02/05/2018

மாகண சபையிலும் கோட்டை விடுவார்களா???

ஆம் பிரதேச சபை தேர்தலில் கோட்டை விட்டவர்கள் மாகாண சபையில் என்ன செய்வார்கள். புதிய அணி என முன்வருவோர் கூட கோட்டை விட வைப்பார்களா??

பலரது அரசியல் இருப்புக்கு புலிகளும் அவர்களது அற்பணிப்புமே காரணமாகிறது. இத்தோடு பாதிக்கப்பட்ட மக்களும் அதிகம்.

இவர்கள் எல்லோரும் தத்தமது எண்னத்தில் சண்டை போட்டு கனிந்து வருவதை வெம்ப வைக்கும் நிலையில் இருப்பதே வேதனை.

இவர்கள் ஏமாற்றுவது தெரிந்தும் மக்கள் ஏன் சரியான பாடத்தை படிப்பிக்கவில்லை. ஏன் கோட்டை விடுகின்றனர்.

என்ன காரணம் ஏன் இலங்கை இந்திய தமிழர்கள் மாற்றம் பெறது பயணிக்கின்றனர். கோட்டை விட்டுவிட்டு புலம்பி திரிந்து மீண்டும் அதே பிழையை அதே போல விட்டுவிட்டு கலங்குகின்றனர்.

மாகண சபையிலும் இதே கோட்டை விட்டால் இவர்களின் நிலை கவலைக்கிடமே. எல்லாம் மக்கள் கையிலேயே இருக்கிறது.

அரசியல் வாதிகளின் சரியான பாதைக்கு மக்களின் தீர்ப்புல்தான் இருக்கிறது. இந்த மாகாண சபையிலாவது தெளிவுடன் தீர்மானிக்கா விட்டால் பதவி ஆசையுள்ளோர் அறிக்கையுடலுடன் காலத்தை வீணடிப்பார்கள்.

எனவே மீண்டும் மீண்டும் தவறிழைக்காது யாரு எப்போ தேவை என்பதை சரியாக தீர்மானித்து தம்மை மக்கள் காப்பாத்த வேணும்.

அதன் பின்னாவது பலர் பயம் மற்றும் நேர்வழியில் பயணிக்க உதவும்.

01/05/2018

ஏன் குறிபார்கப்படுகிறது வடமராட்சித் தொகுதி





வடமராட்சித்தொகுதி ஏன் அரசியலில் குறிபார்கப்படுகிறது. இது சந்தேகம் எழதா ஒரு கேள்வி. புலன்களிற்கு அகப்படாத ஒரு நடவடிக்கை. இது சர்வசாதரண விடயமும் இல்லை.

சுமந்திரன் ஒருபக்கம், மறுபக்கம் கயேந்திரன், கயேந்திரகுமார் இவர்களின் போட்டியில் தற்போது இராமநாதன் என பெரும் புள்ளிகளின் போட்டி 

யாருமே எதிர்பார்காத நடவடிக்கை. இங்கு எல்லோரும் வருவதற்கு காரணம் புலனுக்கு அகப்படுமா??? விடை தெரியாத கேள்வி.

போட்டி போடுவோர் ஒவ்வொரு கட்சியிலும் அத்தொகுதிக்கான வேட்பாளர்கள். இவர்களிடம் கேட்டால் தாம் பிறந்த அல்லது வளர்ந்த தமது பரம்பரை என கூறப்படும். ஆனால் அதற்கு மேலாக இருப்பதை அறிய வாய்ப்பு குறைவே மக்களுக்கு. 

இந்த இரகசியம் யாது. எல்லாம் திட்டமிடப்பட்டவையா?? இதனை காப்பாற்த துடிப்பவர் யார்?? உடைக்க துடிப்போர் யார் என்றால் மக்களுக்கு புரியலாம். 

சில நிகழ்வுகள் வடமராட்சியை நோக்கி நகர்வதன் அர்த்தமும், அதனை கைப்பற்ற துடிப்போர் எண்ணமும் அவர்களின் ஆழ்மன செயற்பாடுகள்.

இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் மேதின நிகழ்வும் நெல்லியடி மைக்கல் விளையாடி மைதானத்தில் ஜே.வி.பி கூட நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்





ஆயுத யுத்தம் 2009 உடம் மௌனித்ததும் பல யுத்தங்கள் தொடங்கின. ஆயுத யுத்தத்தில் வாழ்ந்த மக்கள் சந்தோசமாக வாழ்ந்தனர். இப்போது தொடங்கியிருக்கும் யுத்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருந்தனர்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூட இந்த கொடுரங்களில் இருந்து பாதுகாப்பாக இருந்தனர். 

ஆய்த யுத்தம் முடிந்ததும் கொள்ளை, லஞ்சம், ஊழல், செல்வாக்கு அவை எல்லாவற்றையும் விட போதை வஸ்து அமோக விற்பனை, விபச்சார இடங்கள் என்பன அதிகரித்தன.

ஆரம்பத்தில் இவற்றிற்கு ஆயுதம் மூலம் இனம் மத கலாச்சார வெறுபாடின்றி வழங்கிய தீர்ப்பு குறைய காரணம்.

ஆனால் தற்போது சலுகை செல்வாக்கு, அரசியல் பிரமுகர்கள் பணம் என அதிகார வர்க்கத்தினரிடம் இருப்பதால் இந்த யுத்தம் வளர்ச்சியில் யாரும் தடை போட முடியவில்லை.

கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பிறாடோ, பென்ஸ் போன்ற உயர்ரக அதிகார வர்கத்தினரின் செல்வாக்கில் பயணிக்கும் போது எளியோர் பார்த்து பெருமூச்சு விடும் நிலை.

தட்டி கேட்போர் தட்டப்பட்டும், சிலருக்கு பொக்கெற் நிரப்பபடும், செல்லும் போது சட்டம் காக்கும் பொலிசார் இயால கொடுமையால் தாமும் வாங்குவதன்றி வேறு வழிதெரியாது தம் துறையயே கேவலப்படுத்தும் நிலை.

வளர்ந்திருக்கும் பதவி, அதிகார செல்வாக்கு யுத்தம் அழிக்கப்பட சிறந்த அரசியல் தலைவர்களின் வருகை முக்கியம்.

இங்கு இருக்கும் தலைவர்கல் பலர் அறிக்கை மட்டும் விடுவோராயும், தமது செல்வாக்கு அதிகாரத்தை மேம்படுத்துவோராயும், அதிகார போட்டி போடுவோராயும் இருக்கின்றனர்.

இப்போட்டி போட்டுகொள்ளும் இவர்கள் பொது இடத்தில் போதை பற்றியோ மக்கள் தேவைப்பாடு பற்றி பேசுவதன்றி தமது அதிகார பலத்தை காட்டி அடக்க நினைக்கின்றனர்.

இந்த போட்டிகள் யாவும் ஆயுத யுத்த மௌனிப்பை வரவேற்பதோடு அதனை விழா எடுத்து கொண்டாட தவறவுமில்லை.

ஆனால் ஏளை எளியோர் இதில் பங்கெடுத்து தமக்கு தாமே குழிதோண்டுவதுதான் அதிக வேதனை.

இந்த யுத்தங்கள் கொடுரமாக் இலங்கையே சிக்கி தடுமாறும் போது யாராலும் காப்பத்த முடியாது என்பதும் நிதர்சன உண்மை.

மக்கள் விழிப்பும் சரியான திட்டமிடலும் சிலவேளைகளின் சரியான தலைவர்களினை தேர்ந்தெடுத்து நல்ல பாதைக்கு வழிவகுக்கலாம்.

கலாச்சார அழிவும் கூட மீண்டும் ஆயுத யுத்ததால் மாத்திரமே காப்பார்றும் நிலை வரபோகுது.

எல்லாம் அவன் செயல்

22/04/2018

மனதில் வலி இருப்போர் மத்தியில் வெளிப்பூச்சு மினுங்குது.

முள்ளி வாய்க்கால். எல்லோரும் எல்லா தமிழனும் உச்சரிக்கும் சொல். இருக்கும் போது திட்டினோம், ஒழித்தோம், நாட்டைவிட்டும் அனுப்பினோம்.

இன்று இருப்பிற்கு, பணத்திற்கு, பதவிக்கு அரசியலிற்கு முள்ளிவாய்க்கால் தேவைப்படுகிறது.

