Posts

யாழ் மாநகர சபையை இழக்குமா வீடு.

Image
யாழ் மாநகர சபைக்கு யார் மேஜர் என்பது பலரின் கேள்வி. யாருக்கு ஓட்டு போடுவது என்பது மற்றய கேள்வி. விடை கிடைக்குமா?? எல்லாம் 11 திகதி மக்களின் தீர்ப்பில்தான். ஆனால் மா நகத சபை தேர்தலில் த.தே.கூ அமைப்பு வெல்லும் நிலை காணப்பட்டாலும் எதிரணியினரும் பலமான வேட்பாளர்களை இறக்கியுள்ளது த.தே.ம. பேரவையில் மணிவண்ணன் தலமையில் பலமாக உள்ளது. அடுத்த நிலையில் இலங்கை சுதந்திர கட்சி ஊரில் மதிப்பு மிக்க ஊரில் வேலை செய்யும் மக்கள் மத்தியில் உலாவுவோரையும் நிறுத்தி உள்ளது. இது நிட்சயம் வீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். மக்களும் வீட்டில் விரக்தி உற்று இருப்பதும் பெரும் இழப்பே ஆகும். அதைவிட ஊடகங்கள் ஏனைய கட்சிகள்ளுக்கு கொடுக்கும் ஆதரவும் அதிகம். சமூக வலைத்தளங்களும் தாக்க தவறவில்லை. இதை எல்லாம் எப்படி சமாளித்து வீடு உருப்பெறும் என்பதே கிளைமாக்ஸ்.

பருத்தித்துறை தொகுதியில் மண் கௌவுவாரா.

Image
பருத்தித்துறை தொகுதி வட அரசியலில் பேசப்படுகின்ற இருவருக்கான முக்கிய தொகுதி. அத்தொகுதியில் தம்மை நிலை நிறுத்துவது மிகவும் அவசியம். அதனால் இருவருக்கிடையிலான செயற்பாடுகள் தீவிரமாக இருக்கிறது. சுமந்திரன் மற்றும் கயேந்திரகுமார் ஆகியோருக்கிடையிலானது. இங்கு தமது இருப்பை தக்கை வைப்பது என்பது மிக அவசியம். சுமந்திரன் உள்ளூராட்சியில் வடமராட்சி கிழக்கில் தனது பலத்திற்காக பலரை இறக்கி இருக்கிறார். அவர்கள் மீது தெரிவு செய்யப்படாத சிலர் அதிதிருப்தியில் உள்ளனர். கயேந்திரகுமார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் மீதும், வேட்பாளர் கனவுள்ளோரையும் இறக்கி உள்ளார். சுமந்திரன் மீதான வெறுப்பும் கயேந்திரகுமார் வெல்ல சாத்தியப்படலாம். யார் மன் கௌவுவது என்பது அந்த அந்த உள்ளூராட்சி வேட்பாளர் கைகளிலேயே. தமது தலையை காக்க சிறப்பாக செயற்படவேண்டும்.

தமிழரசு கட்சிக்கு ஆபத்தா

Image
தமிழரசு கட்சிக்கு ஆபத்தா. எல்லோரும் ஆபத்து என்றே கருதுகின்றனர். ஆனால் அதற்கும் மீறி பலம் கூடவும் வாய்பு அதிகம் விக்கி ஐயா எதிராக பேசுவதும் சம்மந்தர் ஐயாவை மகிந்த பார்த்ததும் குழப்பத்தை ஏற்படுத்தும் என சிலர் எண்ணுகின்றனர். எல்லாம் மீறி வீடு பலம் அடைவதை யாராலும் தடுக்க முடியாமல் இருக்கும். அதன் போது பிரிந்தவர்கள் கூட மனதிற்குள் ஏங்கும் நிலை வரும் இது உள்ளூராட்சி தேர்தல் என்பதால் வீடு பலம் குன்றலாம். விக்கி ஐயாவின் பிரிவு தாக்கமாக அமையப்போவது இல்லை என்பதும் கண்கூடாகும் எல்லாம் காத்திருந்தே பார்க்கவேண்டும்.

சுனாமி தாக்கத்தை ஈடு செய்ய முடியுமா?

