசுக்கும் வேறு வழி இல்லை. ஜனாதிபதி தனது விசேட உரையின்போது ஆடை ஏற்றுமதித் துறையானது நாட்டிற்கு ஆண்டொன்றிற்கு 5 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியையும், உல்லாசப் பயணத் துறை 4.5 பில்லியன் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருவதாக தெரிவித்துள்ளார். அரசு உள்நாட்டில் ஏற்படும் செலவீனங்களை பணத்தினை அச்சிட்டு தற்காலிகமாக சமாளித்து வருகிறது. அதனால் ஏற்படும் பணவீக்கம் என்பது இரண்டாம் பட்சம். ஆனால் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் இந்த முறை பயனற்றது. ஏனென்றால் அரசினால் டொலர்களை அச்சிட முடியாது. எனவே அரசு புதிதாக அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அத்துடன் தேவையற்ற அந்நியச் செலாவணியின் செலவுகளையும் தடுக்க வேண்டும்....

கிளப்கவுஸ் செயலி பற்றி

Image
கிளப்கவுஸ். Clubhouse கிளப்கவுஸ் எனும் ஒரு அப்ஸ் அறிமுகப்படுத்தபப்ட்டிருக்கிறது. அந்த அப்ஸ் உருவானது அதன் வளர்ச்சி, பறியெல்லாம் பல விடயங்கள் உண்டு இந்த கிளப்கவுஸ் ஒரு கூட்டத்தொடர் நடத்துவது போல் இருக்கும். இங்கு ஒரு தலைப்பில் உரையாட முடியும், கூட்ட தொடர் போல இதனை நிகழ்த்த முடியும். இங்கு moderator என்று ஒருவரோ  அல்லது சிலரோ இருக்க முடியும். இதில் மூன்று வகையானயோனோர் இருப்பார்கள்.  1 பேசும் குழு அதில் moderators இருப்பார்கள் 2 பார்வையாளர் பகுதி 3 வருவோர் போவோர். இங்கு பேச வேண்டும் என்று நினைப்போர் கையடையாளத்தை தட்டி தாம் பேச இருப்பதை காட்ட முடியும்.  பின் தொடர்தல் மூலம் யார் யார் என்ன குழுவில் இருக்கிறார்கள் என்று அறிந்து அந்த அந்த குழுக்களில் சென்று கேட்கவோ பேசவோ முடியும். இங்கு தனி நபர் பிந்தொடர்தல், குழு பின் தொடர்தல் என பல உண்டு. உந்த கிளப்கவுஸ் அப்சில் உங்கள் சுயவிபரம், இடுவதன் ஊடாக உங்களை நீங்கள் யார் என்று காட்ட முடியும், அதே போல் tweeter, Instagram போன்ற செயலிலளையும் இணைக்க முடியும். யூரியுப் செயலியின் இணைப்பையும் சுயவிபர இடத்தில் பதிவிடலாம். இந்த செயலியில் பல நல்ல...