Posts

இனி வருவார்களா முட்டாளாக்க.

Image
அரசியல் என்பது மூன்றுமாதம் மக்களிடம் கெஞ்சி ஐந்து வருடம் மக்கள் கெஞ்சவைக்கும் ஒரு பரஸ்பர கெஞ்சல் விளையாட்டே அரசியல் உள்ளூராட்சி தேர்தலிலும் அதுவே நடந்தது. இப்போது தேர்தல் முடிந்து 20 நாட்களாகியும் கட்சிகளுக்குள் இழுபறி நிலை முடியவில்லை. இவ்வாறானவர்கள்  துரோகத்தனம், பழி வாங்கல்களிலும் ஈடுபட்டு ஒட்டுமொத்த வாக்களித்த மக்களுக்கும் தீமையே செய்வார்கள். மக்கள் தேவை என்ன இன்று மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை என்ன அதற்கு தீர்வு என்ன என்பதை விட தங்கள் இருப்பு தொடர் நிலை முக்கியம் என வேட்பாளர்கள் பயணிக்கின்றனர். பிரதேசபையினால் செய்யக்கூடியதை செய்து முடிக்கவேண்டியதுதான். அதற்குள்ளும் மடமைத்தனத்தை பாவித்து நான்கு வருடத்தை அநியாயம் செய்யபோகிறார்கள். இவர்கள் இனி மக்களை தேடி வர போவதில்லை. அடுத்த தேர்தலின் போதே வருவார்கள் மீண்டும் முட்டாள்கள் ஆக்க.

தீர்கதரிசியின் வார்தை விளங்காதவர்களா??

Image
இந்த உலகம் மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை . ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுய நலத்தையே  முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை, என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிர்ணயிக்கின்றன. ஆகையால் எமது போராட்டம் தார்மீக அறத்தினை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரிகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மேதகு வே.பிரபாகரன். இதனை எப்பவோ சொல்லியிருந்தும் மக்கள் ஏமாற்றும் இயல்புடையோரை நம்புகின்றனரா? இல்லை வேறு தெரிவின்றி வாழ்கின்றனர். அதனை பயன்படுத்தியே இவர்கள் தமது அரசியலை நடத்துகின்றனர். ஒவ்வொரு நாடும் தமது தேசிய சுய நலத்திற்காக ஒன்றிணைந்தன. தமிழரின் போரை அழித்தன. தமிழரே உதவினர். தற்போது சேந்து ஒழித்த நாடுகள் தமது இருப்பிற்காக தமிழரை நாடுகின்ற போது அரசியல் வாதிகள் சுகபோகம் அனுபவிக்கின்றனர். கொத்து குண்டு போட்டாலும் அணுகுண்டு போட்டாலும் தமது தேசிய பொருளாதாரத்திற்கு பலன் இல்லாவிட்டால் யார் செத்தாலும் ஏனைய நாடுகளிற்கு எந்த சிக்கலும் இல்லை. இதனை தமிழினத்தின் தலைவர் ஒருசில வார்த்தைகளில் உலகின் தன்மையை சொல்லியிருக்கிறார். இனியாவது ...

புலம் பெயர் தமிழர்கள் பிரிகின்றார்களா??

Image
புலம் பெயர் தமிழர்கள் பிரித்தாளும் நடவடிக்கையில் செயற்படுகிறார்களா? இல்லா ஈழத்திற்காக குரல் கொடுக்கின்றனரா? மக்கள் குழம்பிய நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன? பிரித்தானிய தமிழரும் அவுஸ்ரேலிய தமிழரும் எதிர்க்க தமிழர் அதிகம் வாழும் கனடாவில் இல ங்கை பாரளுமன்ற உறுப்பினர் சென்று உரையாற்றி வந்திருக்கின்றார். யாருடையா உரையாடலகா  இருந்தாலும் தமிழர்களின் ஒரே தலைவன்  பிரபாகரனையோ அல்லது உயிர்காத்த காவல் தெய்வங்கள் மாவீரர்கள் போராளிகள் பற்றியதாக இருக்கின்றது. இங்கு சிலரின் இருப்புக்கும் சிலர் தம்மை முன்னிறுத்தவுமே இவ்வாறு செயற்படுகின்றனர். "புலிகளை நினைக்கும் போது வருவது என்ன அச்சம் எலிகளைப் போல் ஓடி ஒழிப்பதுதான் மிச்சம்" எனும் பாடல் அடிகள் இங்கு பலருக்கு பொருந்தும். இப்போது தமிழர்களினது நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் தகப்பன் இல்லாத பிள்ளைகளையும் தாயையும் போலவே ஈழமும் தமிழரும். இந்த நிலைக்கு பிள்ளைகள் ஒன்றிணைய வேண்டும். இல்லாது விட்டால் வளம்  எல்லாம் சுரண்டப்பட்டு விடும். புலம் பெயர் அமைப்புகாலும் புலம் பெயர் தமிழர்களுமே இதற்கு சரியான தீர்வை வைக்கம...

பிணைமுறி சிறு விளக்கம்.

