Posts

முரண்பட்ட குடும்பத்தில் புகுந்த தளபதி. கணவர்கள் புலம்பல்

Image
கணவன் மனைவிக்கிடையில் குடும்ப தகராறு ஏற்பட்டால் மூன்றாம் நபர்கள் புகுந்துவிடுவது இலகு. அதன் பின் அந்த பெண்ணிற்கு அன்பு ஆதரவு பணம் இவை கிடைக்கும் போது முழுவதுமாக அப்பெண் மாறிவிடுவாள். இது பெரும்பாலும் குடிகார ஆண்களின் வீட்டில் இடம்பெறுவதுண்டு. அவர்கள் குடித்து விட்டு தம்மை யாரும் புடுங்கமுடியாது, தானே அறிவாளி நேர்மை கௌரவம் என மதுவில் மார்தட்ட அவர் மனைவியின் நடவடிக்கை வேறு ஒருவருடன் உல்லாசமாக இருக்கும். இத்தவறிற்கு காரணம் அந்த ஆடவனே தவிர புகுந்த மற்றவனோ, அல்லது பெண்ணோ இல்லை. அப்பெண் வாழ்வதற்கு தேவையானை கிடைத்த இடம் எதுவோ அங்க அவள். பழமரம் தேடும் பறவைபோல், இன்று குடிகாரர் போல் இருக்கும் தமிழ் அரசியவாதிகள் நிலையும் மக்கள் நிலையும் இவ்வாறு இருக்க துரோகிகள் எதிரிகள் என்றோர் மக்களின் மனங்களில் புகுந்தனர். இது ஒரு சாதாரண உளவியல்தான். இதனை பயன்படுத்தி அன்பை சூறையாடிய இராணுவ தளபதிக்காக அழுவதும், தான் வீரனாக இருந்து தான் அழுவது தெரிய கூடாது என்று கறுப்பு கண்ணாடி வேறு அணிந்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் வாய்ச்சொல் வீர அரசியல் வாதிகளை விட மிக அன்னியோன்னியமாக வாழ்ந்திருக்கிறார...

தனியார் வங்கி தலைவரை உருவாக்குமா???

Image
தனியார் வங்கியின் விடயம் எல்லோரையும் உணர்ச்சி பொங்க வைத்ததாக இருந்தது. இந்த நடவடிக்கை பிறருக்கு பாடமாகுமா?? இல்லா சிரிப்பாக விளையாட்டாக மாறுமா??? இந்த சந்தேகம் ஆரம்பத்தில் இருக்க வாய்ப்பில்லை. அவ்வளவிற்கு முகனூல் கலங்கி கலக்கிக்கொண்டிருந்தது. வங்கி கணக்கு மூடப்பட்டன. அதனை சிலரே செய்தனர். மிகுதி பேர் என்ன செய்வது என்ன நடக்கிறது என அறிய வாய்ப்பு குறைவாக இருந்தது. எந்த பத்திரிகையும் கொட்டை எழுத்தில் பிரசுரிக்கவில்லை. வானொலிகளும் இதனை அதிகளவில் கூறவில்லை. அதற்கு மேல் கற்றோர் பலரும் இணைய உலவிகளாக இருக்கும் பலரும் இதனை கைக்கொண்டனரா என்றால் அதுவும் சந்தேகமே.. இத்தனைக்கும் மேல் இது ஒரு சிறந்த யுத்தமாக இருந்தாலும் இந்த யுத்தத்தை முன்னெடுத்து செல்ல யாரும் முன்வரவில்லை. அந்த முன்வருகை மிக முக்கியமானது. இந்த நடவடிக்கை ஒரு தொடராக இடம்பெறவேண்டும். அப்போதுதான் இதன் தாக்கம் ஏனையோரையும் அதிகளவில் தாக்கும். இந்த நடவடிக்கையின் followup இல்லாமை ஏளனத்தையும் கேலியையும் ஏனையோருக்கு எதிராக உணர்ச்சி வசப்படும் போதும் ஏற்படுத்தும். அது ஒட்டுமொத்த இனத்தையுமே பாதிக்கும். எனவே ஒரு நடவடிகை எடுக்கும் ...

