18/09/2021

சமூக வலைத்தளத்தினை நகர்த்துவதில் உள்ள சிக்கல்கள்


சமூக வலைத்தளங்களை கொண்டு செல்லும் போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும். அவை மிக பிரதானமான சிக்கல். இந்த சிக்கல்களை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அவற்றை வரும்போது பார்ப்போம் என்று இறங்கினால் வெளியேறும் போது ஒன்றுமே இருக்காது.


யூரியுப், ரிக்ரோக், பிளக்கார் போன்றவற்றை நிர்வகிப்பு செய்வோர் இந்த பிரச்சினைகளை அதிகம் எதிர் நோக்கவேண்டி ஏற்படும். இந்த தலங்களில் எதுவும் பதிவிடலாம் எனும் நோக்கில் பதிவு செய்ய முடியாது அவ்வாறு பதிவு செய்தால் தளங்களை தடையும் செய்வார்கள்.


முதலில் தற்காலிக தடை என்பார்கள்

சமூககத்திற்கு ஏற்ற பதிவு இல்லை என்பார்கள்.

(Community sensitive)  என்று காட்டி தடையும், முழுமையான தடையும் ஏற்படலாம்.


பாலியல் சார் பதிவுகள், தனிநபர் சார் பதிவுகள், நாட்டின் இறமை, அரசியல், தீவிரவாத கருத்து சார் படங்கள் என இவர்கள் சொல்லாமலும் பலதிற்கு தடை போடுகிறார்கள்.


நகைச்சுவை சார் சொந்த பதிவுகளை அதிகமாக பகிருங்கள். சொந்த படங்களை அதாவது நீங்களே உங்கள் கமெராவில் பதிவு செய்த படங்களை பதிவேற்றுங்கள்.


இல்லை எனில் உங்கள் தளங்களை நீங்களே அழிப்பதாகிவிடும். இந்த பிரச்சினைகளில் விளையாட்டு துப்பாக்கிக்கு கூட பல தளங்களில் தடைதான் இருக்கிறது. 





இதை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களில் உழைப்பதென்பது கடினமான விடயம்தான். 


ஒரு இடத்திற்குள் செல்லும் போதுதான் அதன் விபரங்கள் புரிகிறது

12/09/2021

623 பொருகளின் இறக்குமதியின் பின்னணி

 


சில நாட்களாகா ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினை உள்ளாடைகளுக்கான தடை என்றும்  அது தொடர்பான புகைப்படங்கள், கேலிசித்திரங்களும் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்கின்றன. 

623 பொருட்களின் இறக்குமதி தொடர்பான பின்னணி செயற்பாடுகள் பற்றிய சுருக்க பார்வை.



பொருட்களுக்கு தடைவிதிக்கும் நோக்கம் என்றும் எடுத்துகொள்ளலாம், அதேவேளை உள்னாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் என்றும் எடுத்து கொள்ளலாம். இதில் வரிவிதிப்பு என்று இல்லை.


இவ்வளவு காலமும் வங்கியில் உள்ள பணத்திற்கு மேலாக over draft மூலம் வியாபாரம் செய்தவர்கள், வங்கியினை அடிப்படையாக கொண்டு வியாபரத்தினை மேற்கொண்டோர்கள் இனிமேல் அந்த வியாபரத்தினை தமது சொந்த பணத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள்.


ஆடைகள் தொடர்பான வியாபரத்திற்கு வங்கியில் 102 % தமது பணத்தினை வைப்பிலிட்டு வியாபரத்தினை மேற்கொள்ள வேண்டும். அதே போல் தொலைபேசி சார் பொருட்களுக்கு 250% வீதம் வங்கியில் வைப்பிலிட்டு அல்லது அந்த தொகையினை வங்கியில் வங்கி உத்தரவாதமகா கட்டவேண்டும். 