Image
பிணைமுறி என்றால் என்ன? பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும். மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அப்படியென்றால் நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று என நினைத்துக்கொள்க. அவற்றை சாதாரண மக்களைப் போன்றே வங்கிகளும் கொள்வனவு செய்யமுடியும். அதற்காக வட்டியும் வழங்கப்படுகின்றது. இதனால் பிணைமுறிகளை கொள்வனவு செய்வது மக்களைப் போன்றே, வங்கிகளுக்கும் முதலீட்டு உபாயமொன்றாகும். வங்கிகள் இந்த பிணைமுறிகளை கொள்வனவு செய்வதேன்? என நீங்கள் நினைக்கக்கூடும். வங்கிக் கிளைகளுக்கு கிடைக்கப்பெறும் வைப்புகளை கடன் கொடுத்தே அவர்கள் இலாபமீட்டுகின்றனர். அதேபோன்று, அவர்கள் இலாபமீட்டும் எதிர்பார்ப்பில் கடன் வழங்குகின்றனர். கடன் வழங்கியும் எஞ்சியிருக்கும் பணத் தொகையை கிடப்பில் வைக்காது அதனை பிணைமுறிகளில் முதலிடுகின்றனர். பிணைமுறிகளென்பது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கால எல்லையைக் கொண்டவைகள். திறைசேரி பில்கள் வருடமொன்றுக்கு குறைவான கால எல்லையைக் கொண்டதாகும்.  எக்ஸ் என்பவர் ஒரு இலட்சம் செலுத்தி பிணைமுறியொன்று ...

அரசியலில் மக்கள் தெளிவடைவது எப்போது.

Image
வடக்கு மக்களை பொறுத்தவரை அரசியலில் தெளிவு என்று சொல்லவே முடியாது. தெளிவு படுத்துவோரையும் ஏற்பதும் இல்லை. இம்மக்கள் சொற்படி நடப்போரே. அதனால் கண்மூடித்தனமாக ஓட்டை போட்டு துன்ப படுகின்றனர். இந்த நிலையே இம் மக்களின் வேதனைக்கு காரணம். சிறுபாண்மை கட்சிகளின் வாக்கு பலம் என்று உணர்ந்தும் பேரினவாதம் இவர்களினை வஞ்சிக்க தவறவில்லை. எப்போது அரசியலுக்கு யார் தேவை என்பதை இம்மக்கள் முடிவெடுக்கவேண்டும். அதில் கட்சி பேதங்கள் பார்த்து போடுகின்றனர் என்றால் மக்கள் தெளிவில்லை என்பதே. மக்கள் தெளிவு மிக முக்கியம் ஆட்சியாளருக்கு ஒரு பயம் வர மக்களால் மட்டுமே செயற்பட முடியும்.

படித்தவர்களிற்கு ஆப்பா??

Image
ஆம் எல்லோரும் யோசிக்காத விடயம். திசைதிருப்பல் என்பதும் இதுவே. படித்தோர் பலர் எதிர்பார்க்காத இடத்தில் தாக்குதல். இது யோசிக்க வேண்டிய தருணம்.  பல படித்த அலுவலகங்களில் வேலை செய்வோர் சம்பள உயர்வு என்ற நிலையில் குதுகலமாக்கி பொருட்களின் விலை அதிகமாகி இருக்கிறது.  இதனை உணரும் தருவாயில் எம்மவர் இல்லாத போது அவர்களும் பணம் ஒன்றே குறிக்கோள் எனும் போது பலருக்கு குழந்தை பாக்கியம் கூட இல்லாது செய்யப்படிருக்கிறது.  இங்கு பலரின் கருத்து விதி. ஆனால் ஒரு சிலர் சரி ஏற்று கொண்டாலும் பலரும் குழ ந்தை இன்றி இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது.  அதிலும் அரச அலுவலர்கள் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். அதிக மனாழுத்தமும் காரணம். இங்கு படித்தவர்கள் பணக்காரரே அதிகம் தாக்கப்படுகின்றனர். அவர்கள் பணத்திற்காக தமது இருப்பை இழக்க போகிறார்கள்.  ஒரே தீர்வு பழமை பின்பற்றுவதும் இயற்கை உணவு பழக் கவழக்கங்களினை பின்பற்றுவதுமே.  ஆனால் பணம் வறட்டு கௌரவம் பார்க்கும் எம்மவர் இக்கட்டுரையை கூட தூக்கி வீசலாம்.  ஆனால் உங்களை அறியாமல் நீங்கள் அழிவதை தடுக்கமுடிய...

சாக்கடையில் ஏன் படித்தவர்கள்.

Image
படித்தவர்கள் அதிகமாக அரசியலில் இருக்கின்றனர். ஏன் எல்லோரும் சாக்கடை எனும் இடத்தில் கொட்டகை போட்டு படுத்திருக்கின்றனர். அங்கேதான் பாதுகாப்பு மற்றும் பணம் அதிகம். இக்கதையை படித்தால் புரியும். சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் .... . மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking." . அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்.... . இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained"" . கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிர...