01/05/2018

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்





ஆயுத யுத்தம் 2009 உடம் மௌனித்ததும் பல யுத்தங்கள் தொடங்கின. ஆயுத யுத்தத்தில் வாழ்ந்த மக்கள் சந்தோசமாக வாழ்ந்தனர். இப்போது தொடங்கியிருக்கும் யுத்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருந்தனர்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூட இந்த கொடுரங்களில் இருந்து பாதுகாப்பாக இருந்தனர். 

ஆய்த யுத்தம் முடிந்ததும் கொள்ளை, லஞ்சம், ஊழல், செல்வாக்கு அவை எல்லாவற்றையும் விட போதை வஸ்து அமோக விற்பனை, விபச்சார இடங்கள் என்பன அதிகரித்தன.

ஆரம்பத்தில் இவற்றிற்கு ஆயுதம் மூலம் இனம் மத கலாச்சார வெறுபாடின்றி வழங்கிய தீர்ப்பு குறைய காரணம்.

ஆனால் தற்போது சலுகை செல்வாக்கு, அரசியல் பிரமுகர்கள் பணம் என அதிகார வர்க்கத்தினரிடம் இருப்பதால் இந்த யுத்தம் வளர்ச்சியில் யாரும் தடை போட முடியவில்லை.

கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பிறாடோ, பென்ஸ் போன்ற உயர்ரக அதிகார வர்கத்தினரின் செல்வாக்கில் பயணிக்கும் போது எளியோர் பார்த்து பெருமூச்சு விடும் நிலை.

தட்டி கேட்போர் தட்டப்பட்டும், சிலருக்கு பொக்கெற் நிரப்பபடும், செல்லும் போது சட்டம் காக்கும் பொலிசார் இயால கொடுமையால் தாமும் வாங்குவதன்றி வேறு வழிதெரியாது தம் துறையயே கேவலப்படுத்தும் நிலை.

வளர்ந்திருக்கும் பதவி, அதிகார செல்வாக்கு யுத்தம் அழிக்கப்பட சிறந்த அரசியல் தலைவர்களின் வருகை முக்கியம்.

இங்கு இருக்கும் தலைவர்கல் பலர் அறிக்கை மட்டும் விடுவோராயும், தமது செல்வாக்கு அதிகாரத்தை மேம்படுத்துவோராயும், அதிகார போட்டி போடுவோராயும் இருக்கின்றனர்.

இப்போட்டி போட்டுகொள்ளும் இவர்கள் பொது இடத்தில் போதை பற்றியோ மக்கள் தேவைப்பாடு பற்றி பேசுவதன்றி தமது அதிகார பலத்தை காட்டி அடக்க நினைக்கின்றனர்.

இந்த போட்டிகள் யாவும் ஆயுத யுத்த மௌனிப்பை வரவேற்பதோடு அதனை விழா எடுத்து கொண்டாட தவறவுமில்லை.

ஆனால் ஏளை எளியோர் இதில் பங்கெடுத்து தமக்கு தாமே குழிதோண்டுவதுதான் அதிக வேதனை.

இந்த யுத்தங்கள் கொடுரமாக் இலங்கையே சிக்கி தடுமாறும் போது யாராலும் காப்பத்த முடியாது என்பதும் நிதர்சன உண்மை.

மக்கள் விழிப்பும் சரியான திட்டமிடலும் சிலவேளைகளின் சரியான தலைவர்களினை தேர்ந்தெடுத்து நல்ல பாதைக்கு வழிவகுக்கலாம்.

கலாச்சார அழிவும் கூட மீண்டும் ஆயுத யுத்ததால் மாத்திரமே காப்பார்றும் நிலை வரபோகுது.

எல்லாம் அவன் செயல்

22/04/2018

மனதில் வலி இருப்போர் மத்தியில் வெளிப்பூச்சு மினுங்குது.

முள்ளி வாய்க்கால். எல்லோரும் எல்லா தமிழனும் உச்சரிக்கும் சொல். இருக்கும் போது திட்டினோம், ஒழித்தோம், நாட்டைவிட்டும் அனுப்பினோம்.

இன்று இருப்பிற்கு, பணத்திற்கு, பதவிக்கு அரசியலிற்கு முள்ளிவாய்க்கால் தேவைப்படுகிறது.

