படித்தோரும் பணம் படைத்தோரும் முட்டாள்களே
இலகுவில் ஏமாறும் நிலையில் படித்தோரும், செல்வந்தருமே இலங்கையில் இருக்கிறார்கள். இது சாத்தியமான உண்மை. இங்கு இவர்களே எந்த ஒரு விடய்த்திலும் தம்மை முதலில் புகுத்துவார்கள். அதில் ஒன்று பிரமிட்டில் முதலில் புகுந்து இன்று திக்குமுக்காடி போயுள்ளனர். நாய் இறைச்சி, மருத்து உணவு, கடைச்சாப்பாடு (உண்மை, பொய் வேறு) மாட்டுவோர் இவர்களே. ஏழைகளுக்கு இது எட்டாக்கனிதான். ஏன் 5000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு பசியோடு திரும்பி வரும் முட்டாள்தன அறிவு படைத்தோர்கள் இவர்கள். இப்படி எல்லாம் முட்டாள்தனமாக வாழ்வோர் புத்திசாலி என வேடம் உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் கொண்டு ஆடம்பரமின்றி வாழ்வோர் ஏழைகள். இவர்கள் முட்டாள்தமான குளிரூட்டிகளை கூட பாவிப்பதில்லை. அவர்கள் பீட்சா, kfc சிக்கன் ஏதும் உண்பது கூட இல்லை. தமது பணத்தை வேறு யாருக்கும் கௌரவம் என்ற பெயரில் வழங்காதோர். கிளப் என்று சொல்லி அமெரிக்காக்கு பணம் அனுப்பும் படித்த செல்வம் படைத்த முட்டாள்களும் உண்டு. அதிகம் ஏமாறும் இவர்கள் நல்லவர்கள் சுயமாக வாழ்வோரை பார்த்து சிரிப்பதே வேடிக்கை. இவர்கள் முட்டாள்தனம் இன்னும் அதிகம்.