24/08/2021

காய் நகர்த்திய மக்களசமரவீர

 







மங்களவின் மரணமும், ராஜபக்ஸர்களின் அதிஸ்டமும், மாற்று அரசியலின் வெற்றிடமும்...


இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் கொரோனா காவுகொண்டது. 


”குழந்தைகளே, உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வணங்குங்கள். ஆனால், அரசியல்வாதிகளை வணங்காதீர்கள். அவர்களை நீங்கள்  வழிபட தேவையில்லை.”  Children, Worship your parents and teachers. But, do not worship politicians. You do not need to worship them. கூறிய மங்கள சமரவீரவும் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டார்.


மங்களசமரவீரவுடனான அனுபவப் பகிர்வுகளும், அவரது அரசியல் செயற்பாடுகளுமே இன்றைய ஊடகபரப்பை, சமூக வலைத்தளப் பதிவுகளை ஆக்கிரமித்துள்ளன.


2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ,  ஜனாதிபதியாக அரியாசனம்  ஏறுவதற்கு காரணமாணவர்களில் முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீரவும் விபரீத விபத்தில் மரணித்த சிறீபதி சூரியாராட்சியும் முதன்மையானவர்கள். 


நான் நினைக்கிறேன்  ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக 2005ன் நவம்பர் மாதத்தில் ஒருநாள்,  இலங்கை முழுவதுமாக இருந்த  ஊடகவியலாளர்கள் அனைவரும் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். அனைத்து  பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த  நூற்றுக்கணக்காண ஊடகவியலாளர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டனர். அந்த அழைப்பின் ஊடான முற்றுகையில் நானும் கலந்துகொண்டேன். 

 

அப்போ  இருவர் நெற்றியில் வியர்வை சிந்த ரீசேட்டுகளுடன் மிகச் சாதாரண மனிதர்களாக பெரும் ”கிடாரங்களில்” உணவு வகைகளை கொண்டு வந்து இறக்கிக்கொண்டிருந்தனர். அலரிமாளிகையின் பணியாளர்களாக, வரவேற்பாளர்களாக, உணவு பரிமாறுபவர்களாக என பலவாகி,   ஊடகவியலாளர்கள்  அனைவரையும் ஆட்கொண்டவர்களாக மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியாராட்சி சுழன்று கொண்டிருந்தனர்.   


இந்த நிகழ்வு பற்றி  விமர்சித்த அன்றைய ஊடகங்கள் பல, அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுக்கு  “தன்சல” தானம் வழங்குகிறார்கள் என  குறிப்பிட்டு இருந்தன.  


அந்த வகையில் அப்போதைய பிரதமர் மகிந்த ராசபக்சவின் ஜனாதிபதி  வேட்பாளருக்கான பிரச்சார மேலாளர்களாக மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியாராட்சியும்  பணியாற்றி இருந்தனர். 2005 நவம்பரில் மகிந்த ராசபக்ச தேர்தலில் வெற்றியடைந்ததை அடுத்து, அவரது அமைச்சரவையில் மங்கள சமரவீர வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக சிறீபதி சூரியாராட்சியும் நியமிக்கப்பட்டனர்.


2007 ஜனவரியில் வெளியுறவுத்துறை அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட போதும், துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார். 


2007 பெப்ரவரி 9 இல், மகிந்த ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, அமைச்சர்கள் அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோருடன், மங்கள சமரவீரவும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.  இதனை அடுத்து சுந்தந்திரக் கட்சி (மகாசன) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். 


இதன்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும், அவரது சகோதரர்களுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஒருவரான சிறீபதி சூரியாராட்சி 2008ல் நடந்த விபரீத விபத்தில் பலியானார். 


குறிப்பாக  2005 ஜனாதிபதி தேர்தலில் தான் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்ட போது, மகிந்த ராஜப்பக்ச இத்தேர்தல் வெற்றிக்காக, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார். அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல்  செய்தார் என  இவர்கள் இருவரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள்.


இனி சற்று பின்னோக்கய வரலாற்றுக்கு செல்வோம் ஆயின், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மகாநாம சமரவீர, முன்னாள் மாத்தறை நகரசபை உறுப்பினர் கேமா பத்மாவதி அமரவீர ஆகியோரின் மகனான மங்கள சமரவீர 1983ஆம் அண்டு மாத்தறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அரசியலில் நுழைந்தார். பின்னர் கட்சியின் துணைச் செயலாளர், ஒருங்கிணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார்.