ஓடியோருக்கு, ஒழித்தோருக்கு, பதவி பட்டம் தேவைப்படுவோருக்கு, வெளி நாட்டு வாழ்க்கைக்கு, அதற்கு மேல் இந்திய தமிழ் நாட்டு அரசியல் சினிமாவிற்கும் தேவைப்படுகிறது.

அனுபவித்து சித்திரவதைப்பட்டு, புற்று நோயால் வேதனைப்பட்டு, உறவிழந்து, வீடிழந்து வாழ்வை வாழ உழைப்போர் முள்ளிவாய்காலில் தவறவிட்ட தலைமையை தேடுகின்றனர். தமக்கான கலாசாரத்தை, பாதுகாப்பை, தேடுகின்றனர்.

இவர்கள் மத்தியில் போக்கில் மக்களை குழப்பி தமது வாக்கு வங்கிக்கு ஓட்டுக்களை சேர்க்கும் நிகழ்வுகள். களைத்தவனுக்கு மீண்டும் மீண்டும் களைப்பையை கொடுத்து கெடுக்கும் மனிதரானார்கள்.

அவர்கள் எழுந்தால் தட்டி தடவி படுக்க வைக்க எதிரியை துரோகியை நாடி தம்மை நல்ல போர்வை போர்த்தி காட்டுவோர் கூட நாளை முள்ளி வாய்க்காலில் கண்ணீர் நாடகம் போடுவதுதான் துயரப்பட்டவனுக்கு மிகுந்த வலி.

முள்ளிவாய்க்கால் தமிழர் எல்லாவற்றையும் தவறவிட்ட இடம். அங்கு வேதனைப்படும் உள்ளங்கள் பலது வரும். வெந்த புண்ணில் வெல் பாச்சுவது போல் முகனூலில் கொண்டாட செல்லதீர்கள். வேதனையின் களம்.

எல்லாம் இழந்த இடத்திற்கு ஏதிலிகளாக ஒரு நாள் சென்று வாருங்கள்.,, போக்குவரத்துக்கான பணம், தொலைபேசிகள், ஆடம்பர உடைகள், உணவு, நீர் இன்றி சென்று வாருங்கள் அபொழுதாவது நாம் ஒன்றிணைய சந்தர்பம் வரலாம்.


21/04/2018

நாட்டின் நிலமை எங்கே செல்கின்றது.



இன்று நாட்டின் நிலமை எப்படி இருக்கிறது. அதனால் மக்கள் நிலை அவர்களின் மன நிலை எப்படி என்று ஆராய்ந்தால் ஏனோ தானோ என்ற நிலை தோன்றியிருக்கிறது.

செல்வாக்கு நிறைந்தவர்களிற்கு எதனையும் செய்யக்கூடைய நிலையும் பணத்தால் அடையாளங்களையும் மறைக்கும் நிலை அதிகரித்தும் காணப்படுகின்றது.

செல்வாக்கு மிகுந்த நபர்களால் எதனையும் இலகுவாக சாதிக்க செய்ய முடிகின்றது. அவர்களே நிரபராதிகளையும் கூண்டில் அடைக்கவும் முடிகிறது.

யார் யார் எல்லாம் அடிபணிந்து குனிந்து நடக்கிறார்களோ அவர்களே வாழ்ந்து வரக்கூடிய நிலை காணப்படுகிறது.

எந்த ஒரு துறையிலும் அற்பணிப்பு மிக்கோர் இல்லை.  அற்பணிப்பு உள்ளோர் போல் பாசாங்கும் அதனை வைத்து பணம், பட்டம், பதவி சம்பாதிக்க முடிகிறது.

ஊரில் அல்லது ஊடகத்தில் யாரும் இதனை தட்டி கேட்க முன்வந்தாலே அவர்கள் நசுக்கப்படுகின்றனர்.

ஊழல் பற்றி பேசும், பெண்ணியம் பற்றி பேசியும் அதனை தாமே அதிகம் மேற்கொள்கின்றனர். எல்லாம் பாசாங்கு உலகம் என்ற நிலையில். அரச அலுவலர்களில் நேர்மையானரும் ஒதுங்கும் நிலை உருவாகியிக்கிறது.