ஓடியோருக்கு, ஒழித்தோருக்கு, பதவி பட்டம் தேவைப்படுவோருக்கு, வெளி நாட்டு வாழ்க்கைக்கு, அதற்கு மேல் இந்திய தமிழ் நாட்டு அரசியல் சினிமாவிற்கும் தேவைப்படுகிறது.

அனுபவித்து சித்திரவதைப்பட்டு, புற்று நோயால் வேதனைப்பட்டு, உறவிழந்து, வீடிழந்து வாழ்வை வாழ உழைப்போர் முள்ளிவாய்காலில் தவறவிட்ட தலைமையை தேடுகின்றனர். தமக்கான கலாசாரத்தை, பாதுகாப்பை, தேடுகின்றனர்.

இவர்கள் மத்தியில் போக்கில் மக்களை குழப்பி தமது வாக்கு வங்கிக்கு ஓட்டுக்களை சேர்க்கும் நிகழ்வுகள். களைத்தவனுக்கு மீண்டும் மீண்டும் களைப்பையை கொடுத்து கெடுக்கும் மனிதரானார்கள்.

அவர்கள் எழுந்தால் தட்டி தடவி படுக்க வைக்க எதிரியை துரோகியை நாடி தம்மை நல்ல போர்வை போர்த்தி காட்டுவோர் கூட நாளை முள்ளி வாய்க்காலில் கண்ணீர் நாடகம் போடுவதுதான் துயரப்பட்டவனுக்கு மிகுந்த வலி.

முள்ளிவாய்க்கால் தமிழர் எல்லாவற்றையும் தவறவிட்ட இடம். அங்கு வேதனைப்படும் உள்ளங்கள் பலது வரும். வெந்த புண்ணில் வெல் பாச்சுவது போல் முகனூலில் கொண்டாட செல்லதீர்கள். வேதனையின் களம்.

எல்லாம் இழந்த இடத்திற்கு ஏதிலிகளாக ஒரு நாள் சென்று வாருங்கள்.,, போக்குவரத்துக்கான பணம், தொலைபேசிகள், ஆடம்பர உடைகள், உணவு, நீர் இன்றி சென்று வாருங்கள் அபொழுதாவது நாம் ஒன்றிணைய சந்தர்பம் வரலாம்.


21/04/2018

நாட்டின் நிலமை எங்கே செல்கின்றது.



இன்று நாட்டின் நிலமை எப்படி இருக்கிறது. அதனால் மக்கள் நிலை அவர்களின் மன நிலை எப்படி என்று ஆராய்ந்தால் ஏனோ தானோ என்ற நிலை தோன்றியிருக்கிறது.

செல்வாக்கு நிறைந்தவர்களிற்கு எதனையும் செய்யக்கூடைய நிலையும் பணத்தால் அடையாளங்களையும் மறைக்கும் நிலை அதிகரித்தும் காணப்படுகின்றது.

செல்வாக்கு மிகுந்த நபர்களால் எதனையும் இலகுவாக சாதிக்க செய்ய முடிகின்றது. அவர்களே நிரபராதிகளையும் கூண்டில் அடைக்கவும் முடிகிறது.

யார் யார் எல்லாம் அடிபணிந்து குனிந்து நடக்கிறார்களோ அவர்களே வாழ்ந்து வரக்கூடிய நிலை காணப்படுகிறது.

எந்த ஒரு துறையிலும் அற்பணிப்பு மிக்கோர் இல்லை.  அற்பணிப்பு உள்ளோர் போல் பாசாங்கும் அதனை வைத்து பணம், பட்டம், பதவி சம்பாதிக்க முடிகிறது.

ஊரில் அல்லது ஊடகத்தில் யாரும் இதனை தட்டி கேட்க முன்வந்தாலே அவர்கள் நசுக்கப்படுகின்றனர்.

ஊழல் பற்றி பேசும், பெண்ணியம் பற்றி பேசியும் அதனை தாமே அதிகம் மேற்கொள்கின்றனர். எல்லாம் பாசாங்கு உலகம் என்ற நிலையில். அரச அலுவலர்களில் நேர்மையானரும் ஒதுங்கும் நிலை உருவாகியிக்கிறது.

இப்போது அற்பணிப்பு செல்வாக்கால் சோபையிழந்து போகின்றது. நாட்டின் நிலை என்பதை விட சிறுவர்கள் உகண்டா, ஏன் சிரிய குழந்தைகள் போல் வந்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை.

