Posts

பெருங்காயம் செய்கை.

Image
  பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida )  என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும்  ஒருவித பசையிலிருந்து  கிடைக்கிறது .  இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் 'சைத்தானின் கழிவு' என்று பெயரிட்டு அழைத்தார்கள்.  ஆனால்  இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று  ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் 'கடவுளின் அமிர்தம் ' என்று கொண்டாடப்பட்டது.  இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது.  பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால்  அதுதான் பெருங்காயம்.  இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும்  தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால்  அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும...

காய் நகர்த்திய மக்களசமரவீர

Image
  மங்களவின் மரணமும், ராஜபக்ஸர்களின் அதிஸ்டமும், மாற்று அரசியலின் வெற்றிடமும்... இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் கொரோனா காவுகொண்டது.  ”குழந்தைகளே, உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வணங்குங்கள். ஆனால், அரசியல்வாதிகளை வணங்காதீர்கள். அவர்களை நீங்கள்  வழிபட தேவையில்லை.”  Children, Worship your parents and teachers. But, do not worship politicians. You do not need to worship them. கூறிய மங்கள சமரவீரவும் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டார். மங்களசமரவீரவுடனான அனுபவப் பகிர்வுகளும், அவரது அரசியல் செயற்பாடுகளுமே இன்றைய ஊடகபரப்பை, சமூக வலைத்தளப் பதிவுகளை ஆக்கிரமித்துள்ளன. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ,  ஜனாதிபதியாக அரியாசனம்  ஏறுவதற்கு காரணமாணவர்களில் முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீரவும் விபரீத விபத்தில் மரணித்த சிறீபதி சூரியாராட்சியும் முதன்மையான...

முடக்கலில் அனுமதித்த தொழில்கள் காரணம்?

Image
 இந்த முறை நாடு முடக்கப்பட்டுள்ளபோது ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இந்த இரண்டு துறைகளும் எமது நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகும். நோய்த் தொற்றினால் மக்கள் மரணிக்கிறார்களோ, இல்லையோ இந்த துறைகளை தற்காலிகமாகவேனும் முடக்க நேர்ந்தால் அரசாங்கத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும். அதனால் அரசுக்கும் வேறு வழி இல்லை. ஜனாதிபதி தனது விசேட உரையின்போது ஆடை ஏற்றுமதித் துறையானது நாட்டிற்கு ஆண்டொன்றிற்கு 5 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியையும், உல்லாசப் பயணத் துறை 4.5 பில்லியன் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருவதாக தெரிவித்துள்ளார். அரசு உள்நாட்டில் ஏற்படும் செலவீனங்களை பணத்தினை அச்சிட்டு தற்காலிகமாக சமாளித்து வருகிறது. அதனால் ஏற்படும் பணவீக்கம் என்பது இரண்டாம் பட்சம். ஆனால் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் இந்த முறை பயனற்றது. ஏனென்றால் அரசினால் டொலர்களை அச்சிட முடியாது. எனவே அரசு புதிதாக அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அத்துடன் தேவையற்ற அந்நியச் செலாவணியின் செலவுகளையும் தடுக்க வேண்டும்....

கிளப்கவுஸ் செயலி பற்றி

Image
கிளப்கவுஸ். Clubhouse கிளப்கவுஸ் எனும் ஒரு அப்ஸ் அறிமுகப்படுத்தபப்ட்டிருக்கிறது. அந்த அப்ஸ் உருவானது அதன் வளர்ச்சி, பறியெல்லாம் பல விடயங்கள் உண்டு இந்த கிளப்கவுஸ் ஒரு கூட்டத்தொடர் நடத்துவது போல் இருக்கும். இங்கு ஒரு தலைப்பில் உரையாட முடியும், கூட்ட தொடர் போல இதனை நிகழ்த்த முடியும். இங்கு moderator என்று ஒருவரோ  அல்லது சிலரோ இருக்க முடியும். இதில் மூன்று வகையானயோனோர் இருப்பார்கள்.  1 பேசும் குழு அதில் moderators இருப்பார்கள் 2 பார்வையாளர் பகுதி 3 வருவோர் போவோர். இங்கு பேச வேண்டும் என்று நினைப்போர் கையடையாளத்தை தட்டி தாம் பேச இருப்பதை காட்ட முடியும்.  பின் தொடர்தல் மூலம் யார் யார் என்ன குழுவில் இருக்கிறார்கள் என்று அறிந்து அந்த அந்த குழுக்களில் சென்று கேட்கவோ பேசவோ முடியும். இங்கு தனி நபர் பிந்தொடர்தல், குழு பின் தொடர்தல் என பல உண்டு. உந்த கிளப்கவுஸ் அப்சில் உங்கள் சுயவிபரம், இடுவதன் ஊடாக உங்களை நீங்கள் யார் என்று காட்ட முடியும், அதே போல் tweeter, Instagram போன்ற செயலிலளையும் இணைக்க முடியும். யூரியுப் செயலியின் இணைப்பையும் சுயவிபர இடத்தில் பதிவிடலாம். இந்த செயலியில் பல நல்ல...