1989களின் பின் ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போது, தற்போதைய பிரதமரும் அவரது நண்பருமான மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்துமனித உரிமை செயற்பாட்டாளராகவும் செயல்பட்டவர்.


1989 தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற அவர்,  1994 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  அதே அமைச்சரவையில், பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சராகவும், பின்னர் துணை நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.


2001 இல் கட்சி  SLFP தோல்வியடைந்ததை அடுத்து, சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 2004 இல் சந்திரிக்காவின் அமைச்சரவையில் துறைமுக, வான் போக்குவரத்து, மற்றும் ஊடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


எனினும் 2005 யூன் மாதம், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன்  ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, ஊடக அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது, ஆனாலும் அவர் துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் முரண்பட்ட இவர் சந்திரிக்கா 2006வரை ஜனாதிபதியாக தொடரமுடியாது 2005டன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது என வாதிட்ட  மகிந்த தரப்பினரை ஆதரித்தவர். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் ஆலோசனையை பெற்று 2005டன் சந்திரிக்காவை வீட்டுக்கு அனுப்பியவர்களில் மங்களவும் முதன்மையானவர்.


ஓர் அரசியல்வாதி என்ற முறையில் ஆரம்பத்தில் மங்கள சமரவீரவும் இலங்கையின் ஏனைய சராசரி அரசியல்வாதிகள் போன்றே ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகவே இருந்தார். 


பலம் வாய்ந்த ஓர் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அடாவடித்தனங்கள் பற்றியும், இரகசிய அரசியல் பேரங்களை நடாத்தி, மிரட்டி, ஆசை காட்டி, எதிரானவர்களை தமது வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர் எனவும் விமர்சனங்கள் உண்டு.


ஊடகத் துறை அமைச்சராக இருந்த போது  ஊடக நெறிமுறைகளை மீறினார், ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் நிலவியிருந்தன.  


குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெ்ற கொடூர யுத்தத்தின் போது ஊடக தணிக்கைகளை கடுமையாக பிரயோகித்தவர் என்பதோடு, அப்போதைய யுத்தத்திற்கு கூட்டு பொறுப்பேற்க வேண்டியவராகவும் இருந்தார்.


2010 இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். 2015 ஜனாதிபதி   தேர்தலில், எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளராக இருந்து அவரின் வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார்.  2015 ஜனவரி 12 இல், மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் மங்கள வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


2019 ஜனாதிபதி  தேர்தலை அடுத்து, மங்கள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிதாக உருவான ஐக்கிய மக்கள் சக்தியில் சேர்ந்தார்.


எனினும் 2020 நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்ற பின்பும்,  தான் போட்டியிடப் போவதில்லை எனவும்,   நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாகவும்  அறிவித்தார்.


ஒரு லிபரல்வாதியான மங்கள தப்பான இடத்தில் நின்று அதனை சரியென நிறுவும் வல்லமை கொண்டவர்.  தான் ஒரு மாற்றுப் பாலின ஈர்ப்பாளர் என்ற விடயத்தை எவ்வித மனத் தடைகளும் இல்லாமல் பகிரங்கமாக கூறிக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர். 


2007ன் முன்  மங்களவின் அரசியல் என்பது இனவாத தளத்தில் நின்று அதனை எதிர்க்காது, சராசரி அரசியல்வாதியாக தொடர்ந்தாலும், 2007ன் பின்னரான அரசியல் இனவாத தளத்தில் நின்று அதனை துணிவுடன் எதிர்க்கும் அரசியலாக மாற்றம் கண்டது. அதன் தொடர்ச்சியே சஜித் பிரேமதாஸாவுடனான  அரசியல் தொடர்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிழைப்புவாத அரசியலுக்கு நேர் எதிர் திசையில் தன் பயணத்தை மங்கள தொடர்ந்தார்.


விசேடமாக இலங்கை அரசியல் சமூகத்தில், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு வருபவர்களுக்கு – எதிராக   தனது ஜதார்த்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். 


