14/01/2018

தேர்தலும் சாவீடுகளும்

இந்த தேர்தல் மக்களை ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் மாறாக பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் போல் உள்ளது.

கட்சி தலமைகளிற்கு தமது அணி வெற்றி பெற்றால் சரி. அவகள் சாவீடு சென்றாலென்ன சாதி பற்றி கூட்டம் போட்டாலென்ன.

எல்லாம் தலைமைக்கு கட்சி வெற்றிதான் முக்கியம். இத்தேர்தலில் சாதியம் பற்றிய கருத்துக்களும் அள்ளி வீசப்படுகின்றன. 

இந்திய சினிமா பாணிபோல் சாதிக்கு ஓட்டு போடு என்ற நிலை இத்தேர்தலில் மறைமுக விளம்பரமாகும்.

இதனை எல்லா சாதியமும் கண்டும் கானமல் இருக்கின்றனர் பதவி மோகத்தில். இதுவே விருச்சாமாகும் என மாகாணசபை உறுப்பினர் ஒருவரே கவலைப்பட்டார். தாய்முலை திருடியும் தான்வாழ புத்தி என்பது உண்மையே.

08/01/2018

தமிழ் மக்கள் ஓட்டு அரசியல் யாப்புக்கே.



தமிழ் மக்கள் அரசியல் யாப்புக்கே வாக்களிக்கவேண்டும் என்ற கருத்து பட அதன் பேச்சாளர் m.a. சுமந்திரன் கூறியுள்ளார்.

இந்த புதிய அரசியல் யாப்பை ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் இதனை விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் இருக்காது எனவும் த.தே. கூ கூறுகின்றது.

ஆனால் ஏனைய கட்சிகள் இந்த யாப்பு தமிழ் மக்களுக்கு சலுகைகள் குறைவு என்றும் இதனை நிறைவேற்ற விட்டால் தமிழ் மக்களும் சிறுபான்மை இனமும் வாழ்வது கடினம் என கூறப்படுகிறது.

எப்படி ஆயினும் மக்கள் ஒரு குழப்ப நிலையில் இருக்கின்றனர். இதற்கு சரியான விளக்கத்தை வேட்பாளர்களும், சட்டவாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களுமே விளக்கவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தெரிவிலேயே தங்கி இருக்கிறது.

த.தே.கூ வென்றால் ஏனைய கட்சிகள் இனிவரும் காலங்களில் ஆணவத்துடனும் த.தே.ம.முன்னணி வென்றால் த.தே.கூ  கொஞ்சம் இறங்கி வேலை செய்ய வேண்டியும் வரும்.

02/01/2018

கட்சிக்கா வேட்பாளருக்கா??

இது விசித்திரமான கேள்வி. கட்சியை விட வேட்பாளருக்கு வாகளிக்கலாமா மக்கள் கேள்வி ஆதங்கம் ம்ம் அளிக்கலாம்.

இது பிரதேச சபை தேர்தல். பிரதேச கிராமமட்ட அபிவிருத்திக்கி முடிந்த அளவு ஆளும் கட்சிகள் வெற்றி பெற்றால் அபிவிருத்தியடைய வாய்ப்புகள் அதிகம்

கட்சியை விடவும் எம்மக்கள் விரும்பமாட்டார்கள். நின்மதி அபிவிருத்தி இன்றி போனாலும் தன்மானம் விடமாட்டார்கள்.

இதனை உள்ளூராட்சி தேர்தலிலும் மக்கள் புகட்டுவர். எல்லாம் மக்கள் கைகளில். அபிவிருத்தி கட்சிக்கா ஊள்ளூராட்சி கிராமங்களிற்கா

01/01/2018

குழப்புறாரா இல்லா எதிர்கின்றாரா உண்மைகள் சில மாதங்களில்.

பிடித்தால் சேயா மற்றும் கொமன்ற் போடவும். கொமற் குலுக்கலில் வெற்றி பெற்றால் பரிசினை பெறல்லாம்.

 தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நாளும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யார் வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் தேர்தல் காலங்களில் விக்கி ஐயா பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவார்.

அதனால் தமிழரசு கட்சி ஏக்கத்திலும் ஏனைய கட்சிகள் கொண்டாட்டத்திலும் மிதக்கும்.

இவர்கள் அனைவரும் எதிர்பார்பதற்கு மேலாக மக்கள் தீர்ப்பை மாற்றி விடுவர். எதிர்பார்த்து பார்த்து தோல்வியடைந்தோரில் சைக்கிள் கட்சி அதிகமா உள்ளது.

