25/02/2018

இனி வருவார்களா முட்டாளாக்க.

அரசியல் என்பது மூன்றுமாதம் மக்களிடம் கெஞ்சி ஐந்து வருடம் மக்கள் கெஞ்சவைக்கும் ஒரு பரஸ்பர கெஞ்சல் விளையாட்டே அரசியல்

உள்ளூராட்சி தேர்தலிலும் அதுவே நடந்தது. இப்போது தேர்தல் முடிந்து 20 நாட்களாகியும் கட்சிகளுக்குள் இழுபறி நிலை முடியவில்லை.

இவ்வாறானவர்கள்  துரோகத்தனம், பழி வாங்கல்களிலும் ஈடுபட்டு ஒட்டுமொத்த வாக்களித்த மக்களுக்கும் தீமையே செய்வார்கள்.

மக்கள் தேவை என்ன இன்று மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை என்ன அதற்கு தீர்வு என்ன என்பதை விட தங்கள் இருப்பு தொடர் நிலை முக்கியம் என வேட்பாளர்கள் பயணிக்கின்றனர்.

பிரதேசபையினால் செய்யக்கூடியதை செய்து முடிக்கவேண்டியதுதான். அதற்குள்ளும் மடமைத்தனத்தை பாவித்து நான்கு வருடத்தை அநியாயம் செய்யபோகிறார்கள்.

இவர்கள் இனி மக்களை தேடி வர போவதில்லை. அடுத்த தேர்தலின் போதே வருவார்கள் மீண்டும் முட்டாள்கள் ஆக்க.


28/01/2018

தீர்கதரிசியின் வார்தை விளங்காதவர்களா??

இந்த உலகம் மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை . ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுய நலத்தையே  முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை, என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிர்ணயிக்கின்றன. ஆகையால் எமது போராட்டம் தார்மீக அறத்தினை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரிகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மேதகு வே.பிரபாகரன்.

இதனை எப்பவோ சொல்லியிருந்தும் மக்கள் ஏமாற்றும் இயல்புடையோரை நம்புகின்றனரா?

இல்லை வேறு தெரிவின்றி வாழ்கின்றனர். அதனை பயன்படுத்தியே இவர்கள் தமது அரசியலை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு நாடும் தமது தேசிய சுய நலத்திற்காக ஒன்றிணைந்தன. தமிழரின் போரை அழித்தன. தமிழரே உதவினர்.

தற்போது சேந்து ஒழித்த நாடுகள் தமது இருப்பிற்காக தமிழரை நாடுகின்ற போது அரசியல் வாதிகள் சுகபோகம் அனுபவிக்கின்றனர்.

கொத்து குண்டு போட்டாலும் அணுகுண்டு போட்டாலும் தமது தேசிய பொருளாதாரத்திற்கு பலன் இல்லாவிட்டால் யார் செத்தாலும் ஏனைய நாடுகளிற்கு எந்த சிக்கலும் இல்லை.

இதனை தமிழினத்தின் தலைவர் ஒருசில வார்த்தைகளில் உலகின் தன்மையை சொல்லியிருக்கிறார்.

இனியாவது மக்கள் தெளிவடைவர்.

24/01/2018

புலம் பெயர் தமிழர்கள் பிரிகின்றார்களா??

புலம் பெயர் தமிழர்கள் பிரித்தாளும் நடவடிக்கையில் செயற்படுகிறார்களா? இல்லா ஈழத்திற்காக குரல் கொடுக்கின்றனரா?

மக்கள் குழம்பிய நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன? பிரித்தானிய தமிழரும் அவுஸ்ரேலிய தமிழரும் எதிர்க்க தமிழர் அதிகம் வாழும் கனடாவில் இல ங்கை பாரளுமன்ற உறுப்பினர் சென்று உரையாற்றி வந்திருக்கின்றார்.

யாருடையா உரையாடலகா  இருந்தாலும் தமிழர்களின் ஒரே தலைவன்  பிரபாகரனையோ அல்லது உயிர்காத்த காவல் தெய்வங்கள் மாவீரர்கள் போராளிகள் பற்றியதாக இருக்கின்றது.

இங்கு சிலரின் இருப்புக்கும் சிலர் தம்மை முன்னிறுத்தவுமே இவ்வாறு செயற்படுகின்றனர்.