அத்துரலியே ரத்ன தேரர் போன்ற இனவாத செயற்பாட்டாளர்கள்,  கார்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,  அஸ்கிரிய, மல்வத்த பீடத்தினர்  உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுக்கு எதிராக, கருத்துகளை துணிவுடன் தெரிவித்து வந்தவர். 


மங்கள சமரவீரவின் குடும்பத்திற்கு வல்வெட்டித்துறையுடனும் தொடர்பு இருக்கிறது.  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த 'ஆழிக் குமரன்' ஆனந்தன் மங்களவுக்கு மாமா முறை அதாவது மங்களவின் அத்தையின் கணவர் என கூறப்படுகிறது.

தனது தந்தையின் சகோதரி மானெல் வல்வட்டித்துறை தமிழரான வழக்கறிஞர் குமார் ஆனந்தனை மணம் புரிந்தார். அவர் உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர்... அந்தப் புதிய தம்பதிக்கு முதலில் தங்கள் குடும்பத்தில் இரு கரம் நீட்டி வரவேற்பளித்தவர் தனது அம்மா எனவும், தன்னுடைய பல நற்பண்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டதாக  மங்கள குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியாமானதொரு வகிபாகத்தைக் கொண்டிருந்த  மங்கள சமரவீர சந்திரிக்கா - மகிந்த – மைத்திரி, ரணில் ஆட்சி காலங்களில் இலங்கையின் பிரதான கட்சிகளில், அரசியல் காய் நகர்த்தல்களில்   முக்கிய பங்கு வகித்தவர். 


தனது இறுதிக்காலத்தில் அனைவரையும் அரவணைத்து  ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டும் எனக்  கனவு கண்டவர்.


இலங்கையின் இரண்டு பிரதான ஆட்சி மாற்றங்களின் சூத்திரதாரிகளில் ஒருவராக விளங்கிய மங்கள சமரவீர 2024ல் அல்லது அதற்கு முன்னதாக மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தவர்.  அரசியல் காய் நகர்த்தல்களை மேகொண்டவர். ராஜபக்ஸர்களுக்கு எதிரான இன மத பேதமற்ற ஒரு பரந்துபட்ட  தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான உரையாடல்களில் ஈடுபட்டவர்.  இருந்த போதும் ராஜபக்ஸர்களின் அதிஸ்ட்டம் மங்களவின் துர் அதிஸ்டமாகிப் போனது.


சமகால அரசியலில் மங்கள சமரவீரவின் வெற்றிடம் மிகப்பெரிய அரசியல் வெற்றிடமே!

23/08/2021

முடக்கலில் அனுமதித்த தொழில்கள் காரணம்?


 இந்த முறை நாடு முடக்கப்பட்டுள்ளபோது ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இந்த இரண்டு துறைகளும் எமது நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகும். நோய்த் தொற்றினால் மக்கள் மரணிக்கிறார்களோ, இல்லையோ இந்த துறைகளை தற்காலிகமாகவேனும் முடக்க நேர்ந்தால் அரசாங்கத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும். அதனால் அரசுக்கும் வேறு வழி இல்லை.


ஜனாதிபதி தனது விசேட உரையின்போது ஆடை ஏற்றுமதித் துறையானது நாட்டிற்கு ஆண்டொன்றிற்கு 5 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியையும், உல்லாசப் பயணத் துறை 4.5 பில்லியன் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருவதாக தெரிவித்துள்ளார். அரசு உள்நாட்டில் ஏற்படும் செலவீனங்களை பணத்தினை அச்சிட்டு தற்காலிகமாக சமாளித்து வருகிறது. அதனால் ஏற்படும் பணவீக்கம் என்பது இரண்டாம் பட்சம். ஆனால் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் இந்த முறை பயனற்றது. ஏனென்றால் அரசினால் டொலர்களை அச்சிட முடியாது. எனவே அரசு புதிதாக அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அத்துடன் தேவையற்ற அந்நியச் செலாவணியின் செலவுகளையும் தடுக்க வேண்டும். 


ஆடைகள் ஏற்றுமதிக்கு இலங்கைக்கு பெருமளவில் உறுதுணையாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள GSP Plus சலுகையாகும். 2020 ஆம் ஆண்டில் ஆடைகள் ஏற்றுமதியானது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 1,021 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகளுக்கு 2,329 மில்லியன் டொலர்களாகவும் இருந்தது. ஆனால் சீனாவிற்கான ஏற்றுமதியோ வெறும் 62 மில்லியன் டொலர்களே. எனவே மேற்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் மிகவும் குறைவானதே.