இப்போது அற்பணிப்பு செல்வாக்கால் சோபையிழந்து போகின்றது. நாட்டின் நிலை என்பதை விட சிறுவர்கள் உகண்டா, ஏன் சிரிய குழந்தைகள் போல் வந்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை.

11/03/2018

இலங்கையின் சிறப்புக்கள், வளர்ச்சிக்கு சாத்தியம்



ஆம் இலங்கையின் சிறப்பு வாழும் நிலைக்கான சூழல், வசதிகள், இயற்கை நிலைகள், கட்டுப்படுத்தும் வசதிகள், என ஒவ்வொன்றாக எடுத்தாலும் இலங்கை ஒரு சிறப்பு மிகு நாடுதான்.

இந்த நாட்டில் கடல் ஆகாய வளி மார்க்கங்கள் இன்னும் மெருகூட்டும். இப்படியான நாடில் ஏன் மக்கள் கடனாளி ஆனார்கள், ஏன் வாழ் முடியாயது தவிக்கின்றனர்.

காரணம் பலவும் கூறலாம் இதற்கு ஒரு சில காரணிகளே இந்த நிலைக்கு காரணம். மூவின மகள் மூவகை சமயம் இருந்தும் பிரச்சினை வருகிறது என்றால் யோசிக்கவேண்டியதுதான்.

இதனை தீர்க்க முடியாதா?? முடியும் என்றால் ஏன் இன்னும் அப்படி நடக்கவில்லை, என்று எல்லாம் எண்ண தோன்றும். எல்லாம் சுயநலன் சார்ந்த காரணிகள் இவற்றை எல்லாம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

இத்தீவு சொந்த காலில் நிற்குமா? அதற்கு வளி இல்லையா?? இங்குதான் எல்லாமே இருக்கிறது.

தமது நீண்டகால் அரசியல் இருப்பை விரும்பும் அரசியல் வாதிகள் சுயமாக முடிவெடுக்க வேண்டும். ஒருதடவை ஆட்சி செய்தாலும் அவ்வாட்சி காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து சட்டத்தை இயற்றவேண்டும்.

தமது பொருளாதார இருப்பையும் தமது வியாபாரத்தையும் இலக்காக கொண்டு ராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபடும் நாடுகளின் இயல்பில் இரு ந்து விடுபட வேண்டும்.

இறக்குமதிகளை முழுமையாக நம்பி இருக்கும் மக்களிற்கு உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்து வரும் ஆட்சியாள் இவற்றை மாற்றம் செய்யாத வகையில் சட்டம் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஓங்கி வளர்ந்தும் புல காட்சிக்கி தெரிந்தும் இன்னும் அதனை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காத இலஞ்ச ஊழல்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி பாரபட்சமின்றிய தண்டனை வழங்கவேண்டும்.

இவை சாத்தியமா என்றால் ஆம் என்பதே பதில். தற்போது இணைய மற்றும் செய்தி தணிக்கை என்பனவும் இந்த அவசர கால சூழலில் சாத்தியமான போது அவையும் இலகுவானதே. 

25/02/2018

இனி வருவார்களா முட்டாளாக்க.

அரசியல் என்பது மூன்றுமாதம் மக்களிடம் கெஞ்சி ஐந்து வருடம் மக்கள் கெஞ்சவைக்கும் ஒரு பரஸ்பர கெஞ்சல் விளையாட்டே அரசியல்

உள்ளூராட்சி தேர்தலிலும் அதுவே நடந்தது. இப்போது தேர்தல் முடிந்து 20 நாட்களாகியும் கட்சிகளுக்குள் இழுபறி நிலை முடியவில்லை.

இவ்வாறானவர்கள்  துரோகத்தனம், பழி வாங்கல்களிலும் ஈடுபட்டு ஒட்டுமொத்த வாக்களித்த மக்களுக்கும் தீமையே செய்வார்கள்.

மக்கள் தேவை என்ன இன்று மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை என்ன அதற்கு தீர்வு என்ன என்பதை விட தங்கள் இருப்பு தொடர் நிலை முக்கியம் என வேட்பாளர்கள் பயணிக்கின்றனர்.