"புலிகளை நினைக்கும் போது வருவது என்ன அச்சம் எலிகளைப் போல் ஓடி ஒழிப்பதுதான் மிச்சம்" எனும் பாடல் அடிகள் இங்கு பலருக்கு பொருந்தும்.


இப்போது தமிழர்களினது நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் தகப்பன் இல்லாத பிள்ளைகளையும் தாயையும் போலவே ஈழமும் தமிழரும்.

இந்த நிலைக்கு பிள்ளைகள் ஒன்றிணைய வேண்டும். இல்லாது விட்டால் வளம்  எல்லாம் சுரண்டப்பட்டு விடும்.

புலம் பெயர் அமைப்புகாலும் புலம் பெயர் தமிழர்களுமே இதற்கு சரியான தீர்வை வைக்கமுடியும். அவர்களிடமே சாவி இருக்கிறது.

அதனை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

22/01/2018

பிணைமுறி சிறு விளக்கம்.

பிணைமுறி என்றால் என்ன?

பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும். மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அப்படியென்றால் நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று என நினைத்துக்கொள்க. அவற்றை சாதாரண மக்களைப் போன்றே வங்கிகளும் கொள்வனவு செய்யமுடியும். அதற்காக வட்டியும் வழங்கப்படுகின்றது. இதனால் பிணைமுறிகளை கொள்வனவு செய்வது மக்களைப் போன்றே, வங்கிகளுக்கும் முதலீட்டு உபாயமொன்றாகும்.

வங்கிகள் இந்த பிணைமுறிகளை கொள்வனவு செய்வதேன்? என நீங்கள் நினைக்கக்கூடும். வங்கிக் கிளைகளுக்கு கிடைக்கப்பெறும் வைப்புகளை கடன் கொடுத்தே அவர்கள் இலாபமீட்டுகின்றனர். அதேபோன்று, அவர்கள் இலாபமீட்டும் எதிர்பார்ப்பில் கடன் வழங்குகின்றனர். கடன் வழங்கியும் எஞ்சியிருக்கும் பணத் தொகையை கிடப்பில் வைக்காது அதனை பிணைமுறிகளில் முதலிடுகின்றனர். பிணைமுறிகளென்பது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கால எல்லையைக் கொண்டவைகள். திறைசேரி பில்கள் வருடமொன்றுக்கு குறைவான கால எல்லையைக் கொண்டதாகும். 

எக்ஸ் என்பவர் ஒரு இலட்சம் செலுத்தி பிணைமுறியொன்று கொள்வனவு செய்தார் எனக்கொள்வோம். காலம், ஒரு வருடம் எனின் ஒரு வருட முடிவுக்குள் கடனையும் வட்டியையும் திருப்பிக் கொடுப்பதற்கு மத்திய வங்கி சான்றிதழொன்று வழங்கும். அரசாங்கத்திற்கு பணம் வழங்கினால், அரசு பணம் அச்சிட்டாயினும் கடனை திருப்பிச் செலுத்துமென்ற நம்பிக்கை கடன் கொடுப்பவரிடம் இருக்கும். பிணைமுறியில் பணத்தை முதலீடு செய்வது சவாலற்ற முதலீட்டு வழி முறையாகும். இதனால், அதிகமானோர் பிணைமுறியில் முதலிடுகின்றனர்.

எக்ஸ் என்பவரிடம் ஒரு இலட்சம் பெறுமதியான பிணைமுறி சான்றிதழொன்று இருப்பதாக கொள்வோம். பிணைமுறிக்கு உள்ள கேள்வி மற்றும் வழங்கலுக்கேற்ப சந்தையில் பெறுமதி கூடவோ, குறையவோ முடியும். அதை நாம் இவ்வாறு நோக்குவோம். சாதாரண தேங்காயொன்று 50 ரூபாய்கள். அசாதாரண தேங்காயொன்றின் விலை 60 அல்லது 70 ரூபாய்களாக இருக்கலாம். அதேபோன்று, 30 அல்லது 40 ரூபாய்களாகவும் இருக்கலாம்.