அது போன்று இலங்கையின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை கருத்தில் கொண்டாலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் 36% இனையும், ஐரோப்பிய யூனியன் 26% இனையும், இந்தியா 8.3% இனையும் வகிக்கின்றது. இங்கும் சீனாவுக்கான ஏற்றுமதி வெறும் 3.3% தான்.


2019 ஆம் ஆண்டு உல்லாசப் பயணிகளின் வருகையில் ஐரோப்பிய யூனியன் 50% இனையும், அமெரிக்கா 15% இனையும், ஆசிய பசிபிக் நாடுகள் 25% இனையும் கொண்டிருந்தன. சீனா ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளினுள் 8.8% இனையே கொண்டிருந்தது.


மேலும் இலங்கையின் கடன்களை எடுத்துக் கொண்டால், அவற்றின் மொத்தப் பெறுமதி ஏறக்குறைய 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக இருக்கும் நிலையில், இவற்றில் ஏறக்குறைய அரைவாசி சந்தையில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலமே பெறப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 13% கடன்கள் பெறப்பட்டுள்ளன. யப்பான், சீனா நாடுகள் முறையே மொத்தக் கடன்களில் தலா 10% இனை வழங்கியுள்ளன. மிகுதியான கடன்களே உலக வங்கி, இந்தியா, மற்றும் ஏனைய இடங்களில் பெறப்பட்டுள்ளன.


இப்படி எந்த ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டாலும், எமது நாடு அதிகம் நன்மைகளை மேற்கு நாடுகளின் மூலமே அடைந்து கொள்கிறது. ஆனால் இலங்கை மேற்குலகு சார்ந்து எப்போதும் தனது பொருளாதார கொள்கைகளை வகுப்பதில்லை. ஏனென்றால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் உள்நாட்டில் கட்டியெழுப்பியுள்ள அரசியல் அவ்வாறானது. மேற்குலகை எதிராளியாகவும், சீனாவை நண்பனாகவும் காட்டி அரசியல் செய்யும் எந்தவொரு அரசியல்வாதியும் சீனாவில் தமது இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு முரண்பாடுதான். அவர்கள் எல்லோரும் மேற்கு நாடுகளிலேயே தங்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள்.


மேற்கு நாடுகளுடன் வர்த்தகத்தினை பேணிக் கொள்வது அப்படி ஒன்றும் இலகுவான காரியமுமல்ல. மேற்கு நாடுகள் வேறு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடும்பொழுது சில விடயங்களை எதிர்பார்க்கிறன. குறிப்பாக சட்ட ஆட்சி, மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்ற அடிப்படை விடயங்களை அந்த நாடுகள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதற்கு உதாரணமாக GSP Plus இனை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கும் தகைமைகளைக் குறிப்பிடலாம். இந்த நிபந்தனைகளை புறம் தள்ளி இலங்கையுடன் வர்த்தக உறவினை பேணுமாறு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு எமது நாட்டின் பேரம் பேசும் தகுதி இல்லை.


மேற்கு நாடுகளும் அவை சார்ந்த நிறுவனங்களும் கடன்களை வழங்குவதற்கும் சில அடிப்படை நியமங்களை விதித்திருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிப்பதும் அவற்றில் ஒன்றுதான்.


ஆனால் சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடன்கள், இலங்கை பெற்றுக் கொள்ளும் குறுங்காலக் கடன்களை விட நியாயமானவை. நீண்ட கால நோக்கில் நலன் தருபவை. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இலங்கை அரசியல் இல்லை.