Living together ஒன்றாக வாழ்தல்

Image
 Living together. )ஒன்றாக வாழ்தல்) இந்த சொல் நடைமுறை நமக்கு அதிக தூரம். இந்த முறை வெளி நாடுகள் சிலவற்றில் ஏற்று கொள்ள பட்டாலும் பல நாடுகள் கண்டும் காணாது விட்டிருக்கின்றனன. இந்த வாழ்தல் முறை என்பது மனமொத்த இருவர் ஒரே வீட்டில் அல்லது ஒரு அறையில் ஒன்றாக வாழ்தல். இதில் திருமணம் என்பது இருக்காது. ஆனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பின்னர் நடக்கலாம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுப்பதாகும்.. பாலியல் வரை பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வாழ்க்கை முரையில். இதனை வெளி நாடு செல்லும் பலரும் மேற்கொள்கின்றனர். அது உழைப்பு, வருமானம், ஒரே வேலைத்தளம், குடும்ப நிலை போன்றன தீர்மானிக்கின்றன. ஒரு மாத வாடகையினை பங்கு போடவும், துணை ஒன்று தேவை என்பதற்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இங்கு இவர்களுக்கு திருமணம் முடித்த குடும்பம் பிள்ளைகள் சொந்த நாட்டில் இருப்போர் கூட இதனை கைகொள்வதனை காணக்கூடியதாக இருக்கிறது.  இதனால் நன்மை தீமைகளும் உண்டு. குழந்தை பேறு என்பது இல்லாது போகலாம், இங்கு இந்த வாழ்க்கை சில மாதங்கள் போக வே...

வீசா கனவுக்கு நாட்டை அழிப்போம்

Image
 இலங்கை வாழ் மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த நிலை ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமனாகும்.  ஆபிரிக்க நாடுகளில் தொற்று நோய்தாகம், அரசியல் அராஜகம், ஆட்சியாளர் பெயர்களில் அனைத்து அரச நிறுவனங்களும், இராணுவ, பொலிஸ் அதிகார கையாளல், என நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன. இதனை போலவே இலங்கையும் மிகவிரைவில் மாற்றம் அடையலாம். அடைந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் ஆபிரிக்க நாட்டிற்கு சமனாக பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாயிருக்கிறது. தமது ஆட்சியில் நடைபெறும் ஊழலை மோசடியை வெளியில் வருவதை தவிர்க்க ஒரு அரசாங்காம் என்ன என்னெல்லாம் செய்யலாமோ அத்தையும் செய்துகொண்டிருக்கிறது. இதில் மத தலைவர்கள், எதிர்கட்சிகள், எழுத்தாளர்களிற்கு உயிர் அச்சுறுத்தலும், பாச உயிர் பறித்தலும் இலகுவாக அவர்களை அடக்கிவிட முடிகிறது. இதில் அப்பாவி மக்கள் மீது அதிகார துஸ்பிரயோகமும் கொள்ளை அடிக்க பயன்படும் வழியில் மகக்ளுக்கு சிறு தூவலும் இலகுவாக இருக்கிறது. தம் பெயரில் தம் பரம்பரை எனும் ஒரு குறுகிய வெறி கடன்களையும் சுமைகளையும் ஏற்றி விட இத்தனையும் ஒரு விதம...

மறைக்கப்பட்ட துடுப்பாட்ட வரலாற்றில் தமிழ் பெண்.

Image
 1950 இற்கு முன்பு கொழும்பு p. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் " அருள் மேரி " என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார்  இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட முதலும் muduvumaana பெண் இதுவரை இவர் மட்டுமே  கிரிக்கட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சார் டொனால்ட் பிரட்மான் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு திடல் தமிழ் யூனியனுக்கு சொந்தமான இந்த சரவணமுத்து திடல்  அவர் விளையாடிய போட்டிக்காக  மைதானத்தை பொறுப்புடன்  தயார் செய்தது இவரே  இன்று தமிழ் யூனியன் கழகத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,  சரவணமுத்து மைதானம் load's  ஆஃ ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது தற்போது p.Sara stadium ஆகிவிட்டது  அருள் மேரி அம்மணியை யாருக்கும் தெரியாது  உலகத்தின் அதிசயமாக இருக்க வேண்டிய இந்த தேசம் வக்கிர இனவாதத்தால் நக்குற தேசம் ஆகிவிட்டது 😥😥😥 கிருஷ்ணா Dharmalingam Krishna