20/12/2017

மக்களின் பொது அமைப்புக்களின் கோரிக்கை.

தமிழ்த்தேசிய பேரவை சார்பில் வேட்பாளராக - மணிவண்ணனை நியமிக்க கோரிக்கை!

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பாளராக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளரும் இளம் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன்  அவர்களை நியமிக்கும்படி வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் பலவ ற்றின் சார்பாக தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் தேசிய பேரவையின் தலைமைப் பீடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

19/12/2017

கட்சிகளின் பிரதான கடமை என்ன.

(#உங்கள் கருத்துகளை இடுங்கள் உறவுகளே)


கட்சிகளின் பிரதான  கடமை என்ன,? எல்லா கட்சிகளுனை விடவும் சைக்கிளின் முக்கிய கடமை.

ஏனைய கட்சிகளுக்கு அக்கடமை அவ்வளவு அவசியமில்லை. மற்றய கட்சிகளுக்கு கதிரை அவசியம் அதனால் அவர்களின் கடமை வேறு.

சைக்கிள் கட்சி செய்யவேண்டியதே மக்கள் அனைவரையும் ஓட்டு போடவைப்பதே அவர்களின் பிராதன கடமை.

ஆனால் மக்கள் அனைவரும் ஓட்டு போட்டால் ஏனைய கட்சிகளுக்கு வடக்கில் சந்தர்பம் மிக குறைவாகும்.

இதனை  முன்னர் நடைபெற்ற மாகாண, ஜனாதி பதி தேர்தலில் மக்கள் ஓட்டு போட்டதை போல் போட்டால் த.தே.கூ அமோக வெற்றி பெறும். ஆனால் இம்முறை மக்கள் ஓட்டு போடும் ஆர்வம் குறைவு.

இதனால் மற்ற கட்சிகள் வெற்றி பெற்று ஆசனம் பிடிக்கும்.

18/12/2017

மூக்கு உடையப்போகும் கட்சிகள்.

இந்த தேர்தல் சர்வசாதரண தேர்தல் இல்லை. இத்தேர்தல் நாட்டின் ஆளும் தரப்பு மற்றும் பிரதான கட்சிகளின் வலிமை ஆய்வின் முடிவை கூறும் தேர்தல்.

இங்கு வடக்கில் மூக்கு உடைபடும் கட்சிகள் இரண்டு காணப்படும். ஏனைய கட்சிகள் மீண்டெழவும் இத்தேர்தல் காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

வீடு மற்றும் சைக்கிள் கட்சிகளின் போட்டியின் போது நிட்சயம் மூக்கு உடைவு இருவருக்குமே. இக்கட்சிகளின் மீது அதிருப்பி உள்ள மக்கள் வாக்களிக்க செல்வது குறையும்.

புலி விழுந்தது நரிக்கு தாயமே.

 ஏனைய கட்சிகளின் ஓட்டு போடுனர்
குறைவு என்றாலும் மொத்த வாக்களிப்பில் வெற்றி என்பதிலும் அதித வெற்றி கிடைக்கும்.


17/12/2017

இந்த திகதிக்கு பின் நடப்பது யாருக்கு சாதகம்.

எல்லோரும் நினைப்பது போல் நடக்கும். அது எந்த திகதி என்ன நடக்கும்
 பதவி ஆசைப்பட்டோர் வால் பிடித்தோர் யாவரும் வெளியில் தெரியும் படி சிலது நடக்கும். அதுதான் 18-12.2017அன்றின் பின் இவை சகயம். வேட்பாளர் கனவுடன் உள்ள சிலர் தாம் தெரிவு செய்யப்படவில்லை என்று அறிவர். இது காலம் பிந்திய அறிவு. பெரும்பாலும் இது தமிழ்தேசிய கூட்டமைப்பில் காணலாம்.எனவே பலர் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டமையால் எதிராக பிராச்சாரம் செய்ய வாய்ப்பு அதிகம். இது ஏனைய கட்சிகளில் பெரிதும் குறைவு. அவர்கள் வேட்பாளர்கள் இன்றி தவிக்கின்றனர். த.தே.கூட்டமைப்பு எதிர் கட்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க கூடாது என்றும், தமது கட்சியில் வாய்ப்பு கொடுத்தால் தலையிடி என்றும் சிலரை கழடிவிடும். இதில் சிலர் விழுந்தேன் மீசையில் மண் முட்டவில்லை என்றும் கூறலாம். இவை அனைத்தும் வேட்பு மனு தாக்கலின் பிந்தான். வேலை இன்றி போவோர் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படும். வேலை சம்பளமற்ற விடுமுறை, சிலர் வேலை நீக்கம் என இந்த பட்டியலும் நீளும். எதிர் கட்சிகளுக்கே வெளிச்சம். மாற்றம் நிகழ வாய்ப்பாக மாறலாம்
 இதெல்லாம் மக்கள் கைகளிலே