அரசியல் கொள்கைகளால் ஏற்படும் முரண்பாட்டால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை இலங்கை சீனாவின் மூலம் அடைந்து கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் சீனா உதவிகளை, இலங்கையுடன் தனது வர்த்தகத்தினை அதிகரிப்பதன் மூலம் வழங்கவில்லை. மாறாக கடன்களை வழங்கியே அந்த இழப்புகளை இலங்கை தற்காலிகமாக சரிசெய்ய உதவுகிறது. உதாரணமாக GSP Plus இனை இலங்கை இழக்க நேர்ந்தால், அதனூடாக நடைபெறும் ஏற்றுமதிகளை இலங்கையால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது. ஆனால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை தற்காலிகமாக சீனாவின் கடனுதவியுடன் சமாளித்துக் கொள்ள இயலும். இது ஒருவர் தனது வியாபாரம் வீழ்ச்சியடையும் போது, கடன்கள் வாங்கி தனது செலவுகளை சமாளிப்பதற்கு ஒப்பானது. ஆனால் அவரால் தனது வியாபரத்தை அதிகரித்து அதன் வருமானத்தின் மூலம் கடன்களை செலுத்த முடியாமல் போனால், இறுதியில் அவர் முழுமையாக வியாபாரத்தையும் இழந்து தனது சொத்துக்களையும், வியாபாரத்தையும் எல்லாவற்றையும் விற்று கடன்களை செலுத்துவதுதான் அவருக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழியாக இருக்கும். 🤔🤔🤔


09/08/2021

கிளப்கவுஸ் செயலி பற்றி

கிளப்கவுஸ். Clubhouse



கிளப்கவுஸ் எனும் ஒரு அப்ஸ் அறிமுகப்படுத்தபப்ட்டிருக்கிறது. அந்த அப்ஸ் உருவானது அதன் வளர்ச்சி, பறியெல்லாம் பல விடயங்கள் உண்டு


இந்த கிளப்கவுஸ் ஒரு கூட்டத்தொடர் நடத்துவது போல் இருக்கும். இங்கு ஒரு தலைப்பில் உரையாட முடியும், கூட்ட தொடர் போல இதனை நிகழ்த்த முடியும்.









இங்கு moderator என்று ஒருவரோ  அல்லது சிலரோ இருக்க முடியும். இதில் மூன்று வகையானயோனோர் இருப்பார்கள். 

1 பேசும் குழு அதில் moderators இருப்பார்கள்

2 பார்வையாளர் பகுதி

3 வருவோர் போவோர்.


இங்கு பேச வேண்டும் என்று நினைப்போர் கையடையாளத்தை தட்டி தாம் பேச இருப்பதை காட்ட முடியும். 


பின் தொடர்தல் மூலம் யார் யார் என்ன குழுவில் இருக்கிறார்கள் என்று அறிந்து அந்த அந்த குழுக்களில் சென்று கேட்கவோ பேசவோ முடியும். இங்கு தனி நபர் பிந்தொடர்தல், குழு பின் தொடர்தல் என பல உண்டு.


உந்த கிளப்கவுஸ் அப்சில் உங்கள் சுயவிபரம், இடுவதன் ஊடாக உங்களை நீங்கள் யார் என்று காட்ட முடியும், அதே போல் tweeter, Instagram போன்ற செயலிலளையும் இணைக்க முடியும். யூரியுப் செயலியின் இணைப்பையும் சுயவிபர இடத்தில் பதிவிடலாம்.


இந்த செயலியில் பல நல்ல விடயங்களும் உண்டு. இந்திய ஏனைய நாட்டு நண்பர்களை யும் இணைத்து கொள்ள முடியும். இங்கு தேவையற்ற விடயங்களும் பேசப்படும்.

சினிமா

தமிழ்தேசியம்

திராவிடம்

இந்திய அரசியல்

தமிழிலக்கியம்

பண்பாடுகள்

ஆங்கில பேச்சு

சோதிடம் என பல விடயங்கள் பேசப்படும் நீங்கள் விரும்பும் துறையில் இணைய முடியும். இந்த செயலி பற்றி ஏனையவற்றை கொமன்ற்றில் கேட்கலாம்.


Chatting வசதியும் உண்டு. தனியாக ஒருவருடன் பேசும் வசதியும், பார்வையாளர் வர முடியாத குழுவும் உருவாக்க முடியும். 


28/06/2021

Living together ஒன்றாக வாழ்தல்

 Living together. )ஒன்றாக வாழ்தல்)


இந்த சொல் நடைமுறை நமக்கு அதிக தூரம். இந்த முறை வெளி நாடுகள் சிலவற்றில் ஏற்று கொள்ள பட்டாலும் பல நாடுகள் கண்டும் காணாது விட்டிருக்கின்றனன.


இந்த வாழ்தல் முறை என்பது மனமொத்த இருவர் ஒரே வீட்டில் அல்லது ஒரு அறையில் ஒன்றாக வாழ்தல். இதில் திருமணம் என்பது இருக்காது. ஆனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பின்னர் நடக்கலாம்.


ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுப்பதாகும்.. பாலியல் வரை பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வாழ்க்கை முரையில்.


இதனை வெளி நாடு செல்லும் பலரும் மேற்கொள்கின்றனர். அது உழைப்பு, வருமானம், ஒரே வேலைத்தளம், குடும்ப நிலை போன்றன தீர்மானிக்கின்றன.


ஒரு மாத வாடகையினை பங்கு போடவும், துணை ஒன்று தேவை என்பதற்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.


இங்கு இவர்களுக்கு திருமணம் முடித்த குடும்பம் பிள்ளைகள் சொந்த நாட்டில் இருப்போர் கூட இதனை கைகொள்வதனை காணக்கூடியதாக இருக்கிறது. 


இதனால் நன்மை தீமைகளும் உண்டு.


குழந்தை பேறு என்பது இல்லாது போகலாம், இங்கு இந்த வாழ்க்கை சில மாதங்கள் போக வேறொருவருடனும் தொடரலாம்..

விவாகராத்து என்பது இடம்பெற வாய்பில்லை.

விபச்சாரிகளின் உருவாக்கம் குறைவடையும் ஆனால் இந்த வாழ்க்கை கூட அவ்வாறே அமையும்.


 வாழ்க்கை செலவு குறைவடையும்.  வெளி நாட்டில் வாடகை செலவு அதிகம். இதனால் இப்படி கதைத்து பேசி முடிவெடுப்பார்கள்.


குழந்தை பேறு குறைவடைவதால் இனத்தின் நிலை கவலைக்கிடமாகும்

 இந்த நிலை காதல் எனும் போர்வையில் தற்போது தொடர்கிறது. ஏதோ அவரவர் மன நிலையில் இந்த வாழ்க்கை முறைதொடர்கிறது.


இதுவும் ஒரு கள்ள வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறை ஒருவரை 50 வயதிற்கு பின் அதிகமாக மன உழைச்சலை கொடுக்கும். அப்போது மனவிரக்தியால் வாழவே பெரும் அவதிப்பட நேரிடும்.


இழமையில்சிரிச்சவன் முதுமையில் அழுவான். 




04/06/2021

வீசா கனவுக்கு நாட்டை அழிப்போம்

 இலங்கை வாழ் மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த நிலை ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமனாகும். 


ஆபிரிக்க நாடுகளில் தொற்று நோய்தாகம், அரசியல் அராஜகம், ஆட்சியாளர் பெயர்களில் அனைத்து அரச நிறுவனங்களும், இராணுவ, பொலிஸ் அதிகார கையாளல், என நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன.


இதனை போலவே இலங்கையும் மிகவிரைவில் மாற்றம் அடையலாம். அடைந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் ஆபிரிக்க நாட்டிற்கு சமனாக பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாயிருக்கிறது.


தமது ஆட்சியில் நடைபெறும் ஊழலை மோசடியை வெளியில் வருவதை தவிர்க்க ஒரு அரசாங்காம் என்ன என்னெல்லாம் செய்யலாமோ அத்தையும் செய்துகொண்டிருக்கிறது.


இதில் மத தலைவர்கள், எதிர்கட்சிகள், எழுத்தாளர்களிற்கு உயிர் அச்சுறுத்தலும், பாச உயிர் பறித்தலும் இலகுவாக அவர்களை அடக்கிவிட முடிகிறது.


இதில் அப்பாவி மக்கள் மீது அதிகார துஸ்பிரயோகமும் கொள்ளை அடிக்க பயன்படும் வழியில் மகக்ளுக்கு சிறு தூவலும் இலகுவாக இருக்கிறது.


தம் பெயரில் தம் பரம்பரை எனும் ஒரு குறுகிய வெறி கடன்களையும் சுமைகளையும் ஏற்றி விட இத்தனையும் ஒரு விதமாக மாற்றி விட தம்மிடம் இருக்கும் அரசியல் ஆளணியினால் சட்டமாகக் படு பிரயத்தனம் நடைபெறும் போது ஏதாவது இலகுவக கையாழக்கூடிய பிரச்சினை ஒன்றை வெள்ளியிடவேண்டும். 


அந்த பிரச்சினையாக கொவிட் 19 இருக்கும் போது திரைமறைவு உச்சம் அடைந்து கனியாகிவிடும். 


