Posts

படித்தோரும் பணம் படைத்தோரும் முட்டாள்களே

Image
இலகுவில் ஏமாறும் நிலையில் படித்தோரும், செல்வந்தருமே இலங்கையில் இருக்கிறார்கள். இது சாத்தியமான உண்மை. இங்கு இவர்களே எந்த ஒரு விடய்த்திலும் தம்மை முதலில் புகுத்துவார்கள். அதில் ஒன்று பிரமிட்டில் முதலில் புகுந்து இன்று திக்குமுக்காடி போயுள்ளனர். நாய் இறைச்சி, மருத்து உணவு, கடைச்சாப்பாடு (உண்மை, பொய் வேறு) மாட்டுவோர் இவர்களே. ஏழைகளுக்கு இது எட்டாக்கனிதான். ஏன் 5000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு பசியோடு திரும்பி வரும் முட்டாள்தன அறிவு படைத்தோர்கள் இவர்கள். இப்படி எல்லாம் முட்டாள்தனமாக வாழ்வோர் புத்திசாலி என வேடம் உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் கொண்டு ஆடம்பரமின்றி வாழ்வோர் ஏழைகள். இவர்கள் முட்டாள்தமான குளிரூட்டிகளை கூட பாவிப்பதில்லை. அவர்கள் பீட்சா, kfc சிக்கன் ஏதும் உண்பது கூட இல்லை. தமது பணத்தை வேறு யாருக்கும் கௌரவம் என்ற பெயரில் வழங்காதோர். கிளப் என்று சொல்லி அமெரிக்காக்கு பணம் அனுப்பும் படித்த செல்வம் படைத்த முட்டாள்களும் உண்டு. அதிகம் ஏமாறும் இவர்கள் நல்லவர்கள் சுயமாக வாழ்வோரை பார்த்து சிரிப்பதே வேடிக்கை. இவர்கள் முட்டாள்தனம் இன்னும் அதிகம்.

முகனூலில் என்னென்னெ எல்லாம் செய்யலாம்.

Image
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு தேவையில்லாத தேவையான ஒன்றே முகநூல். இதில் சுய தம்பட்டம் போடும் பலர் இதனால் உழைக்க அல்லது தமது இலட்சிய கனவுகளை வெளிக்கொணரலாம் என்பதை அறியாதுள்ளனர். #அறிவிப்பாளர் ஆகவேண்டும் எனும் ஆசையுடையோர் லைவ் ஓடியோ மூலம் அல்லது லைவ் வீடியோ மூலம் தமது திறமையை வெளிக்கொணர முடியும். இந்த நவடிக்கையை பலர் இன்று மேற்கொள்கின்றனர். #கவிஞர். #கவிதை எழுதும் திறன் இருந்தால் ஒரு #முகனூல் கவிஞ்ராக தோன்றி பின் நூல் வெளியிட உங்கள் ரசனையாளரின் உதவியை நாடலாம். இவ்வாறு பலர் வளர்ந்திருக்கிறார்கள். #வியாபாரம். விளம்பரப்படுத்தலுக்கு மிக முக்கிய தளம் இதுவே. விளம்பர முகவராக கூட பயணிக்கலாம். இதற்கு வீடியோ எடிற்றிங், போட்டோ எடிற்றிங்  போன்றவை தெரிந்தால் போதும். இவ்வாறு என்ன திறமையோ அதனை வளர்த்து கொள்ள முடியும். கட்டுறை எழுத்தாளர், புகைப்பட கலைஞ்ர், இதர துறைகளில் முகனூல் ஊடாக வெளிவந்து பணம் சம்பாதிக்கும் உயர்மட்ட கலைஞாக ஒரு முக்கிய நபராக வெளியுலகிற்கு காட்ட முடியும். எதனையும் சாதக நிலையறிந்து பயன்படுத்தினால் வெற்றி நிட்சயமே.

தேர்தல் வரப்போவுதா... அறிகுறி தெரிகிறதா

Image
எந்த ஒரு விடயம் என்றாலும் அந்த விடயம் நடப்பதற்கு சில அறிகுறிகள் தென்படும். இயற்கை தோற்றபாடு என்றாலும் செயற்கை தோற்ற பாடு என்றாலும். அந்த வகையில் இலங்கையில் தேர்தலுக்கான அறிகுறி என்ன. எப்படி தெரிகிறது அதனை கூர்ந்து பார்த்தால் நகைச்சுவைகள் அதிகரிக்க தொட க்கிவிட்டன. சம்மந்தம் ஐயா ரணிலை மிரட்டுவது போலும். மகிந்த ஜனாதிபதிக்கே சவால்விடுவதும் இதற்கான ஆதாரங்கள். சுமந்திரன் ஐயா கிராமம் தோறும் பயணிப்பதும். ஏனைய பாரளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது இயலளவுக்குள் நின்று ஒன்று திரட்டுவதும் அறிகுறி. இதற்கு ஏற்ப ஜனாதிபதி, பாரளுமன்ற, மாகாணசபை தேர்தல் என்பன இழுபறியில் இருப்பது எல்லோருக்கு. மிகுந்த சங்கடம். மக்களை ஏமாற்ற படு பிரயத்தனம் நடப்பதும் இதனை மக்கள் எங்கனஙம் தீர்பதென்பதுமே தீர்வு. பொறுப்போம் அளிப்பொஇம் வாக்கு

நிர்வாகம் என்றால்..