இதுதான் தற்போதைய இந்த உள்ளாடை விவகாரமாகும். இந்த விவகாரம் பொருட்களிற்கு விலை அதிக்கப்படலாம் என்ற எண்ணம் உருவாகும். இவ்வளவு பணத்தை கொண்டு ஒருவர் இறக்குமதிக்கு முன்வரப்போவதில்லை. 


இந்த நடவடிக்கைகள் பணமுதலைகளின் பதுக்கல் பணத்தை வெளிக்கொணர்வதாக கூட இருக்கலாம். எப்படியோ இந்த பணங்கள் வெளிவரும் பட்ட்சத்தில் பணவீக்கம் குறையலாம் என அரசாங்கம் நினைக்க்லாம். அரசின் திட்டம் இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த அராசாங்கம் பற்றியும் யோசிக்கவேண்டும்.


இப்போது இருக்கும் அரசாங்காம் தம்மை விட பணக்காரர் இருக்க கூடாது என்றும் எதிர்காலத்தில் அரசாங்க நடவடிக்கைகள் பங்குகள் தம்முடையதாக இருக்கவேண்டும் என்பதிலும் அவர்கள் போக்கு சரியாக இருக்கிறது.


இந்த நடவடிக்கைகள் கடந்த கால செயற்பாடுகளில் அதிகமகா பார்த்திருப்பீர்கள்.  ஆனாலும் பணத்தை வெளிவிட வியாபரிகள் முன்வராத போது அவர்களின் திட்டம் தொல்வொயில் முடியலாம், அவர்களை நம்பி முதலீடு செய்தால் இறுதியில் உள்ளாடையுடன் அந்த முதலாளிகள் தெருவில் அலையலாம். 


இதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

08/09/2021

டொலரும் இலங்கை ரூபாவின் வீழ்சியும். பொருளாதார கட்டுரை

 


“இலங்கை ரூபா அமேரிக்க டொலருக்கு நிகராக கூடி குறையும் முறை”

முழுமையாக வாசித்தால்  சிறந்த விளக்கம் கிடைக்கும்.

குறிப்பு :- தங்கம் என குறிப்பிடப்படுவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ( மொத்த சொத்து)

இலங்கை ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

ஒரு எளிமையான ஆய்வு கட்டுரை.பொறுமையாக கடைசி வரை படியுங்கள்.உண்மை உங்களுக்கு எளிதாக புரியும்.

ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.!

எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.!

ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்...

என்ன,அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.



சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் .

அமெரிக்காவையும் இலங்கையையும்!

அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக்   காரணம்,நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக்  கொண்டு பழகியுள்ளோம்!

கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை  எடுத்துக்கொள்வோம்:

துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இலங்கையிடமும்  சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது:
அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!

இலங்கையும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!

இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இலங்கை ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இலங்கை ரூபாய் மட்டுமே!

இப்பொழுது,

அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.

இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே!

இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.

இப்பொழுது, இலங்கைக்கு வருவோம்.!

இலங்கை அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும்.

ஆனால், அசல் வரிவசூலோ,..  வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!!

அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது!

மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!

இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.!

ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).!

இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!

சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்!

தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்!

இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இலங்கை ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50).

ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050  ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!

எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில்  வெளியிட்டே ஆகவேண்டும்.

காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல்  "காணாமல் போய்விட்டதல்லவா"?

எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!

இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF !

"நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.!

உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்!

ஆனால், இலங்கை அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று!

அரசுக்கு வேறு வழி கிடையாது!

காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை!

அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இலங்கை அரசு!

இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!

ஆக,.. இப்பொழுது, இலங்கை ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால்  = 1.71)

அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இலங்கை ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது!  $1 = Rs.1.71 !

இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல்  அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது!

ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!

இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 200.00 என வந்து நிற்கிறது!

இலங்கை அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இலங்கை ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!

இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!

இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது!

காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!

ஆனால், இலங்கையில்?

யாராலாவது, ஊகிக்க முடியுமா?

percentage of taxpayers in Sri Lanka என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்!