தற்போதைய நிலையிலும் மக்கள் மாற்று கட்சியை விரும்புகின்றனர். அதன் தாகம் வெளிப்படுமா என்ற நிலையில் விக்கி ஐயாவின் கருத்துக்கள் வீட்டுக்கு பெரும் தலையிடியே.
இதனை எல்லாம் தேர்தலின் பிந்தான் பார்க்க வேண்டும்.

இக்கருத்துக்கள் பலித்தால் விக்கி ஐயா பெரியவராவர். பலிக்காவிட்டால் வீடு ஆணவத்தின் உச்சம் செல்லும்.
மக்களை யாரும் காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகலாம்.
அடுத்த கட்டுரை படிம அரசியல்.

29/12/2017

யாழ் மாநகர சபையை இழக்குமா வீடு.




யாழ் மாநகர சபைக்கு யார் மேஜர் என்பது பலரின் கேள்வி. யாருக்கு ஓட்டு போடுவது என்பது மற்றய கேள்வி.

விடை கிடைக்குமா?? எல்லாம் 11 திகதி மக்களின் தீர்ப்பில்தான். ஆனால் மா நகத சபை தேர்தலில் த.தே.கூ அமைப்பு வெல்லும் நிலை காணப்பட்டாலும் எதிரணியினரும் பலமான வேட்பாளர்களை இறக்கியுள்ளது

த.தே.ம. பேரவையில் மணிவண்ணன் தலமையில் பலமாக உள்ளது.

அடுத்த நிலையில் இலங்கை சுதந்திர கட்சி ஊரில் மதிப்பு மிக்க ஊரில் வேலை செய்யும் மக்கள் மத்தியில் உலாவுவோரையும் நிறுத்தி உள்ளது.

இது நிட்சயம் வீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். மக்களும் வீட்டில் விரக்தி உற்று இருப்பதும் பெரும் இழப்பே ஆகும்.

அதைவிட ஊடகங்கள் ஏனைய கட்சிகள்ளுக்கு கொடுக்கும் ஆதரவும் அதிகம்.

சமூக வலைத்தளங்களும் தாக்க தவறவில்லை. இதை எல்லாம் எப்படி சமாளித்து வீடு உருப்பெறும் என்பதே கிளைமாக்ஸ்.


28/12/2017

பருத்தித்துறை தொகுதியில் மண் கௌவுவாரா.


பருத்தித்துறை தொகுதி வட அரசியலில் பேசப்படுகின்ற இருவருக்கான முக்கிய தொகுதி.

அத்தொகுதியில் தம்மை நிலை நிறுத்துவது மிகவும் அவசியம். அதனால் இருவருக்கிடையிலான செயற்பாடுகள் தீவிரமாக இருக்கிறது.

சுமந்திரன் மற்றும் கயேந்திரகுமார் ஆகியோருக்கிடையிலானது. இங்கு தமது இருப்பை தக்கை வைப்பது என்பது மிக அவசியம்.

சுமந்திரன் உள்ளூராட்சியில் வடமராட்சி கிழக்கில் தனது பலத்திற்காக பலரை இறக்கி இருக்கிறார். அவர்கள் மீது தெரிவு செய்யப்படாத சிலர் அதிதிருப்தியில் உள்ளனர்.

கயேந்திரகுமார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் மீதும், வேட்பாளர் கனவுள்ளோரையும் இறக்கி உள்ளார்.

சுமந்திரன் மீதான வெறுப்பும் கயேந்திரகுமார் வெல்ல சாத்தியப்படலாம்.

யார் மன் கௌவுவது என்பது அந்த அந்த உள்ளூராட்சி வேட்பாளர் கைகளிலேயே.

தமது தலையை காக்க சிறப்பாக செயற்படவேண்டும்.

27/12/2017

தமிழரசு கட்சிக்கு ஆபத்தா


தமிழரசு கட்சிக்கு ஆபத்தா. எல்லோரும் ஆபத்து என்றே கருதுகின்றனர். ஆனால் அதற்கும் மீறி பலம் கூடவும் வாய்பு அதிகம்

விக்கி ஐயா எதிராக பேசுவதும் சம்மந்தர் ஐயாவை மகிந்த பார்த்ததும் குழப்பத்தை ஏற்படுத்தும் என சிலர் எண்ணுகின்றனர்.

எல்லாம் மீறி வீடு பலம் அடைவதை யாராலும் தடுக்க முடியாமல் இருக்கும்.

அதன் போது பிரிந்தவர்கள் கூட மனதிற்குள் ஏங்கும் நிலை வரும்


இது உள்ளூராட்சி தேர்தல் என்பதால் வீடு பலம் குன்றலாம். விக்கி ஐயாவின் பிரிவு தாக்கமாக அமையப்போவது இல்லை என்பதும் கண்கூடாகும்

எல்லாம் காத்திருந்தே பார்க்கவேண்டும்.

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...