16/12/2017

வட்டார தொகுதி, விகிதாசார முறையில் வெற்றி சுயேட்சைக்கும்

இந்த தேர்தல் முறை புரியாதவர்கள் இதனைக் கவனிக்கவும்!

கலப்பு முறை என்றால்  என்ன?
அது எப்படி கணக்கு பார்கிறது?
இந்த பெண்களும் கட்டாயம் போகனுமாமே! அதனுடைய விளக்கம் என்ன?

இதெல்லாம் நமக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கனும் நண்பர்களே ..இல்லாட்டி இவர்கள் நம்மட தலையில தேங்கா ஒடச்சிட்டு போய்டுவாங்க...

இதுல ஒரு சீன வித்தையும் இல்ல. சிம்பிளா விளங்கிக் கொள்ளலாம்!

இப்ப உதாரணத்துக்கு ஒரு ஊரை எடுப்பம். அதுல ஒரு 12 வட்டாரம் பிரிச்சிருக்கு என்று எடுத்துகொள்ளுங்க. இப்ப இந்த கலப்பு முறையில எப்படி வரும் என்றால்.

முதல்ல வட்டாரம் எல்லாம் கூட்டி 60 சதவீதமாக கணக்கெடுப்பாங்க; பிறகு அதோட சேர்த்து விகிதாசர முறையிலும் 40 சதவீதம் தெரிவு செய்வாங்க.

அதாவது நம்மட பாசையில சொல்ல போனால், 12 வட்டாரத்துக்கும் 12 பேர், அதோட சேர்த்து போனஸா 8 பேர்! அப்ப மொத்தம் 20 பேர் சபைக்கு போவாங்க!!

சரியோ அவ்ளோதான் கணக்கு!

இப்ப தேர்தல் நடக்குது.

ஒவ்வொரு வட்டாரத்துலையும் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை போடும். நம்ம விரும்புற கட்சிக்கு வோட்டு போடுவம். இப்ப அதுல எந்த கட்சி அதிகமாக வோட்டு எடுக்குதோ அந்த கட்சி அந்த வட்டாரத்துல வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அப்ப அந்த 12 பேரையும் தெரிவுசெய்து முடிஞ்சி!

சரி இப்ப மற்ற 8 ஆசனங்களும் எப்டி தெரிவு செய்வாங்க?

அதுக்கு என்ன செய்வாங்க என்றால் நண்பர்களே,

எல்லா வட்டாரத்துலையும் எல்லா கட்சிகளும் எடுத்த மொத்த வோட்டுகளை கூட்டுவாங்க. அதாவது ஊர்ல அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை கூட்டுவாங்க.

உதாரணத்துக்கு அப்டி கூட்டி ஒரு 15,000 வோட்டுகள் வருது என்று எடுத்துக்கோங்க!

இப்ப அந்த 15,000 வோட்டையும் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையான 20 ஆல பிரிப்பாங்க. அப்டி பிரிச்சா 750 வரும்.

இப்ப அந்த 750 வோட்டுத்தான் ஒரு ஆசனம் கிடைப்பதற்கான ஆகக்குறைஞ்ச வோட்டு! சரியோ?

இப்ப என்ன செய்வாங்க என்றால்,

ஒவ்வொரு கட்சியும் எல்லா வட்டாரங்களையும் சேத்து மொத்தமா எத்துன எத்துன வோட்டு எடுத்திருக்கு என்று பார்ப்பாங்க.

உதாரணத்துக்கு CWC எடுப்பம். அந்த கட்சி எல்லா வட்டாரங்களையும் சேர்த்து ஒரு 6000 வோட்டு எடுத்திருக்கு என்று வச்சிக்கொள்வோம்.