Image
ஆம் நிர்வாகம் என்றால் என்ன??? பலர் படித்திருப்பர் சிலர் படிக்காமல் மேற்கொள்வர் இப்படி பல விதங்களில் இடம்பெறும். நிர்வாகி எப்போதும் நிறுவன வளர்ச்சி சார்ந்தும் அதன் பயன்பெறுவோர் சார்ந்தும் செயற்ட வேண்டும். நிறுவன ஊழியர்கள் நலன் சார்ந்தும் யோசிக்கவேண்டும். அப்போதே வெற்றி உச்சம் தொடும். ஆனால் சிலர் தமது உயர்ச்சிக்கும் தற்புகழ்ச்சிக்குமே நிறுவனத்தை பயன்படுத்தும் நிலை வந்திருக்கு என்றால் நிறுவனம் தவறான நிலைக்கு நிதி வழங்குனரே காரணம். நல்லதொரு பெயரோடு பயணிக்கும் நிறுவனம் கீழ்த்தரமான ஒருவரிடம் சென்று அல்லல் படுவதை பார்த்து உண்மையில் அந்த நிறுவனத்திற்கா உழைத்தோர் வேதனைப்படுவார்கள். குடும்ப சண்டை, எதிரிகளை பழிவாங்கல், த்ம்மை முந்துவோரை நீக்குதல், என இந்த சுயநல வாதிகள் தமது செயற்பாட்டை மேற்கொள்வர். இதில் திறமையானோர் இலகுவில் மாட்டி விடுவர். ஏன் எனில் அவர்கள் காக்கா பிடிக்க, வாழி வைக்க தெரியாது. தமது திறமையை மட்டும் நம்புவதால் இந்த நிலை. ஆ உச்சரிக்க தெரியாதவன் அறிவிப்பு பற்றியும் விளங்கப்படுத்துவான். இதுவே இன்று பல நிறுவனங்கள் சரிய காரணம். திறமையற்றோர் ஒவ்வொரு குழுவை பிடித்...

13_வருட_உறுதிப்படுத்தப்பட்ட_கல்வி_நிகழ்ச்சித்_திட்டம்

#13_வருட_உறுதிப்படுத்தப்பட்ட_கல்வி_நிகழ்ச்சித்_திட்டம் இம்முறை G.C.E(O/L) 2017 பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்படவுள்ளது, அது இம்முறை O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2018/2020 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை( உ+ம்:- தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உ...

தமிழனின் மூளையில் இலங்கை.

Image
சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டு எல்லோருமே ஏங்கித்தவித்த போது அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பெருமை தமிழ்தேசிய கூட்டமைபிற்கே என்றால் மிகையாகது. அதிலும் ஒவ்வொரு வளக்கிலும் முன்னின்று பேசி வெற்றி பாதையில் நடத்திய சுமந்திரன் பெருவெற்றி தலைவனேதான்.  இந்த வழக்கை தொடுக்க முடியும் என்றும் வெற்றியீட்ட முடியும் என்றும் ஆலோசனை வழங்கி வளி நடத்தவும் ஒரு சட்டவாளர் இருக்கார் என்றால் அதுவும் தமிழன் என்றால் தமிழிற்கு பெருமைதான். இந்த இடத்தில் ஒவ்வொரு தமிழனும் பெருமை படவேண்டியது. ஆனால் சேர் பொன் இராமநாதன் நடந்ததைப்போல் நடந்து கொள்ளாவிட்டால் தமிழின் பெருமை இன்னும் உச்சமே. அதில் சுமந்திரனின் ஆளுமை தங்கியிருக்கிறது. மீண்டும் வரலாறு ஆக கூடாது

கொழும்பு குழப்பம் யாருக்கு சாதகம்.

Image
கொழும்பு குழப்பம் யாருக்கு சாதகம் என்று கேட்டால் நிட்சயமாக சிறு அரசியற்கட்சிகளுக்கும் சிறுபான்மை யினருக்குமே. இன்று நடக்கும் இந்த அதிகார போட்டி மிகவும் ஒரு கீழ்த்தரமான முடிவெடிக்க தெரியாத தலைமைகள் என்பையும் சுட்டி நிற்கிறது. இந்த வேளை புலம்பெயரும் ஆசை கொண்டோரும் புலம்பெயர்ந்து நிரந்தர தீர்வின்றி இருப்போருக்கும் இது நெஞ்சில் பால் வார்த்திருக்கும். அதேவேளை #சீனா, ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளிற்கும் இதில் மிகுந்த வெற்றியும் கூட. இவ்வாறு இந்த நிலை சென்றால் இலங்கையில் தமிழரல்ல ஏழை பௌத்த சிங்கள மக்கள் கூட வாழமுடியாது போய் ஊமைகள் வாழும் நாடாக மாறும். இங்கு ஆட்சியாளர்களாக வருவோர் நாட்டின் அபிவிருத்தியை பார்பதை விடுத்து மன்னராட்சி போல் தம் சுயத்தை வளர்க்கிறார்கள். #வெளிநாடு செல்வோர் கனவு நிறைவேறட்டும். அங்காவது குடில் போட்டு தமிழன் வாழ்ட்டும்.