01/05/2021

இலங்கையின் வளர்சி எங்கு தடைப்படுகிறது

 இலங்கையின் பொருளாதார வீழ்சியும் வளர்ச்சியும் தங்கியிருப்பது எங்கு என்று பார்த்தால் சின்ன ஒரு இடம்தான். 


இலங்கையின் அனைத்து விடயமும் தங்கியிருத்தல் என்பதன் ஊடாக பல விடயங்களை வளர்க்க வேண்டிய தேவையில்தான் இலங்கை அரசாங்கங்கள் மாறி மாறி செயற்படுகின்றன.


அரசியல் கட்சி சார் அரசாங்கத்தில் மட்டுமே இலங்கையின் பொருளாதாரம், வளர்ச்சி மனித உரிமை, போன்ற அனைத்தும் தங்கியிருப்பது மக்களின் சாபக்கேட்டில் ஒன்றாகும்.


இதனால் கட்சிசார் அரசாங்கம் ஊழல், மோசடி, திறனற்றோரை அரச வேலைக்கு அமர்த்துதல், அரச நிதி மோசமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுதல், அரச நடைமுறைகள் கட்சி சார் அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றப்படுதல், இவ்வாறான செயற்பாடுகளால் வறுமை உள்ளோர் வறுமையிலும், சில முதலாளிகள் மட்டும் வாழ்க்கூடிய சூழலும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. 


இந்த முறையை மாற்ற கட்சிகள் கூட்டிணைந்த தனி ஒரு கட்சி மட்டும் ஏனையவற்றை ஆளும் தன்மையற்ற ஒரு அரசாங்கம் அமையுமாக இருந்தால் ஒரு நாட்டில் வளர்ச்சி அதிகரித்து செல்லும்.


வளர்ந்த நாடுகளின் திட்டங்களை இந்த ஒன்றிணைந்த கட்சிகளின் அரசாங்கம் ஓரளாவது கட்டுப்படுத்தும். இதனால் ஓரளவு நனமையை மக்கள் அடையக்கூடியதாய் இருக்கும்.


இந்த ஆட்சி முறையில் வாழ்த மக்களும், தம் உழைப்பிற்கு பங்கமாக இருப்பதாக உணர்ந்த வளர்முக நாடுகள் மற்றும் பணமுதலைகளும் எவ்வளவு பணம் செலவழித்தவது அல்லது எவ்வளவு மகக்ளை கொன்றாவது இதனை மாற்ற முயற்சிப்பார்கள். 


இந்த நடவடிகையாலும் மக்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள். இந்த பாதிப்பு எதிர்கால சந்ததியையும் கூடவே பாதிக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை. 


சில விடயங்களை மாற்றினாலே நாட்டில் இருந்து வெளியேறும் நபர்கள் நாட்டை நோக்கி படையெடுப்பார்கள். இதனை உருவாகக் நல்ல ஆட்சியாளர்களின் வருகையே மிக முக்கியமாகும். 


எவ்வாறெனினும் ஒவ்வொரு வரும் இவ்வாறு கட்டுரைகளும், துண்டு பிரசுரங்களும், கவிதை, போன்றனவும் மட்டுமே வெளியிட முடியும். இறுதியாக மக்கள் தம் வாக்கை சரியாக பேணாதவிடத்து இதன் பலனை யாரும் அனுபவித்துவிட முடியாது.


29/04/2021

அரசியல் வீழ்ச்சியும் கொரொனாவும்

 

அரசியலில் தம் இருப்பை தக்கை வைக்கவும்,

படம் 1

தமக்குள் உள்ள பிளவுகளை மறைக்கவும் ஒரு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுக்த்திருக்கும்.

அந்த நடவடிக்கைகள் யுத்தம், குண்டுவெடிப்பு, கடத்தல், உள்நாட்டு யுத்த குழு உருவாக்கம், சட்ட விரோத செயற்பாட்டை ஊக்குவித்தல், இப்படி விரோத நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ளும்.

இந்த கால கட்டத்தில் குறித்த அரசாங்கம் தன் கட்சியை தன் தனி நபர்களை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கும். இந்த நடவடிக்கைகள் தம் பிளவுகளை மறைப்பதற்காக தோல்விகளை ஒழிப்பதற்காகவே காணப்படும்.

இதன் போது மகக்ளின் மன நிலைகள் மாற்றப்படும். திரைமறைவில் பல விடயங்கள் நடத்தேறும். மகக்ளுக்கு தீமையாகவே அவை இருக்கும்.

எதிர்காலம் என்று பார்த்தால் அடுத்து வரும் அராசங்கம் வெறும் பாத்திரத்தை வைத்து ஏங்கி தவிக்கும் மீண்டும் தம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்ட விருப்பின் பெயரில் நல்ல விடயங்களை அறிமுகம் செய்து வளர்தெடுக்கும் போது மக்கள் அந்த நடவடிக்கைகள் பழக்க்ப்படாதால் அது கொடுமையாக உணர்ந்து மீண்டும் வங்குரோத்து அரசாங்க ஆட்சியாளரிடம் கையளிப்பர்.