போரின் பின்னானா அரசியலில் மாணவர்கள்

Image
இன்று மூத்த அரசியலிற்கான ஓய்வு மணிகள் அதிகளவு இளைஞர்களினால் அடிக்கப்படுகிறது. இது மூத்தவர்களிற்கு சரியாக விளங்குகிறது. ஆனால் இந்த மூத்த அரசியல் வாதிகளின் அனுபவம் இலகுவாக முறியடித்துவிடுகிறது. அதில் இளைஞர்கள் இலகுவாக வீழ்ந்து விடுகின்றனர். இதில் பல்கலைகழக மாணவர்கள் ஏராளம். மாடு கேட்டு நிற்போர் கோழி கொடுத்ததும் அடங்கி விடுகின்றனர். இவர்களிற்கும் பிடிமானம் ஏதும் தேவைப்படுகிறது. இவர்கள் கூட ஒரே தடவையில் எல்லாம் பெறவேண்டும் என்று நினைப்போராகினர். இன்றய மாநகர சபை உறுப்பினர் தர்சானந் கூட மூத்த அரசியல் வாதிகளின் அனுபவத்தில் அடங்கி போனவரே. தற்போதைய மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனனின் நடவடிகை சிறப்பாக இருக்கிறது. இது இவ்ர்களின் இன்றய தேவை. அது அரசியல் நோக்கியது அல்ல. இதுவே இவர் அரசியலில் ஏதும் தாக்கம் செலுத்தலாம் என இவருக்கு ஏதும் எலும்புகள் நிறம் தீட்டி காட்டப்படலாம். அதில் வீழ்வதும் வீழாமல் ஒரு அதிரடியாக அனைவரையும் தம் பக்கம் வரவழைத்து மக்களிற்கு ஏதும் செய்யலாம். இவர்களின் வேகம் விவேகம் எலும்பு துண்டுகளால் உடைவதுதான் வேதனை. தற்போதைய தலைவருடன் விலைபோவது குறைவடைந்தால் நிட்சய...

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

அரசியல் இருப்பே முக்கியம் எனும் இவர்கள் யாருக்கும் வித்தியாசம் தெரியாது தவிக்கும் மக்கள் ஏமாளிகளே. எப்போது சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றும். இங்கு இந்த வீடியோ காட்சி அவரை மட்டுமில்லை. பலருக்கு காரணமாகும். பேரின வாதிகளின் கூட்டு இன்றி எதனை செய்ய முடியும்

திட்டமிட்டு உடைக்கப்படும் வீடு???

Image
வீடு திட்டமிட்டு உடைக்கப்படுகிறதா?? இல்லா தமிழ் மக்களின் அசமந்த போக்காலா??? அதைவிட அரசியல் வாதிகளின் சுய நலபோக்கு, அரசியல் இருப்பு இப்படி ஏதுமா?? இந்த காரணங்கள் வெளிப்படையாக தெரிந்தாலும் இவை போதும் வீடு உடைவதற்கு. இன்னும் ஓர் இரு தேர்தல்களில் அதன் உச்சம் அதிகமாகும். இந்த வீட்டை ஏன் உடைக்கவேண்டும் உடைப்பதன் பலன் என்று பார்த்தால் பேரிபவாதிகளிற்கு இது மிக அவசியம். இவ்வீடு உடையும் போதே பேரினவாதிகள் இலகுவாக தமிழர் தாயகத்தில் இலகுவாக வெற்றி கொள்ள முடியும். விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட இந்த வீடு மக்கள் தற்போது புலிகளிற்காவே வாக்களிக்கின்றனர். இதுதான் யதார்த உண்மை. இந்த உண்மை புரிந்த பேரினவாத கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து தமிழ் தலைவர்கள் பிரபலமானோர் ஆகியோரை பாவித்தே இந்த காய் நகர்த்தல் இடம் பெறுகிறது. அதற்குள்தான் சி.வி விக்கினேஸ்வரன், சுமந்திரன் பகடைக்காய்களாகினர். இவர்கள் இருவரும் ஒன்றிணைவு மிக அவசியம் என்பதோடு காலத்தின் தேவை. இந்த வீடு உடையும் பட்ட்சத்தில் சைக்கிள் பயணிக்கும். வீடு உடையும் தறுவாயில் சைக்கிளின் எழுச்சி பெரும் தலையிடி பேரினவாதிகளுக்கு. வீட்டை உடைப்போருக...

