பெருங்காயம் செய்கை.

 



பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida )  என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும்  ஒருவித பசையிலிருந்து  கிடைக்கிறது . 


இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் 'சைத்தானின் கழிவு' என்று பெயரிட்டு அழைத்தார்கள். 

ஆனால் 

இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று 

ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் 'கடவுளின் அமிர்தம் ' என்று கொண்டாடப்பட்டது. 


இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. 


பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால் 

அதுதான் பெருங்காயம்.

 இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும் 

தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால் 

அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும்

பெருங்காய டப்பா.


பெருங்காயத்தைப் பற்றி  இந்த தகவல் போதுமா....

இன்னும் கொஞ்சம் 

வேணுமா?


படத்தில் பெருங்காய செடி.

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்