சமூக வலைத்தளத்தினை நகர்த்துவதில் உள்ள சிக்கல்கள்
சமூக வலைத்தளங்களை கொண்டு செல்லும் போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும். அவை மிக பிரதானமான சிக்கல். இந்த சிக்கல்களை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அவற்றை வரும்போது பார்ப்போம் என்று இறங்கினால் வெளியேறும் போது ஒன்றுமே இருக்காது. யூரியுப், ரிக்ரோக், பிளக்கார் போன்றவற்றை நிர்வகிப்பு செய்வோர் இந்த பிரச்சினைகளை அதிகம் எதிர் நோக்கவேண்டி ஏற்படும். இந்த தலங்களில் எதுவும் பதிவிடலாம் எனும் நோக்கில் பதிவு செய்ய முடியாது அவ்வாறு பதிவு செய்தால் தளங்களை தடையும் செய்வார்கள். முதலில் தற்காலிக தடை என்பார்கள் சமூககத்திற்கு ஏற்ற பதிவு இல்லை என்பார்கள். (Community sensitive) என்று காட்டி தடையும், முழுமையான தடையும் ஏற்படலாம். பாலியல் சார் பதிவுகள், தனிநபர் சார் பதிவுகள், நாட்டின் இறமை, அரசியல், தீவிரவாத கருத்து சார் படங்கள் என இவர்கள் சொல்லாமலும் பலதிற்கு தடை போடுகிறார்கள். நகைச்சுவை சார் சொந்த பதிவுகளை அதிகமாக பகிருங்கள். சொந்த படங்களை அதாவது நீங்களே உங்கள் கமெராவில் பதிவு செய்த படங்களை பதிவேற்றுங்கள். இல்லை எனில் உங்கள் தளங்களை நீங்களே அழிப்பதாகிவிடும். இந்த பிரச்சினைகளில் விளையாட்டு துப்...