என்ன ஒரு இலாபத்தை அடைய முடியும் வெளி நாட்டு வாழ்க்கையில் இலகுவாக சொந்த பந்தங்களில் காலில் விழுந்து சென்றுவிடலாம். 


எமெக்கென்ன வெளி நாடு முக்கியம். வீசா முக்கியம். 


அப்போ நாமும் பிரார்தனை பண்ணுவோம் நாடு எக்கேடு என்றாலும் படட்டும் என்று. 

 



15/05/2021

மறைக்கப்பட்ட துடுப்பாட்ட வரலாற்றில் தமிழ் பெண்.

 1950 இற்கு முன்பு கொழும்பு p. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் " அருள் மேரி " என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் 



இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட முதலும் muduvumaana பெண் இதுவரை இவர் மட்டுமே 


கிரிக்கட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சார் டொனால்ட் பிரட்மான் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு திடல் தமிழ் யூனியனுக்கு சொந்தமான இந்த சரவணமுத்து திடல் 


அவர் விளையாடிய போட்டிக்காக  மைதானத்தை பொறுப்புடன்  தயார் செய்தது இவரே 


இன்று தமிழ் யூனியன் கழகத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,  சரவணமுத்து மைதானம் load's  ஆஃ ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது தற்போது p.Sara stadium ஆகிவிட்டது 


அருள் மேரி அம்மணியை யாருக்கும் தெரியாது 


உலகத்தின் அதிசயமாக இருக்க வேண்டிய இந்த தேசம் வக்கிர இனவாதத்தால் நக்குற தேசம் ஆகிவிட்டது 😥😥😥


கிருஷ்ணா

Dharmalingam Krishna

வெளிமாவட்ட அரச உத்தியோகம்.

 



அரசாங்க வேலையென்றால் ஆடும் மேய்க்கலாம் என்றார்கள் 

அவ்வளவாக படிக்காவிட்டாலும் அதட்கேற்ற வேலை கிடைத்தது.


அதிகம் பேசுவதில்லை அடக்கமாய் பணிபுரிந்தேன் 

அதனால் என்னவோ அடுத்த மாதம் இடமாற்றம் என்றார்கள் 


ஆறு மாதம் தான் கடமைக்கு வந்து  அதற்குள் இடமாற்றமா...? என்றேன்

அது அப்படிதான் ஐந்து வருடம் வெளிமாவட்டத்தில் பணிபுரிய வேண்டும் என்றார்கள் 


வெளி மாவட்டத்தில் பணிக்கு சென்றால் செலவுக்கு பணம் பத்தாது பலரிடம் யோசனை கேட்டேன் 

பரவாயில்லை கொஞ்சம் சமாளி

அரசாங் வேலை அநியாயமாக்கிடாதே  என்றார்கள் 


அதுவும் சரியென்று அடுத்தநாள்  பயணமானேன் 

மனைவி கொஞ்சம் சிக்கனக்காரி ஏதோ கிடைத்த பணத்தில்    சிக்கனமாக குடும்பம் நடத்தினாள்

 

ஆண்டு ஐந்து ஓடியது மீண்டும் சொந்த ஊருக்கு இடமாற்றம் 

பஸ்சால் இறங்கி  சைக்கிளை நோக்கி நடந்தேன் அதுவும் காற்றுபோய் நின்றது வீடோ ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் 


காற்று போன சைக்கிளோடு கால்கடுக்க நடந்து வந்தேன் 

கூடிவாழ்ந்த நண்பன் ஒருவன் கோல் எடுத்தான் அப்போது  

கார் ஒன்று வாங்கியிருக்கன் காலையில வாரன் வீட்ட நில் என்றான் சரிடா என்று போனை வைத்து  வீடு வந்து சேர்ந்தேன் 


புன்னகையோடு வாசலில் மனைவி 

வந்த கலைப்பில் திண்ணையில் அமர்ந்தேன்

போன் அலரியது  ஊரில் உள்ள நண்பன் ஒருவன்  மூன்று மாடி வீடு கட்டி முப்பதாம் திகதி திறப்பு விழா கட்டாயம் வந்திடு என்றான்

மழைபெய்ய ஆரம்பிக்க  மனைவி ஓடினால் வீட்டு ஒழுக்குக்கு பாத்திரம் தேடி..... 

நானொரு அரச உத்தியோகத்தன்.....

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...