நல்ல இலங்கை  குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!

ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இலங்கையில் வரி செலுத்துபவர்கள்!

நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்!

அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...

அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா?

கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா?

நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா?
என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!

கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கின்றது என்று எடுத்துக் காட்டவே இந்த ஆய்வுக் கட்டுரை. Copy

04/09/2021

தலிபான்களின் அதிரடி சட்டம்

 ஆக மொத்தத்தில பெண்களை மெசினாத்தான் பாக்கிறாங்க போல.....


தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்:

************

football தடை !

காற்றாடி விட தடை !

பெண்கள் தனியாக வெளியே போகதடை !

பெண்கள் கல்வி கற்க தடை !

பெண்கள் வேலை பார்க்க தடை !

ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை !

பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை !

தனியே பெண்கள் டாக்ஸியில் போக தடை  !

ஆண்கள்,பெண்கள் ஒரே பேருந்தில் பயணம் தடை !

டிவிதடை ! வீடியோ தடை !

ஆண்கள் சவரம் செய்ய தடை !

பறவை நாய் வளர்ப்பு தடை !

இலக்கிய நூல் தடை !

கடைகளில் ஆண்கள் இருந்தால் பெண்களுக்கு பேச தடை !

ஆண் டாக்டர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க தடை . !

பெண்களின் பள்ளிகள், கல்லூரிகள் மத கருத்தரங்கு கூடமாக மாற்றப்படும் !


பெண்களுக்கு நெயில்பாலிஷ்,முகபூச்சு இருந்தால் விரல்கள் வெட்டப்படும் ! 

பெண் சத்தமாக சிரித்தால் பிரம்படி !

ஹைஹீல்ஸ் போட பெண்களுக்கு தடை !

பெண் நடக்கும் போது செருப்பு சத்தம் வந்தால் பிரம்படி !

பெண்கள் ரேடியோ டிவியில் பேச தடை !

பெண்கள் விளையாட்டு  விளையாட தடை !

பெண்கள் வீட்டு பால்கனியில் 

நிற்க தடை !

வீட்டு ஜன்னல் கண்ணாடிகளில் 

கட்டாய பெயின்ட் !

பெண்களுக்கு ஆடை அளவோ , 

ஆடை தைத்து தரவோ 

ஆண்களுக்கு தடை !

பெண்களை படம் பிடிக்க தடை !

பத்திரிகைகளில் பெண்கள் படம் 

வர தடை ! 

வீடு, கடைகளில் பெண்கள் 

படம் மாட்ட தடை !

இசை,சினிமா, பாடல் 

என அனைத்துக்கும் தடை !

2021 "31 செப்டம்பருக்கு பிறகு இஸ்லாமிய பெயர் வைக்காதவர்க்கு தண்டனை !

ஆண்கள் முடிவெட்ட தடை !

ஆண்கள் தாடி,தொப்பி ,ஆப்கான் உடை கட்டாயம் .!

இஸ்லாமிலிருந்து வேறுமதம் மாறுவோருக்கு மரண தண்டனை !

2021" செப்டம்பர் -30 க்கு பிறகு இன்டர்நெட் தடை !

பெண்கள் செண்ட் பூச தடை !

பெண்களின் கொலுசு சத்தம் எழ தடை !

பெண்கள் பிற ஆணுடன் பேசதடை !


இதெல்லாம் " நேற்று           வெளியிட்டுள்ள சட்டம் !


03/09/2021

சுதேச மருத்துவ ஆலோசனைக்கான மருத்துவர்கள்

 


நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளையில் மக்களுக்கு ஒரு விசேட தகவல்


அதாவது கொரோனா தொற்று தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும் நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும் நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களையும் பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்கள் வெளியாகியுள்ளன.


அத்தோடு வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களே வெளியாகியுள்ளன. 