இப்ப இந்த 6000 வோட்டுக்கும் எத்தனை ஆசனம் கிடைக்கும் என்று கணக்கு பார்ப்பாங்க. அப்படி என்றால், இந்த  6000 ஐயும் 750 ஆல பிரிப்பாங்க. அப்படி பிரிச்சா 8 வரும். அதனுடைய அர்த்தம் என்ன என்றால் CWC  க்கு மொத்தம் 8 ஆசனங்கள் போய்ச் சேரனும்.

சரியோ!

இப்ப CWC எத்துன வட்டாரத்துல வெற்றி பெற்றிருக்கு என்டு பார்ப்பாங்க. உதாரணத்துக்கு அவங்க 5 வட்டாரத்துல வெற்றி பெற்றிருந்தால், அந்த ஐந்தையும் கழித்துவிட்டு அவங்களுக்கு போய் சேர வேண்டிய மிச்சம் 3 ஆசனங்களும் அந்த போனஸ் லிஸ்டுல இருந்து வழங்கப்படும்.

அதோட கேம் ஒவர்!

இன்னம் ஒரு உதாரணமும் சொல்லனும்.

இப்ப ஒரு சுயேட்சை குழு எலக்சன்ல நிக்கிது என்று வச்சிகோங்க. இப்ப அவங்க ஒரு வட்டாரத்துலயும் வெற்றி பெறல்ல என்று எடுப்பம்.

ஆனால்,

எல்லா  வட்டாரங்கலைளையும் சேத்து அவங்களுக்கு ஒரு 800 வோட்டு கிடைச்சிருக்கு என்று எடுத்தால், அவங்களுக்கும் போனஸ் லிஸ்டுல இருந்து ஒரு ஆசனம் வழங்கப்படும். ஏன் என்டால் அவங்க ஒரு ஆசனத்துக்கான ஆகக்குறைஞ்ச வோட்டு எண்ணிக்கையான 750 எடுத்திருக்காங்க!!

ஆகவே இதுல எல்லா கட்சிகளுக்கும் எல்லா வகையிலையும் வெற்றி பெறலாம்.

ஒரு கட்சிக்கு ஒரு வட்டாரத்துல மட்டும்தான் வாக்கு இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு. அப்டி இல்லாம ஊருக்குள்ள பரவலாக வாக்குகள் இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு.

இதுல லிஸ்டு போட்றத்துல இன்னொரு விசியமும் இருக்கு. அது என்ன என்றால்,

இப்ப ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் ஒவ்வொரு ஆள் நியமக்கப்பட்டு ஒரு லிஸ்டு போடுவாங்க தானே?

ஆமாம்!

அதுக்கு மேலதிகமாக இன்னுமொரு போனஸ் லிஸ்டும் நிரப்பி கொடுக்கப்படும். அதாவது எங்களுக்கு போனஸ் ஆசனம் கிடைக்கும் பட்சத்தில் நாங்க இதுல இருந்து ஆக்கள் நியமிப்போம் என்று கொடுப்பாங்க.

ஆனா அதுல சுவாரஷ்யம் என்ன என்றால், கட்டாயம் அந்த லிஸ்டுல இருந்து தான் போனஸ் ஆசனத்துக்கு ஆக்கள் போடனும் என்று கட்டாயம் இல்ல. வட்டாரத்துல தோல்வியடைந்த ஆக்களையும் போடலாம்.

சரியோ அவ்வளவுதான் விஷயம்.

சரி இப்ப, அந்த பெண்கள் ஆசனங்கள் தொடர்பான விளக்கம் என்ன?

கட்டாயம் 25 சதவீதம் சபைக்கு பெண்கள் நியமிக்கப்படவேணும் என்று சொல்றாங்களே அப்படி பார்த்தால் அந்த 20ஆசனங்களில் 5 ஆசனங்கள் பெண்களா இருக்கனுமா? அப்டின்னு நீங்க யோசிக்கிறது நியாயம்.

ஆனால், இதை பத்தி எல்லா கட்சிகளும் பயப்பட தேவல்ல மக்களே!.