11/03/2018

இலங்கையின் சிறப்புக்கள், வளர்ச்சிக்கு சாத்தியம்



ஆம் இலங்கையின் சிறப்பு வாழும் நிலைக்கான சூழல், வசதிகள், இயற்கை நிலைகள், கட்டுப்படுத்தும் வசதிகள், என ஒவ்வொன்றாக எடுத்தாலும் இலங்கை ஒரு சிறப்பு மிகு நாடுதான்.

இந்த நாட்டில் கடல் ஆகாய வளி மார்க்கங்கள் இன்னும் மெருகூட்டும். இப்படியான நாடில் ஏன் மக்கள் கடனாளி ஆனார்கள், ஏன் வாழ் முடியாயது தவிக்கின்றனர்.

காரணம் பலவும் கூறலாம் இதற்கு ஒரு சில காரணிகளே இந்த நிலைக்கு காரணம். மூவின மகள் மூவகை சமயம் இருந்தும் பிரச்சினை வருகிறது என்றால் யோசிக்கவேண்டியதுதான்.

இதனை தீர்க்க முடியாதா?? முடியும் என்றால் ஏன் இன்னும் அப்படி நடக்கவில்லை, என்று எல்லாம் எண்ண தோன்றும். எல்லாம் சுயநலன் சார்ந்த காரணிகள் இவற்றை எல்லாம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

இத்தீவு சொந்த காலில் நிற்குமா? அதற்கு வளி இல்லையா?? இங்குதான் எல்லாமே இருக்கிறது.

தமது நீண்டகால் அரசியல் இருப்பை விரும்பும் அரசியல் வாதிகள் சுயமாக முடிவெடுக்க வேண்டும். ஒருதடவை ஆட்சி செய்தாலும் அவ்வாட்சி காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து சட்டத்தை இயற்றவேண்டும்.

தமது பொருளாதார இருப்பையும் தமது வியாபாரத்தையும் இலக்காக கொண்டு ராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபடும் நாடுகளின் இயல்பில் இரு ந்து விடுபட வேண்டும்.

இறக்குமதிகளை முழுமையாக நம்பி இருக்கும் மக்களிற்கு உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்து வரும் ஆட்சியாள் இவற்றை மாற்றம் செய்யாத வகையில் சட்டம் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஓங்கி வளர்ந்தும் புல காட்சிக்கி தெரிந்தும் இன்னும் அதனை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காத இலஞ்ச ஊழல்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி பாரபட்சமின்றிய தண்டனை வழங்கவேண்டும்.

இவை சாத்தியமா என்றால் ஆம் என்பதே பதில். தற்போது இணைய மற்றும் செய்தி தணிக்கை என்பனவும் இந்த அவசர கால சூழலில் சாத்தியமான போது அவையும் இலகுவானதே. 

25/02/2018

இனி வருவார்களா முட்டாளாக்க.

அரசியல் என்பது மூன்றுமாதம் மக்களிடம் கெஞ்சி ஐந்து வருடம் மக்கள் கெஞ்சவைக்கும் ஒரு பரஸ்பர கெஞ்சல் விளையாட்டே அரசியல்

உள்ளூராட்சி தேர்தலிலும் அதுவே நடந்தது. இப்போது தேர்தல் முடிந்து 20 நாட்களாகியும் கட்சிகளுக்குள் இழுபறி நிலை முடியவில்லை.

இவ்வாறானவர்கள்  துரோகத்தனம், பழி வாங்கல்களிலும் ஈடுபட்டு ஒட்டுமொத்த வாக்களித்த மக்களுக்கும் தீமையே செய்வார்கள்.

மக்கள் தேவை என்ன இன்று மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை என்ன அதற்கு தீர்வு என்ன என்பதை விட தங்கள் இருப்பு தொடர் நிலை முக்கியம் என வேட்பாளர்கள் பயணிக்கின்றனர்.

பிரதேசபையினால் செய்யக்கூடியதை செய்து முடிக்கவேண்டியதுதான். அதற்குள்ளும் மடமைத்தனத்தை பாவித்து நான்கு வருடத்தை அநியாயம் செய்யபோகிறார்கள்.

இவர்கள் இனி மக்களை தேடி வர போவதில்லை. அடுத்த தேர்தலின் போதே வருவார்கள் மீண்டும் முட்டாள்கள் ஆக்க.


பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...