தீர்கதரிசியின் வார்தை விளங்காதவர்களா??
இந்த உலகம் மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை . ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுய நலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை, என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிர்ணயிக்கின்றன. ஆகையால் எமது போராட்டம் தார்மீக அறத்தினை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரிகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மேதகு வே.பிரபாகரன். இதனை எப்பவோ சொல்லியிருந்தும் மக்கள் ஏமாற்றும் இயல்புடையோரை நம்புகின்றனரா? இல்லை வேறு தெரிவின்றி வாழ்கின்றனர். அதனை பயன்படுத்தியே இவர்கள் தமது அரசியலை நடத்துகின்றனர். ஒவ்வொரு நாடும் தமது தேசிய சுய நலத்திற்காக ஒன்றிணைந்தன. தமிழரின் போரை அழித்தன. தமிழரே உதவினர். தற்போது சேந்து ஒழித்த நாடுகள் தமது இருப்பிற்காக தமிழரை நாடுகின்ற போது அரசியல் வாதிகள் சுகபோகம் அனுபவிக்கின்றனர். கொத்து குண்டு போட்டாலும் அணுகுண்டு போட்டாலும் தமது தேசிய பொருளாதாரத்திற்கு பலன் இல்லாவிட்டால் யார் செத்தாலும் ஏனைய நாடுகளிற்கு எந்த சிக்கலும் இல்லை. இதனை தமிழினத்தின் தலைவர் ஒருசில வார்த்தைகளில் உலகின் தன்மையை சொல்லியிருக்கிறார். இனியாவது ...