ஏன் என்றால்! 3 ஆசனங்களுக்கு மேலதிகமாகவும் மொத்த வாக்குகளில் 20% ஆன வாக்குகளுக்கு மேலதிகமாகவும் பெறுகின்ற கட்சிகள் மட்டும்தான் அந்த கணக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

ஆகவே அந்த லிஸ்டுக்குள்ள வார கட்சிகளில் பெண்கள் வெற்றி பெறாத பட்சத்தில், அவர்களின் போனஸ் லிஸ்டிருந்து கட்டாயம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

சில நேரங்களில் பெண்கள் எண்ணிக்கை 25%ஐ விட குறையவும் வாய்ப்பிருக்கு.

கட்சிகள் எடுக்கன்ற ஆசனங்களின் நிலைப்பாட்டை பொறுத்து தேர்தல் ஆணையம் அதனை அனுமதிக்கும்.

சரியோ. அதுதான் அந்த வெளக்கம்.

இனி வோட்டு போட ரெடியாகுவோம்......

 Copied...

உள்ளூராட்சியில் மாற்று தெரிவிவை விரும்பும் மக்கள்


உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் மாற்று தெரிவை விரும்புகின்றனர். அத்தெரிவில் மக்கள் குழம்பியும் இருக்கின்றனர். தம்மையே ஏமாற்றும் கட்ட்சி ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவது பெரிய விடயம் இல்லை. இந்த கால கட்டத்தில் மக்கள் பேரவையும், வடமாகாண முதலமைச்சரும் எந்த கருத்துக்களையும் வெளியிடாது இருக்கின்றமை மக்களினை இன்னும் அதிக குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது அடுத்த தேர்தலுடன் தமிழரசு கட்சியாக மட்டும் போட்டியிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புளட், ரெலோ மற்றும் ஏனைய கட்சிகள் புதிய கூட்டணி உருவாக்கும். அக்கூட்டணி தமிழ்தேசிய முன்னணியுடன் சேரும் பட்சத்தில் தனித்துவமாக செயற்பட வாய்ப்பு அதிகம். பலமான எதிர்கட்சி ஒன்று தமிழரசு கட்சிக்கு இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. இல்லாது விட்டால் தமிழர் நிலை கவைக்கிடமாகலாம்
 ஏன் இந்த நிலைக்கு தமிழரசு கட்சி கொண்டு செல்கின்றது என்று யாருக்கும் இன்னும் புரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்றால் மக்கள் மாற்று தெரிவினை தெரியவேண்டும். 

15/12/2017

தேர்தல் ஓட்டு யாருக்கு. குழப்பம் தீர்ந்தது.

அன்பான மக்களே உங்கள் வாக்கு உரிமை காப்பதற்கா...? உலக வல்லாதிக்க நலன்களை காப்பதற்கா...?

#வீட்டு சின்னதில் போட்டியிடும் #தமிழ்த்_தேடிசியக்_கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிதேர்தல்ல்ட்ட  மேற்குலக நாடுகளின் பிராந்திய நலன்களை முன்னிறுத்தி நல்லாட்சி அரசை கண்மூடித்தனமாக காப்பாற்றும் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இத்தேர்தலை எதிர்கொள்கிறது.

#உதய_சூரியன் சின்னத்தில் போட்டியிடும் #தமிழர்_விடுதலை_கூட்டமைப்பு இந்தியாவின் பிராந்திய நலன்களை காப்பாற்றும் ஒரே ஒரு நோக்குடன் இத் தேர்தலை எதிர்கொள்கிறது.

#சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் #தமிழ்த்_தேசியப்_பேரவை தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி இத் தேர்தலை எதிர்கொள்கிறது.

அன்பான மக்களே உங்கள் வாக்கு உரிமை காப்பதற்கா...? உலக வல்லாதிக்க நலன்களை காப்பதற்கா...? இந்த வகையில் தெருவில் கெல்மெற் சண்டை போடுவோரின் கதிரை ஆசையும், பதவி ஆசையும் பன்னியாக தெரிகின்றது. ஏமாற்று காரர்களினை விட மக்கள் நலனுக்காக வருவோரை கள். மாற்றம் அவசியம் என்பதை நிருபித்து அடுத்த தேர்தலில் உண்மையின் படி நடக்க ஆவன செய்யுங்கள்

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...