இவர்களா மக்களிற்கு சேவை செய்ய போகிறார்கள். ஆம் இவர்களேதான். எப்படி செய்வர்.
தமது அரசியல் இருப்புக்கும், கதிரை பெறவும் கட்சி விட்டு கட்சி வந்தோர் மக்களிற்கு சேவை செய்வார்களா?
தமது நலன் சார்ந்தும் , தமது சுய கௌரவம் சார்ந்தும் அரசியலுக்கு வருகை தந்தோரா மக்களிற்கு நல்லது செய்ய போகிறார்கள்.
மக்கள் தாம் ஏமாளிகள் ஆகாமல் இருக்க ஒரு மாற்றமும் தமது பலத்தையும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் புகட்ட வேண்டும்.
இது ஒவ்வொரு கட்சியும் உணர்ந்து கொள்ளும் முறையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும்.
இந்த சந்தர்ப்பம் போனால் இனி வரும் காலம் 2009 ஆண்டு காலத்தை விட மிகமோசமாகும்.
அவ்வளவிற்கு இளைஞர்கள் இழப்பை சந்திப்போம். மதுவால் பாலியல் தொல்லையால் வீதி விபத்தால்.
தமிழ் மக்களின் ஒற்றுமை மற்றும் ஆணவம் உடையோருக்கு சரியாக பாடம் புகட்ட வேண்டும். யார் எப்போது தேவை என்பதை உணர்ந்து வாக்காளித்தால் தமிழ் வாழும்.
No comments:
Post a Comment