இந்த அரசாங்க மாற்றம்தான் கீழைத்தேய நாடுகளில் அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது.

இப்போ இந்த அரசாங்ங்கள் தம் பிழை, தோல்விகளை மறைக்க அதிகம் கொரொனாவை கொண்டு சுகதார துறையூடாக நிவர்த்தி செய்து வருகிறது.
இதன் கட்டமாக கொரொனாவும் உச்ச கட்டத்தையும் மக்கள் வாழ்வியல் கீழ் நோக்கியும் நகருகிறது.

மேலைத்தேயத்தில் வேறுவித நடவடிக்கைகள். அங்கே நல்ல விடயத்திற்கக அரசாங்கங்கள் கட்சிகள் ஒன்றுகூடும். அப்படி சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரையில் அதைப்பற்றி பார்ப்போம்.

படம் 2

28/04/2021

அரசியலில் சிக்கி தவிக்கும் சில பிரச்சினைகள்


 நாட்டில் ஏற்பட தொற்று நோயாகிய கொரொனா பல சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பல பணக்காரர்கள் கடனாளிகளாகவும் சில நடுத்தர வர்கத்தினர் அதிக பணம் சம்பாதித்தோராகவும் மாறியிருக்கிறார்கள்.


உண்மையில் கொரொனா தொற்றின் பாதிப்பு மரணம் வரை அழைத்து சென்றாலும் அதில் சிலர் தப்பிபது எப்படி, எவ்வாறு அவர்களால் நடமாட முடிகிறது. 


இப்படி பல சிக்கலான கேள்வியும் விடையின்றிய அலைவும் இந்த கொரொனா சில திட்டமிட்ட நடவடிக்கைகள் செயற்படுத்த காரணமாக அமைகிறதா??


அதிகமாக தனியார் கம்பனிகள் பாதிப்படைந்திருக்கின்றன. இதில் விடயம் என்னவென்றால் திட்டமிட்டபடி   ஏதும் நடைபெறுகிறதா? இல்லா உண்மையில் இது கொரொனா தொற்றின் வளர்ச்சியா?? 


இவற்றை எல்லாம் யோசிக்கும் அளவிற்கு மக்களை விடாது இதன் செய்திகளையும் அள்ளி வீசும் ஊடகங்கள். 


எப்படியோ பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். வலிமை உடையோராக வாழவேண்டும் என்பது நமது கட்டாய தேவையாகும்.

16/09/2020

Adsense மூலம் உழைப்பது எப்படி..


 <script data-ad-client="ca-pub-5429385307257882" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>


இந்த லிங்க் போல் ஒரு லிங் உங்களுக்கு கிடைத்தால் நீங்களும் ஒரு இணைய உழைப்பாளிதான்.. இதைத்தான் பல இணைய நடத்துனர்கள் பின்பற்றுகின்றனர்.  

யுரியுப், மூலம் முகனூல் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.. அதற்கு இந்த அட்சென்ஸ் லிங் முக்கியமாக இருக்கிறது.. 


இனையத்தில் பல இடங்களில் மனதை கிழறும் தலைப்புகள் இருப்பதற்கு காரணம் பார்வையாளர்கள் அதிகமாகி இந்த உழைஉழைப்பை அதிகரிக்கலாம்.. 


இதனால் பல இணையங்கள் அதிகமக பொய் செய்திகள, புழுகு செய்திகளால் அலங்கரிக்கப்படும்.. மேல் உள்ள லிங்கை நீங்கள் உங்கள் இணையத்தில் பயன்படுத்தி அதனால் விளம்பரம் வந்தால் அரைவாசி வருமானம் தரப்படும்.

01/11/2019

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே




விளம்பரம் என்பது இன்று பொருளாக இருந்தாலும் சேவையாக இருந்தாலும் மிக முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழர்களுடாக எந்த ஒரு விளம்பரத்தையும் கட்டணமின்றி இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று சிலர் உணர்ந்திருப்பதோடு மேற்கொண்டும் வருவேன்றனர்.

அண்மையில் தென்னிலங்கை உணவகம் ஒன்றிற்காக பல பேர் தங்கள் முகனூலில் எதிர்பதாக கூறி விளம்பரத்தையும் உச்சத்தையுமே கொடுத்தனர்.


சிங்களவரை குஷிப்படுத்த வேலையாட்களை தமிழில் பேசவேண்டாம் என்று கடைக்குள்ளேயே பதாகை வைக்கும் இந்த உணவகத்தை உலகளாவிய தமிழர்கள் கண்டிக்கவேண்டியதும் தண்டிக்கவேண்டியதும் தட்டிக்கேட்க வேண்டியதும் கடப்பாடாகிறது.

மேலும் நாங்கள் செய்யவேண்டியது
Google - peppermint cafe srilanka - review - type ur words and attach this photo.

Google map இலும் இதையே செய்யலாம்.
நான் செஞ்சிட்டேன்.நீங்க வைச்சு செய்யுங்க.இருக்கிற எரிச்சலுக்கு அடிச்சு வெளாட நல்ல இடம்.
இப்படி பலர் பேசி பேசியே இந்த பேபர்மின்ற் கபே பலரது முகனூலில் விளையாடியது.