மேலும் இதனை சுதேச மருத்துவ திணைக்களம் வெளியட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Details of Community Medical Officers – 

Jaffna District


Delft Division – Dr.Beron – 0771856665

Kayts Division – Dr.S.Sabesan – 0772615765

Velanai Division – Dr.P.Kajitha – 0779227511

Jaffna Division – Dr.G Mithuraja – 0774660657

Nallur Division – Dr..J.Edna – 0774400295

Nallur Division – Dr.S.Keerthana – 0778690086

Uduvil Division – Dr..J.Ratnalagi – 0779199359

Uduvil Division – Dr.S.Gayathiri – 0776383673

Sandilipay Division- Dr.S.Uthayagowry – 0773410352

Chankanai Division – Dr.R.Kirija – 0770566790

Chankanai ivision – Dr. S.Mayura – 0770690849

Tellipalai Division – Dr.Y.Sasikala – 0779836099

Tellipalai Division – Dr.S.Rega – 0767516435

Vali east division – Dr.K.Thakshajini – 0772269811

Vali east division – Dr.N.Varani – 0775354717

Karaveddy Division – Dr.T.Kavitha – 0778448196

Pointpedro Division – Dr.K.Soorya – 0774911795

Chavakachcheri division – Dr.K.Rajitha – 0773662730

Chavakachcheri division – Dr.T.Jenany – 0779548129

Karainagar division – Dr.K.Nanthagobi – 0777110695

Karainagar division – Dr.R.Sinthu – 0778649620

02/09/2021

நுகர்வோர் அதிகார சபையின் இலக்கங்கள்.



 நாட்டில் பொருட்களை பதுக்கி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஆப்பு 📱📲📱☎️📞

வைக்க நீங்க ரெடியா...? கீழ்காணும் நம்பருக்கு அடியுங்க அள்ளித்து போவானுகள்!


அரசாங்க விலைக்கு மேலான விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகளை முறையிட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தொடர்பு இலக்கங்கள் கீழே:- 


கம்பஹா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

கம்பஹா +94 33 7755455


களுத்துறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

களுத்துறை +94 34 7755455


கண்டி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

கண்டி +94 81 7755455


மாத்தளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மாத்தளை +94 66 7755455


நுவரெலியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

நுவரெலியா +94 52 7755455


அனுராதபுரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

அனுராதபுரம் +94 25 7755455


பொலன்னறுவை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

போலோமருவா +94 27 7755455


இரத்தினபுரி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

இரத்தினபுரி +94 45 7755455


கேகாலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

கேகாலை +94 35 7755455


குருநாகல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

குருநாகல் +94 37 7755455


புத்தளம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

புத்தளம் +94 32 7755455


காலி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

காலி +94 91 7755455


மாத்தறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மாத்தறை +94 41 7755455


ஹம்பாந்தோட்டை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

ஹம்பாந்தோட்டை +94 47 7755455


மொனராகலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மொனராகலை +94 55 7755460


பதுளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

பதுளை +94 55 7755455


திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

திருகோணமலை +94 26 7755455


மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மட்டக்களப்பு +94 65 7755455


அம்பாறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

அம்பாறை +94 63 7755455


யாழ் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

யாழ் +94 21 7755455


வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

வவுனியா +94 24 7755455

01/09/2021

பெருங்காயம் செய்கை.

 



பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida )  என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும்  ஒருவித பசையிலிருந்து  கிடைக்கிறது . 


இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் 'சைத்தானின் கழிவு' என்று பெயரிட்டு அழைத்தார்கள். 

ஆனால் 

இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று 

ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் 'கடவுளின் அமிர்தம் ' என்று கொண்டாடப்பட்டது. 


இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. 


பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால் 

அதுதான் பெருங்காயம்.

 இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும் 

தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால் 

அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும்

பெருங்காய டப்பா.


பெருங்காயத்தைப் பற்றி  இந்த தகவல் போதுமா....

இன்னும் கொஞ்சம் 

வேணுமா?


படத்தில் பெருங்காய செடி.

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...