விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே
விளம்பரம் என்பது இன்று பொருளாக இருந்தாலும் சேவையாக இருந்தாலும் மிக முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழர்களுடாக எந்த ஒரு விளம்பரத்தையும் கட்டணமின்றி இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று சிலர் உணர்ந்திருப்பதோடு மேற்கொண்டும் வருவேன்றனர்.
அண்மையில் தென்னிலங்கை உணவகம் ஒன்றிற்காக பல பேர் தங்கள் முகனூலில் எதிர்பதாக கூறி விளம்பரத்தையும் உச்சத்தையுமே கொடுத்தனர்.
சிங்களவரை குஷிப்படுத்த வேலையாட்களை தமிழில் பேசவேண்டாம் என்று கடைக்குள்ளேயே பதாகை வைக்கும் இந்த உணவகத்தை உலகளாவிய தமிழர்கள் கண்டிக்கவேண்டியதும் தண்டிக்கவேண்டியதும் தட்டிக்கேட்க வேண்டியதும் கடப்பாடாகிறது.
மேலும் நாங்கள் செய்யவேண்டியது
Google - peppermint cafe srilanka - review - type ur words and attach this photo.
Google map இலும் இதையே செய்யலாம்.
நான் செஞ்சிட்டேன்.நீங்க வைச்சு செய்யுங்க.இருக்கிற எரிச்சலுக்கு அடிச்சு வெளாட நல்ல இடம்.
இப்படி பலர் பேசி பேசியே இந்த பேபர்மின்ற் கபே பலரது முகனூலில் விளையாடியது.
தமிழருக்கு எதிராக ஒன்றை தொடங்கினால் இலஙகையில் வெற்றி அடையலாம் என்பதும் அதன தமிழரே விளம்பரம் செய்து தருவார்கள் என்பதற்கு இதை விட சான்று வேறு தேவையில்லை.
விளம்பரம் இல்லாது இதனை வேறு முறைகளுக்கூடாக தீர்க்கலாமா என்று யோசிப்பதில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கூடாக கடந்து போய்விடுவர். இந்த உணவகம் இனி உயர்மட்ட வளர்ச்சியடைய தமிழரே காரணமாவர்.
அடுத்த கட்டமாக இந்த செயற்பாட்டை மறந்து வேறொன்றினுள் புகுந்து அடுத்த வேலையை பார்பார்கள் எதிலும் தொடர்ச்சி இருப்பதில்லை.
Comments
Post a Comment