பிரதேசபையினால் செய்யக்கூடியதை செய்து முடிக்கவேண்டியதுதான். அதற்குள்ளும் மடமைத்தனத்தை பாவித்து நான்கு வருடத்தை அநியாயம் செய்யபோகிறார்கள்.

இவர்கள் இனி மக்களை தேடி வர போவதில்லை. அடுத்த தேர்தலின் போதே வருவார்கள் மீண்டும் முட்டாள்கள் ஆக்க.


28/01/2018

தீர்கதரிசியின் வார்தை விளங்காதவர்களா??

இந்த உலகம் மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை . ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுய நலத்தையே  முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை, என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிர்ணயிக்கின்றன. ஆகையால் எமது போராட்டம் தார்மீக அறத்தினை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரிகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மேதகு வே.பிரபாகரன்.

இதனை எப்பவோ சொல்லியிருந்தும் மக்கள் ஏமாற்றும் இயல்புடையோரை நம்புகின்றனரா?

இல்லை வேறு தெரிவின்றி வாழ்கின்றனர். அதனை பயன்படுத்தியே இவர்கள் தமது அரசியலை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு நாடும் தமது தேசிய சுய நலத்திற்காக ஒன்றிணைந்தன. தமிழரின் போரை அழித்தன. தமிழரே உதவினர்.

தற்போது சேந்து ஒழித்த நாடுகள் தமது இருப்பிற்காக தமிழரை நாடுகின்ற போது அரசியல் வாதிகள் சுகபோகம் அனுபவிக்கின்றனர்.

கொத்து குண்டு போட்டாலும் அணுகுண்டு போட்டாலும் தமது தேசிய பொருளாதாரத்திற்கு பலன் இல்லாவிட்டால் யார் செத்தாலும் ஏனைய நாடுகளிற்கு எந்த சிக்கலும் இல்லை.

இதனை தமிழினத்தின் தலைவர் ஒருசில வார்த்தைகளில் உலகின் தன்மையை சொல்லியிருக்கிறார்.

இனியாவது மக்கள் தெளிவடைவர்.

24/01/2018

புலம் பெயர் தமிழர்கள் பிரிகின்றார்களா??

புலம் பெயர் தமிழர்கள் பிரித்தாளும் நடவடிக்கையில் செயற்படுகிறார்களா? இல்லா ஈழத்திற்காக குரல் கொடுக்கின்றனரா?

மக்கள் குழம்பிய நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன? பிரித்தானிய தமிழரும் அவுஸ்ரேலிய தமிழரும் எதிர்க்க தமிழர் அதிகம் வாழும் கனடாவில் இல ங்கை பாரளுமன்ற உறுப்பினர் சென்று உரையாற்றி வந்திருக்கின்றார்.

யாருடையா உரையாடலகா  இருந்தாலும் தமிழர்களின் ஒரே தலைவன்  பிரபாகரனையோ அல்லது உயிர்காத்த காவல் தெய்வங்கள் மாவீரர்கள் போராளிகள் பற்றியதாக இருக்கின்றது.

இங்கு சிலரின் இருப்புக்கும் சிலர் தம்மை முன்னிறுத்தவுமே இவ்வாறு செயற்படுகின்றனர்.

"புலிகளை நினைக்கும் போது வருவது என்ன அச்சம் எலிகளைப் போல் ஓடி ஒழிப்பதுதான் மிச்சம்" எனும் பாடல் அடிகள் இங்கு பலருக்கு பொருந்தும்.


இப்போது தமிழர்களினது நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் தகப்பன் இல்லாத பிள்ளைகளையும் தாயையும் போலவே ஈழமும் தமிழரும்.

இந்த நிலைக்கு பிள்ளைகள் ஒன்றிணைய வேண்டும். இல்லாது விட்டால் வளம்  எல்லாம் சுரண்டப்பட்டு விடும்.

புலம் பெயர் அமைப்புகாலும் புலம் பெயர் தமிழர்களுமே இதற்கு சரியான தீர்வை வைக்கமுடியும். அவர்களிடமே சாவி இருக்கிறது.

அதனை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

நட்டமடையும் இலங்கை

  இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ போன்ற பிரதான அரச நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ஏன் இவ்வளவு ப...