தமிழருக்கு எதிராக ஒன்றை தொடங்கினால் இலஙகையில் வெற்றி அடையலாம் என்பதும் அதன தமிழரே விளம்பரம் செய்து தருவார்கள் என்பதற்கு இதை விட சான்று வேறு தேவையில்லை.

விளம்பரம் இல்லாது இதனை வேறு முறைகளுக்கூடாக தீர்க்கலாமா என்று யோசிப்பதில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கூடாக கடந்து போய்விடுவர். இந்த உணவகம் இனி உயர்மட்ட வளர்ச்சியடைய தமிழரே காரணமாவர்.

அடுத்த கட்டமாக இந்த செயற்பாட்டை மறந்து வேறொன்றினுள் புகுந்து அடுத்த வேலையை பார்பார்கள் எதிலும் தொடர்ச்சி இருப்பதில்லை.

29/10/2019

தேர்தல்லும் மக்களும் இடையில் யாரு






இலஙகை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவருக்கான தேர்தல் சூடுபிடிக்குமா??

மக்கள் என்ன யோசிக்கிறார்கள். போட்டியாளர் என்ன செய்கிறார்கள் என்றால் எல்லாம் புரியாதே உள்ளது..

எதிர்வு கூறமுடியாத அளவில் ஊடகஙகளும் ஆய்வாளர்களும் சொக்கி போயிருக்குமளவிற்கு தேர்தல் நிலவரம் காணப்படுகிறது. தற்போதைய எதிர்வு கூறல் முகனூல் பார்வையாளர்களினை கொண்டே கூறப்படுகிறது.

இந்த எதிர்வு கூறல் எவ்வளவு சாத்தியம். யுத்த முடிவு தமக்கே வெற்றி என்று கோத்தாவும் குடும்ப ஆட்சி முடிவு தமக்கே வெற்றி சஜித்தும் இதற்கிடையில் அனுர தம்பணியை கச்சிதமாக நகர்த்துகிறார்.

ஏனோ படித்த பலர் இவருக்கு பின்னால் இருந்தாலும் கீழ்மட்ட மக்கள் வாக்கு எங்கே என்பதே கேள்விகுறி. மக்கள் தாம் தேர்ந்தெடுக்கும் யாராலும் நன்மை இல்லாத நிலை என்ற எண்ணத்தில்தான்.

இலஙகை எனும் திருநாட்டில் யார் வந்தாலும் விலைவாசி கூட்டி மக்களின் வாழ்வில் விளையாடுவோரே இவர்கள். சரியான வேட்பாளர் தாம் விடும் விஞ்ஞானபவத்திற்கு ஏற்ப நடப்பதுமில்லை.

வெறும் வாய்ப்பேச்சில் மட்டுமே ஆட்சி தொடர்கிறது. மக்கள் நலன் சார்ந்து செயற்பட்ட அரசு அமைந்ததில்லை. அவ்வாறு அமைய மேலைத்தேய நாடுகள் விடப்போவதுமில்லை. 

உறவுகள் ஏன் உதவுவதில்லை.







உறவினர்கள் நல்லா இருந்தும் சிலர் முன்னேற்றமின்றி மிகவும் கடினமான நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன.

இரண்டே இரண்டு காரணஙகள்தான். அதில் நம்பிக்கையாக முன்னேற வழஙகப்படும் பணத்தில் சரியாக திட்டமிட்டு முன்னேற்றம் அடைய சிந்திக்காமையும் செயற்படாமையும்.

அடுத்து உறவுகளுக்கு பணம் வழஙகினால் தாம் உதவியது தெரியாது என்பதால் ஊர் பெயெர் தெரியாதோருக்கும், கோவில் குளம் விளையாட்டு கழகம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வழஙகினால் தம் பெயரும் புகழும் நிலைக்கும் என்று வழஙகுவர்.

இந்த இரண்டு காரணங்களால் உறவுகள நல்லா இருந்தும் உறவினர்கள் வறுமையில்.

அண்மையில் வெளிநாட்டில் ருந்து வந்த மகள்  தனது தாய்க்கு ஒரு ரூபாய் கூட வழஙகவில்லை. ஆனால் தன்னை பார்க்க தன் இருப்பிடத்திற்கு வந்த வெளியூரவர்களிற்கு 5000 கொடுத்தார். ஏன் எனில் தன்னை பற்றி அவர்கள் நல்லாக பேசவேண்டும் என்று.

தாய்க்கோ சகோதரிகளுக்கோ கொடுத்தால் யாரும் பேசமாட்டார்களாம். போலி வேசதாரிகளின் மத்தியில் நாமும் வாழ்கிறோம் என்று சொல்லி அந்த தாய் மெல்ல நகர்ந்தாள்.

இப்படி பல விடயங்கள் நடந்தாலும் சிலவே வெளியில் வருகின்றன. சிலரே வெளிப்படுத்துகின்ற. எல்லாம் விதி என்று நகர்வோராலே பல பிரச்சினைகள் தொடர்கின்றன

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...