அரசியல் சரிவை நோக்கி கட்சி.

Image
அரசியல் சரிவு என்பது வெறும் அறிக்கைகளும் பத்திரிகை செய்திகளும் அதனைவிட தத்தமது ஆதரவாளர் இணையத்தளங்களும், எதிர்தரப்பு சரிவு என புழுகி தள்ளினாலும் தேர்தலில் பொய்பிக்கபடுவதையே அவதானிக்கின்றோம். இச்செயற்பாடுகள் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்றும் நோக்கவேண்டும். துரோகி என்றும், பயங்கர வாதிகள் என்றும் கூறியும் தமது வாக்கு வங்கியில் சிறிய ஒரு இழப்பை சந்தித்த கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் சாதிக்கவேண்டிய கட்டாயம் இருக்கு. அதற்கு தீனி போடுவது போல் அமைந்தது ஆனந்தராசாவின் பேச்சு. உண்மை பொய்க்கு அப்பால் மக்கள் தமது கடவுளை பற்றி எது கூறினாலும் ஏற்க தயாரில்லை. சரிவை நிமிர்ந்த எப்பாடு எந்த பாடவது படுவோர் இதனை பெரிது படுத்த பின் நிற்கபோவதிக்லை. யார் மக்களின் துயரம் துடைப்பார்கள். அரசியல் தீர்வு கிடைக்குமா?? சட்டம் இடம் கொடுக்குமா?? இல்லா கேந்த்திர வர்தக நாடுகள்தான் இடம் கொடுக்குமா??? எல்லாம் பொறுத்திருப்பது என்பதை விட மக்கள் ஆணை மாறவேண்டும்.

மாகண சபையிலும் கோட்டை விடுவார்களா???

Image
ஆம் பிரதேச சபை தேர்தலில் கோட்டை விட்டவர்கள் மாகாண சபையில் என்ன செய்வார்கள். புதிய அணி என முன்வருவோர் கூட கோட்டை விட வைப்பார்களா?? பலரது அரசியல் இருப்புக்கு புலிகளும் அவர்களது அற்பணிப்புமே காரணமாகிறது. இத்தோடு பாதிக்கப்பட்ட மக்களும் அதிகம். இவர்கள் எல்லோரும் தத்தமது எண்னத்தில் சண்டை போட்டு கனிந்து வருவதை வெம்ப வைக்கும் நிலையில் இருப்பதே வேதனை. இவர்கள் ஏமாற்றுவது தெரிந்தும் மக்கள் ஏன் சரியான பாடத்தை படிப்பிக்கவில்லை. ஏன் கோட்டை விடுகின்றனர். என்ன காரணம் ஏன் இலங்கை இந்திய தமிழர்கள் மாற்றம் பெறது பயணிக்கின்றனர். கோட்டை விட்டுவிட்டு புலம்பி திரிந்து மீண்டும் அதே பிழையை அதே போல விட்டுவிட்டு கலங்குகின்றனர். மாகண சபையிலும் இதே கோட்டை விட்டால் இவர்களின் நிலை கவலைக்கிடமே. எல்லாம் மக்கள் கையிலேயே இருக்கிறது. அரசியல் வாதிகளின் சரியான பாதைக்கு மக்களின் தீர்ப்புல்தான் இருக்கிறது. இந்த மாகாண சபையிலாவது தெளிவுடன் தீர்மானிக்கா விட்டால் பதவி ஆசையுள்ளோர் அறிக்கையுடலுடன் காலத்தை வீணடிப்பார்கள். எனவே மீண்டும் மீண்டும் தவறிழைக்காது யாரு எப்போ தேவை என்பதை சரியாக தீர்மானித்து தம்மை மக்கள் காப்ப...