Image
உள் நாட்டு போரின் தாக்கத்தை சீர் செய்ய முடியாமல் திணறும் காலத்தில் 13 வருடம் சென்றும் மக்கள் மறக்கவில்லை. வட கிழக்கு பகுதியில் மக்கள் உறவுகள் உடைமைகளுடன் சொந்த இடத்தையும் விட்டு அகலும் நிலைக்கு இந்த சுனாமி ஏற்படுத்தியது. மக்கள் தமது தன்னம்பிக்கை உட்பட அனைத்தையும் இழக்க வைத்து கையேந்த வைத்தது. இந்த சுனாமி நலனோன்பும் நிறுவனங்கள் வர காரணமாகவும் இருந்தது. அவற்றி உதவி எம்மை தமது முழு கட்டிப்பாட்டில் கொண்டு வந்தது. எம்மை எமது விரல் கொண்டு குத்தும் படி எமது தகவல் தரவுகளை சேகரித்தது. எல்லாவற்றுக்கும் காலம் வரும் வரை காத்திருந்து எமது போரை அழித்தது. எமது இனத்தை தட்டி தடுமாற வைத்தது. இஎல்லாம் எமது மக்கள் இழக்கவும் வைத்தது வெறும் 5 வருடங்களில். யுத்தத்தால் உலக நாடுகளே அழித்த போது இந்த சுனாமியும் உதவியது என்பது மிகவும் கொடுமை.  எமது மக்களை இயற்கையும் கொன்று எம்மக்களுக்கு இயக்கையும் எதிராக இருந்திருக்கிறது.

இவை நடக்குமா? தேர்தலின் பின்

Image
#உள்ளூராட்சி #மன்றங்களால்  #மக்களுக்கு வழங்ககூடிய  #சேவைகள்... 01 .பொதுச் சுகாதாரம் 02 .திண்மக் கழிவகற்றல் 03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும் 04. வடிகாழமைத்தல் பராமரித்தல் 05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல் 06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும் 07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் 08.இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும் 09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் 10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும். 11. கிராமிய நீர் விநியோகம் 12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல் 13. தீயணைப்பு சேவைகள் 14. முன் பள்ளிகளை உருவாக்குதலும் பராமரித்தலும் 15. தாய் சேய் நலப்பணி 16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும் 17. தொற்று நோய் தடுத்தல் 18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும் 19. தொல்லைகளைத் தவிர்த்தல் 20. பெண்கள் அபிவிருத்தி 21. கிராமிய மின்சாரம் வழங்கல் 22. வீடமைப்புத் திட்டம் 23. கல்வித் தளபாடங்கள் 24.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல் 25. கால்நடை பன்ணைகளை நடாத்துதல் 26. அறநெறிப்

தேர்தலால் பாடம் புகட்ட முடியுமா??

Image
வருகின்ற உள்ளூராட்சி தேர்தலால் பாடம் புகட்ட முடியுமா. மக்கள் புகட்டுவரா. ஏன் புகட்டவேணும் வரும் தேர்தல் மக்கள் அரசின் செயலுக்கு துணை போவோருக்கு பாடம் புகட்டவேண்டிய நேரம் என இளவயதினர் புலம்புவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அதுவும் தமிழரசு கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவே. பிக்குவின் தகனமும், த.தே.கூ அறிக்கைகளும் அதிகமாகவே தாக்கியிருக்கிறது. இளவயதினர் மாறுவது போல் முதியோரும் மாற்றம் விரும்பினால் பெட்டிப்பாம்பாக அவர்கள் மக்கள் நலன் சார்ந்து பேசுவர் என கற்றோர் எதிர்வுகூறுகின்றனர். த.தே.கூ எதிர் அணி ஒன்று அவசியம் என்பதும் மிக முக்கியம் எனவும் முணுமுணுப்பதை அவதானிக்கலாம். பாடம் கற்குமா தமிழரசு கட்சி. மீண்டெழுமா த.தே.ம.முன்னணி

பிக்குவின் தகனம் உள்ளூராட்சியில் மோசமான தாக்கம்.

Image
பிக்குவினது உடலை முற்றவெளியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி தேர்தலில்படு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்கம் தமிழரசு கட்சிக்கே அதிகம்  தமிழரசு கட்சி எதிர்கட்சியாக உள்ளபோதும் ஒரு டம்மியாகவே உள்ளது. மக்களின் கோபத்தை அதிகமாக்கி இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தலில் இதன் பிரதிபலிப்பு அதிகமாகும். இதனால் இக்கட்சி மிகமோசமாக தோல்வியடைய வைக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவத் கூறியிருக்கிறார். இச்செயற்பாடு இளவயதினரை பெரிதும் பாதித்திருக்கிறது. அவர்களின் இரத்த துடிப்பில் தமிரழசு கட்சி விளையாடியிருக்கிறது. மக்கள் மாற்று தெரிவை தமது வாக்களிப்பில் கொடுத்து தமிழரசு கட்ட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழ் தேசிய முன்னணியின் வடமராட்சி செயற்குழு உறுப்பினர் தமது உரையாடலில் குறிப்பிட்டார்.