மத்திய வங்கி பிணைமுறிகளை விற்பதையே ஏலத்தில் மேற்கொள்கின்றது. அது 100 வீதம் சுதந்திரமான ஏல விற்பனையாகும். அவற்றில் மத்திய வங்கி ஆளுநருக்கு கலந்துகொள்ள முடியாது. காரணம், எக்காலத்திலுமே மத்திய வங்கி ஆளுநர் என்பது அரசியல் நியமனமாகும். ஏலத்தை வழிநடத்துவது பிரதி ஆளுநர் ஒருவராகும். இது தவறின் நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதால் பாதுகாப்பாகவே முன்னெடுக்கப்படுகின்றன. யாருக்கும் இவற்றில் விரல் நுழைக்க முடியாது.

இப்போதுதான் கதையின் சுவாரஷ்யமான பகுதி வருகின்றது. அர்ஜுன் மஹேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார். அவர் சிங்கப்பூர் பிரஜையொருவர். ஒரு நாட்டின் பணத்தாள்களில் கையொப்பமிடுவதும் நிதியமைச்சரும் ஆளுநருமேயாகும். இலங்கையின் பணத் தாள்களில் சிங்கப்பூர் பிரஜையொருவரே கையொப்பமிட்டுள்ளார். அப்பதவிக்கு பொருத்தமான இலங்கையர் ஒருவர் இருக்கவில்லையா? அது பெரும் பிரச்சினையாகும்.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவரின் குடும்பத்தவர்களுக்கு பிணைமுறி கொடுக்கல் வாங்கல் களுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை நடத்திச்செல்ல அனுமதியில்லை. எனினும், அர்ஜுன் மஹேந்திரனின் மகளைத் திருமணம் செய்த அர்ஜுன் அலோசியஸ் அவ்வாறானதொரு நிறுவனத்தை நடத்திச் சென்றார். அதுவே பெர்பெஷுவல் ட்ரெஷரீஸ். இங்கிருந்தே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

பிணைமுறி ஏலமென்பது சிக்கல்கள் நிறைந்த கதையாகும். அதனால் இந்த கதையை விற்பனை நிலையமொன்றாக ஒப்பிட்டு பார்ப்போம்.

அர்ஜுன் மஹேந்திரன் என்பவர் மத்திய வங்கி எனும் விற்பனை நிலையத்தின் தலைவராவார். விற்பனை நிலையத்தில் பிணைமுறி எனும் தேங்காய் விற்பனை நடைபெறுகின்றது எனக் கொள்வோம். அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் தேங்காய் வியாபாரி. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போன்று, தேங்காய்களின் விலை காலத்திற்கு காலம் கூடிக் குறையும். 

