முரண்பட்ட குடும்பத்தில் புகுந்த தளபதி. கணவர்கள் புலம்பல்








கணவன் மனைவிக்கிடையில் குடும்ப தகராறு ஏற்பட்டால் மூன்றாம் நபர்கள் புகுந்துவிடுவது இலகு. அதன் பின் அந்த பெண்ணிற்கு அன்பு ஆதரவு பணம் இவை கிடைக்கும் போது முழுவதுமாக அப்பெண் மாறிவிடுவாள். இது பெரும்பாலும் குடிகார ஆண்களின் வீட்டில் இடம்பெறுவதுண்டு.

அவர்கள் குடித்து விட்டு தம்மை யாரும் புடுங்கமுடியாது, தானே அறிவாளி நேர்மை கௌரவம் என மதுவில் மார்தட்ட அவர் மனைவியின் நடவடிக்கை வேறு ஒருவருடன் உல்லாசமாக இருக்கும்.

இத்தவறிற்கு காரணம் அந்த ஆடவனே தவிர புகுந்த மற்றவனோ, அல்லது பெண்ணோ இல்லை. அப்பெண் வாழ்வதற்கு தேவையானை கிடைத்த இடம் எதுவோ அங்க அவள். பழமரம் தேடும் பறவைபோல்,

இன்று குடிகாரர் போல் இருக்கும் தமிழ் அரசியவாதிகள் நிலையும் மக்கள் நிலையும் இவ்வாறு இருக்க துரோகிகள் எதிரிகள் என்றோர் மக்களின் மனங்களில் புகுந்தனர். இது ஒரு சாதாரண உளவியல்தான்.

இதனை பயன்படுத்தி அன்பை சூறையாடிய இராணுவ தளபதிக்காக அழுவதும், தான் வீரனாக இருந்து தான் அழுவது தெரிய கூடாது என்று கறுப்பு கண்ணாடி வேறு அணிந்துள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் வாய்ச்சொல் வீர அரசியல் வாதிகளை விட மிக அன்னியோன்னியமாக வாழ்ந்திருக்கிறார்கள். இச்சம்பவம் விமர்ச்விக்கவோ அல்லது முகனூலில் லைக் கொமற் அதிகரிக்கவோ இல்லை.

சிந்திக்கவும் விட்ட தவறுகளை நிவர்த்திக்கவும் இழந்த அன்பை அதிகரிக்கவும் வேண்டும்.

தேர்தலில் வாக்கு எமக்கே என்று புலம்பும் உங்களுக்கு விவாகரத்து வழங்கி கள்ள கணவனுடன் போவது போல் போகும் போது புரியும். அதற்கு நேற்றய மழையில் முளைத்த மொட்டுக்கு ஆசனம் கிடைத்ததும் நினைவு கூரத்தக்கது.

எல்லாம் போனபின் அணை போட முடியாது. வாழத்துக்கள் அரசியல் வாதிகளின் முடிவிற்கும் தமிழ் மக்கள் மாற்று மொழியிலாளர்களோடு ஒன்றிணையவும் என கூறி முடிப்பதே சரியாய் இருக்கிறது.




Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்