தனியார் வங்கி தலைவரை உருவாக்குமா???
தனியார் வங்கியின் விடயம் எல்லோரையும் உணர்ச்சி பொங்க வைத்ததாக இருந்தது. இந்த நடவடிக்கை பிறருக்கு பாடமாகுமா?? இல்லா சிரிப்பாக விளையாட்டாக மாறுமா??? இந்த சந்தேகம் ஆரம்பத்தில் இருக்க வாய்ப்பில்லை.
அவ்வளவிற்கு முகனூல் கலங்கி கலக்கிக்கொண்டிருந்தது. வங்கி கணக்கு மூடப்பட்டன. அதனை சிலரே செய்தனர். மிகுதி பேர் என்ன செய்வது என்ன நடக்கிறது என அறிய வாய்ப்பு குறைவாக இருந்தது.
எந்த பத்திரிகையும் கொட்டை எழுத்தில் பிரசுரிக்கவில்லை. வானொலிகளும் இதனை அதிகளவில் கூறவில்லை. அதற்கு மேல் கற்றோர் பலரும் இணைய உலவிகளாக இருக்கும் பலரும் இதனை கைக்கொண்டனரா என்றால் அதுவும் சந்தேகமே..
இத்தனைக்கும் மேல் இது ஒரு சிறந்த யுத்தமாக இருந்தாலும் இந்த யுத்தத்தை முன்னெடுத்து செல்ல யாரும் முன்வரவில்லை. அந்த முன்வருகை மிக முக்கியமானது.
இந்த நடவடிக்கை ஒரு தொடராக இடம்பெறவேண்டும். அப்போதுதான் இதன் தாக்கம் ஏனையோரையும் அதிகளவில் தாக்கும். இந்த நடவடிக்கையின் followup இல்லாமை ஏளனத்தையும் கேலியையும் ஏனையோருக்கு எதிராக உணர்ச்சி வசப்படும் போதும் ஏற்படுத்தும்.
அது ஒட்டுமொத்த இனத்தையுமே பாதிக்கும். எனவே ஒரு நடவடிகை எடுக்கும் போது அதனை தொடர்ந்து செய்யும் நோக்கில் எடுக்கவேண்டும். பிறர் பொறுப்பெடுப்பார்கள் என்று விடாது செயலில் இறங்க வேண்டும்.
அப்போது சிலவேளை ஒரு தலைவன் உருவாகலாம். அந்த அகிம்சை போராட்டாம் வெல்ல வாய்ப்பும் அதிகம் இருக்கும். அந்த தலைவன் ஒன்றின் தொடர் நடவடிக்கையாலேயே உருவாக முடியும்.
பொறுபதிலும் தொடர்வோம்.
தொடர் நடவடிக்கையும், முக்கியம்
ReplyDelete