இந்த பிணைமுறி எனப்படும் தேங்காய்களின் விலை 100 ரூபாய்களாக இருந்து, 120 ரூபாய்கள் வரை விலை அதிகரித்த காலம் எனக் கொள்வோம். விற்பனை நிலையத்திற்கு நல்லவை எண்ணும் தலைவராயின் தேங்காய்களை 120 ரூபாய்களுக்கு விற்று இலாபமீட்டுவார். எனினும் அர்ஜுன் மஹேந்திரன் பிணைமுறி ஏலம் எனப்படும் தேங்காய் ஏலத்தில் 120 பெறுமதியான தேங்காயை தனது மருமகனுக்கு 80 ரூபாய்களுக்கு வழங்கும்படி பிரதி ஆளுநரை காட்டாயப்படுத்துகிறார். ஏலம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதியற்ற நிலையிலும், அங்கு சென்று காட்டாயப்படுத்தி, 120 பெறுமதியான தேங்காயை 80க்கு விற்பனை செய்கிறார். இதுபோன்று மில்லியன் கணக்கான தேங்காய்களை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து மருமகனுக்கு விற்பனை செய்கிறார். அவற்றை அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் 120 ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றார். தேங்காயொன்றுக்கு 40 ரூபாய்கள் வரை இலாபமீட்டுகின்றார். மில்லியன் கணக்கான தேங்காய்கள் என்பதால் மருமகனின் இலாபம் பில்லியன் கணக்காகும் என்பதை நான் கூறித் தெரியவேண்டியதில்லை. இந்த இலாபமானது 4000 ஊழியர்களையும், 200 கிளைகளையும் கொண்ட கொமேர்ஷல் வங்கியின் மொத்த வருமானத்தையும் விடவும் அதிகமானதாகும். அவ்வளவு இலாபத்தையும் பெற்ற மருமகனின் நிறுவனம் 20க்கு 20 கட்டிடமொன்றையும் 20க்கு குறைந்த ஊழியர்களுடன் ஒரு கிளையையும் கொண்டதாகும்.
நீங்கள் தலைவராக இருக்கும் விற்பனை நிலையத்திலிருந்து 120 ரூபாய்கள் பெறுமதியான தேங்காயை உங்கள் உறவினறொருவருக்கு 80 ரூபாய்களுக்கு விற்பனை செய்தால், விற்பனை நிலையம் நட்டத்தை எதிர் கொள்ளுமா? இல்லையா? இப்போது நீங்கள் இலாபமீட்ட வேண்டுமெனின் அதற்கான மாற்று வழியென்ன? உங்களது விற்பனை நிலையத்தில் மீன் டின் ஒன்றை 150 ரூபாய்களுக்கு விற்பனை செய்தால், அதனை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்தே, தேங்காய் விற்பனையில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யலாம். அதேபோன்று, விற்பனை நிலையத்திற்கு மீன் டின் வழங்குபவரிடம் 130க்கு பெற்ற மீன் டின்னை இப்போது 110 ரூபாய்களுக்கு பெற்று, 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்தே தேங்காயில் இழந்த நட்டத்தை ஈடுசெய்யலாம்.
விற்பனை நிலையத்திற்கு மீன் டின் வழங்குபவரைப் போன்றே, பிணைமுறிகளுக்கு பணம் முதலிடுபவர்கள். மக்களும், வங்கிகளும் மேலதிக பணத்தை பிணைமுறியில் வைப்பிலிடுகின்றனர். அதற்காக திருப்பிச் செலுத்தும் தொகை குறைவடைகின்றது. 130ரூபாய்களின் மீன் டின்னுக்கு 110 வழங்குவது போன்று. அதேபோன்று, மத்திய வங்கியில் இருந்து ஏனைய வங்கிகளுக்கு கடன் வழங்கும்போது, திருப்பிப் பெறும் வட்டி வீதத்தை அதிகரித்தல். அது, 150 ரூபாய்கள் பெறுமதியான மீன் டின் ஒன்றை 200 ரூபாய்களுக்கு விற்பதைப் போன்று. நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வங்கிகளுக்கு மத்திய வங்கி அதிக வட்டித் தொகைக்கு கடன் வழங்குகின்றது. அதிக வட்டித் தொகையை கொடுத்து கடன் பெறும் வங்கிகள், மக்களுக்கு அதிக வட்டிக்கு கடன் வழங்குகின்றது.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊழலால், சாதாரண மக்கள் வங்கிகளில் பெறும் கடன்களுக்கான வட்டித் தொகையும் அதிகரித்துள்ளன. 150 ரூபாய்களின் மீன் டின்களை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்வதைப் போன்று. பொது மக்கள் வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டால் வழங்கப்படுகின்ற வட்டித் தொகையும் குறைவடைந்துள்ளது. அது, விற்பனை நிலையத்திற்கு 130 ரூபாய்களுக்கு மீன் டின் வழங்கியவருக்கு 110 ரூபாய்கள் கொடுப்பது போன்றாகும்.

இப்போது, விற்பனை நிலையத்திற்கு மீன் டின்களை வழங்கிய வியாபாரி நட்டமடைந்துள்ளார். ஏன்? 130 ரூபாய்களுக்கு விற்பனை செய்த மீனுக்கு, கிடைப்பது 110 ரூபாய்களே. இன்று அதுபோன்ற நிலைமையே ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மத்திய வங்கி வழங்கவேண்டிய தொகையைவிட குறைவாகவே வழங்குகின்றது. நாட்டின் மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய வட்டி வீதம் குறைவாகவே வழங்கப்படுகின்றது. சிங்கப்பூர் பிரஜையொருவரின் மருமகன் இலாபமடைய முழு நாட்டு ஊழியர்களினதும் வட்டி வீதம் குறைவடைந்துள்ளது. அந்த நட்டத்தை சரிசெய்ய வங்கிகளில் கடன் பெற்றவர்களின் வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலகுவாக கூறுவதென்றால், அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் பெற்ற இலாபத்தால் நட்டமடைந்த மத்திய வங்கியின் கணக்குகளை சீர்செய்ய பொதுமக்கள் முதுகுகளில் சுமையேற்றப்படுகின்றது. மத்திய வங்கி அடைந்த நட்டத்தை சீர்செய்ய இன்னும் 7 அல்லது 8 வருடங்கள் செல்லவேண்டியிருக்கின்றது.

