வீடு திட்டமிட்டு உடைக்கப்படுகிறதா?? இல்லா தமிழ் மக்களின் அசமந்த போக்காலா??? அதைவிட அரசியல் வாதிகளின் சுய நலபோக்கு, அரசியல் இருப்பு இப்படி ஏதுமா??
இந்த காரணங்கள் வெளிப்படையாக தெரிந்தாலும் இவை போதும் வீடு உடைவதற்கு. இன்னும் ஓர் இரு தேர்தல்களில் அதன் உச்சம் அதிகமாகும்.
இந்த வீட்டை ஏன் உடைக்கவேண்டும் உடைப்பதன் பலன் என்று பார்த்தால் பேரிபவாதிகளிற்கு இது மிக அவசியம்.
இவ்வீடு உடையும் போதே பேரினவாதிகள் இலகுவாக தமிழர் தாயகத்தில் இலகுவாக வெற்றி கொள்ள முடியும்.
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட இந்த வீடு மக்கள் தற்போது புலிகளிற்காவே வாக்களிக்கின்றனர். இதுதான் யதார்த உண்மை. இந்த உண்மை புரிந்த பேரினவாத கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து தமிழ் தலைவர்கள் பிரபலமானோர் ஆகியோரை பாவித்தே இந்த காய் நகர்த்தல் இடம் பெறுகிறது.
அதற்குள்தான் சி.வி விக்கினேஸ்வரன், சுமந்திரன் பகடைக்காய்களாகினர். இவர்கள் இருவரும் ஒன்றிணைவு மிக அவசியம் என்பதோடு காலத்தின் தேவை.
இந்த வீடு உடையும் பட்ட்சத்தில் சைக்கிள் பயணிக்கும். வீடு உடையும் தறுவாயில் சைக்கிளின் எழுச்சி பெரும் தலையிடி பேரினவாதிகளுக்கு.
வீட்டை உடைப்போருக்கும் தலையிடிதான் சைக்கிள். பேரினவாதிகள் எவ்வாறு ஒன்றாக பயணிக்கின்றனரோ உடைக்க, அதே போல காப்பாற்ற இவர்கள் ஒற்றுமை பட வேண்டும்.
எல்லாம் திட்டமிட்டே நடைபெறுகிறது என்பதை மட்டும் மறவாதீர்கள்