21/01/2018

அரசியலில் மக்கள் தெளிவடைவது எப்போது.

வடக்கு மக்களை பொறுத்தவரை அரசியலில் தெளிவு என்று சொல்லவே முடியாது. தெளிவு படுத்துவோரையும் ஏற்பதும் இல்லை.

இம்மக்கள் சொற்படி நடப்போரே. அதனால் கண்மூடித்தனமாக ஓட்டை போட்டு துன்ப படுகின்றனர்.

இந்த நிலையே இம் மக்களின் வேதனைக்கு காரணம். சிறுபாண்மை கட்சிகளின் வாக்கு பலம் என்று உணர்ந்தும் பேரினவாதம் இவர்களினை வஞ்சிக்க தவறவில்லை.

எப்போது அரசியலுக்கு யார் தேவை என்பதை இம்மக்கள் முடிவெடுக்கவேண்டும். அதில் கட்சி பேதங்கள் பார்த்து போடுகின்றனர் என்றால் மக்கள் தெளிவில்லை என்பதே.

மக்கள் தெளிவு மிக முக்கியம் ஆட்சியாளருக்கு ஒரு பயம் வர மக்களால் மட்டுமே செயற்பட முடியும்.

19/01/2018

படித்தவர்களிற்கு ஆப்பா??

ஆம் எல்லோரும் யோசிக்காத விடயம். திசைதிருப்பல் என்பதும் இதுவே. படித்தோர் பலர் எதிர்பார்க்காத இடத்தில் தாக்குதல். இது யோசிக்க வேண்டிய தருணம். 

பல படித்த அலுவலகங்களில் வேலை செய்வோர் சம்பள உயர்வு என்ற நிலையில் குதுகலமாக்கி பொருட்களின் விலை அதிகமாகி இருக்கிறது. 

இதனை உணரும் தருவாயில் எம்மவர் இல்லாத போது அவர்களும் பணம் ஒன்றே குறிக்கோள் எனும் போது பலருக்கு குழந்தை பாக்கியம் கூட இல்லாது செய்யப்படிருக்கிறது. 

இங்கு பலரின் கருத்து விதி. ஆனால் ஒரு சிலர் சரி ஏற்று கொண்டாலும் பலரும் குழ ந்தை இன்றி இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது. 

அதிலும் அரச அலுவலர்கள் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். அதிக மனாழுத்தமும் காரணம்.

இங்கு படித்தவர்கள் பணக்காரரே அதிகம் தாக்கப்படுகின்றனர். அவர்கள் பணத்திற்காக தமது இருப்பை இழக்க போகிறார்கள். 

ஒரே தீர்வு பழமை பின்பற்றுவதும் இயற்கை உணவு பழக் கவழக்கங்களினை பின்பற்றுவதுமே. 

ஆனால் பணம் வறட்டு கௌரவம் பார்க்கும் எம்மவர் இக்கட்டுரையை கூட தூக்கி வீசலாம். 

ஆனால் உங்களை அறியாமல் நீங்கள் அழிவதை தடுக்கமுடியாது. புற்றுனோய் தாக்கம் கூட அதிகளவு தமிழரையே தாக்குகின்றது. இதனை மகரகம போய் வந்தோரை கேட்டால் தெரியும். 

சரியான பாதை சரியான தலமை முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

18/01/2018

சாக்கடையில் ஏன் படித்தவர்கள்.

படித்தவர்கள் அதிகமாக அரசியலில் இருக்கின்றனர். ஏன் எல்லோரும் சாக்கடை எனும் இடத்தில் கொட்டகை போட்டு படுத்திருக்கின்றனர். அங்கேதான் பாதுகாப்பு மற்றும் பணம் அதிகம். இக்கதையை படித்தால் புரியும்.

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained""
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றாரெுவன் சொன்னான் , பொரு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
.
""கலியுகம் "" என்பது இது தான் . This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.
.
True. Knowledge is nowadays very important than money in this world.

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...